For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Oneindia App Download

அக்னி நட்சத்திரம் இன்று விடை பெறுகிறது.... வெயிலின் தாக்கம் மேலும் 3 நாள் நீடிக்கும்

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் இன்றுடன் விடைபெறுகிறது. அதேநேரத்தில் மேலும் 3 நாட்களுக்கு வெயிலின் தாக்கம் அதிகம் இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.

தமிழகத்தில் அக்னி நட்சத்திரம் எனப்படும் கத்திரி வெயில் காலம் கடந்த 4-ந் தேதி தொடங்கியது. சென்னை, வேலூர், கடலூர் உள்பட தமிழகத்தின் பெரும்பாலான நகரங்களில் முதல் 13 நாட்களும், கடைசி 9 நாட்களும் 100 டிகிரிக்கு மேல் சுட்டெரித்த கத்திரி வெயில் காலம் இன்றுடன் விடைபெறுகிறது.

Agni Natchathiram ends today

இருப்பினும் கடந்த சில நாட்களாக கோடைமழையும் கொட்டி கத்திரி வெயிலுக்கு ஓய்வு கொடுத்தது. சென்னையில் அதிகபட்சமாக கடந்த 26-ந் தேதி 106.16 டிகிரி வெயில் பதிவானது.

கத்திரி வெயில் இன்று விடை பெற்றாலும், வெயிலின் தாக்கம் வரும் 3 நாட்கள் கூடுதலாக இருக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

மேலும் தமிழகத்தில் வெப்ப சலனம் காரணமாக நேற்று காலை 8.30 மணியுடன் முடிவடைந்த கடந்த 24 மணி நேரத்தில் விருதுநகர் மாவட்டம் சாத்தூரில் 5 செ.மீட்டர் மழையும், சிவகங்கை மாவட்டம் மானாமதுரையில் 3 செ.மீட்டர் மழையும், திருப்புவனத்தில் 2 செ.மீட்டர் மழையும், ஈரோடு மாவட்டத்தில் 1 செ.மீட்டர் மழையும் பெய்துள்ளது.

English summary
Peak summer season Kathiri or Agni Natchathiram ends in Tamil Nadu today.
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X