அதிமுக முன்னாள் எம்.பி. சேலம் பி.கண்ணன் காலமானார்
சேலம்: அதிமுக முன்னாள் எம்.பி. சேலம் பி.கண்ணன் (78) உடல் நலக் குறைவால் வெள்ளிக்கிழமை காலமானார்.
சேலம், சூரமங்கலம் பகுதியைச் சேர்ந்த பி.கண்ணன். எம்.ஜி.ஆருடன் ஏற்பட்ட நட்பின் காரணமாக அதிமுகவில் தன்னை இணைத்துக்கொண்டு பணியாற்றினார். எம்.ஜி.ஆரின் விசுவாசத்தைப் பெற்ற அவர், 1977-ஆம் ஆண்டு மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்டு, எம்.பி. ஆனார். 1980 -ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் சேலம் தொகுதியில் போட்டியிட்டு வெற்றி வாய்ப்பை இழந்தார்.

1984-ல் நடைபெற்ற மக்களவைத் தேர்தலில் திருச்செங்கோடு தொகுதியில் போட்டியிட்டு வெற்றி பெற்றார். அதிமுகவில் பல்வேறு பொறுப்புகளை வகித்த கண்ணன், எம்.ஜி.ஆர். மறைவுக்குப் பிறகு, ஜெயலலிதாவுக்கு ஆதரவாக இருந்து வந்தார்.
மேலும், ஜெயலலிதா பேரவையைத் தொடங்கக் காரணமாக இருந்தார். பின்னர், அதிமுகவில் இருந்து விலகி திமுக மற்றும் தமிழ் மாநில காங்கிரஸ் கட்சியில் சேர்ந்தார். பின்னர் மீண்டும் அதிமுகவில் இணைந்தார்.
இந்நிலையில், கடந்த சில நாள்களாக உடல் நலக் குறைவால் பாதிக்கப்பட்டிருந்த பி.கண்ணன், கோவையில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவர் வெள்ளிக்கிழமை மாலை 3 மணி அளவில் காலமானார்.
இவருக்கு ஈஸ்வரி என்ற மனைவியும், சுதா மற்றும் ப்ரியா என்ற மகள்களும் உள்ளனர். இவரது இறுதிச் சடங்கு சனிக்கிழமை காலை 11 மணிக்கு மேல் மரவனேரி பகுதியில் உள்ள காக்காயன் மின் மயானத்தில் நடைபெற உள்ளது.
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
74 வருட மர்ம சரித்திரம் தகர்கிறதா? திமுக ஜெயிச்சிடும் போல.. கடல் நகரத்தில் அதிமுக அசுர வேட்டை! சபாஷ் -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ் -
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம்












Click it and Unblock the Notifications