வெள்ள நிவாரணம்: கருணாநிதியுடன் சேர்த்து 30000 பேர் வாங்க மறுப்பு
சென்னை: வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், நிவாரணத்திற்கான கணக்கெடுப்பு, ஓரளவு முடிந்துள்ள நிலையில், திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட 30 ஆயிரம் பேர், தங்களுக்கு நிவாரணம் வேண்டாம் என்று மறுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
தமிழகத்தில், வடகிழக்குப் பருவமழை தாமதமாக தொடங்கினாலும் கடந்த நவம்பர் 8ம் தேதி முதல் தீவிரமடைந்தது. நவம்பர் 23ம் தேதி பெய்த கனமழையாலும், நவம்பர் 30முதல் டிசம்பர் 2ம் தேதி காலைவரை விடாமல் பெய்த பேய் மழையாலும், சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், கடலுார் மாவட்டங்கள் வெள்ளத்தில் மூழ்கின. ஆற்றங்கரையோர குடிசைகள் மட்டுமல்லாது சென்னையில், நகர் பகுதிகளிலும் அடுக்கு மாடி குடியிருப்புகளில், முதல் மாடி வரை தண்ணீர் புகுந்தது; மக்களின் ஒட்டுமொத்த உடைமைகளும் மூழ்கின.
இந்நிலையில், குடிசைகளை இழந்தோருக்கு, 10 ஆயிரம் ரூபாய், நிரந்தர வீடுகளில் வசித்து, வெள்ள பாதிப்புக்கு ஆளான குடும்பங்களுக்கு, 5,000 ரூபாய் வழங்கப்படும் எனவும் இது, பாதிக்கப்பட்டோரின் வங்கிக் கணக்கில் வரவு வைக்கப்படும் என்றும் தமிழக அரசு அறிவித்துள்ளது. மேலும் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட அனைவருக்கும், 10 கிலோ அரிசி, வேட்டி, சேலை வழங்கப்படும்' எனவும் தமிழக அரசு கூறியுள்ளது.

வெள்ள நிவாரண கணக்கெடுப்பு
அரசின் உத்தரவைத் தொடர்ந்து நான்கு மாவட்டங்களிலும், கணக்கெடுப்பு பணி நடந்து வருகிறது. சென்னையில், 11.5 லட்சம் பேர் உட்பட, நான்கு மாவட்டங்களிலும், 26 லட்சம் பேர் பாதிக்கப்பட்டதாக தெரிய வந்துள்ளது. சென்னையில் கணக்கெடுப்பு பணி முடிந்த நிலையில், திருவள்ளூர், காஞ்சிபுரம், கடலுார் மாவட்டங்களிலும் இறுதி கட்ட கணக்கெடுப்பு நடந்து வருகிறது.
|
கருணாநிதி வீட்டில் வெள்ளம்
சென்னை மாநகரமே வெள்ள நீரால் சூழப்பட்டு தனித்தீவாக காட்சி அளித்தது. இதில், பெரும் பணக்காரர்கள், சினிமா நடிகர்கள் வீடுகளும் பாதிக்கப்பட்டன. தி.மு.க. தலைவர் கருணாநிதி வீடும் இதில் இருந்து தப்பவில்லை. சென்னை கோபாலபுரத்தில் உள்ள தி.மு.க. தலைவர் கருணாநிதியின் வீட்டுக்கும் களப்பணியாளர்கள் வெள்ள பாதிப்பு குறித்து தகவல் சேகரிக்க சென்றிருக்கின்றனர்.

வெள்ள நிவாரணம் வேண்டாம்
அப்போது அங்கிருந்தவர்கள், களப்பணியாளர்களை கருணாநிதி வீட்டிற்குள் அனுமதிக்கவில்லை. ஆனால் அங்கு வாயிலில் இருந்த காவலர்கள், இது குறித்து கருணாநிதி மற்றும் அவரது குடும்பத்தினரிடம் கூறுவதாக கூறி உள்ளே சென்று இருக்கின்றனர். சிறிது நேரத்திற்கு பின் அந்த காவலர்கள் திரும்பி வந்து களப்பணியாளர்களிடம், இந்த வீட்டுக்கு வெள்ள நிவாரணத் தொகை வேண்டாம் என்று கூறி களப்பணியாளர்களை திருப்பி அனுப்பி இருக்கின்றனர்.

பாதிக்கப்படாத பகுதிகளில் கணக்கெடுப்பு
சென்னையில், திருவல்லிக்கேணி, மயிலாப்பூர் உள்ளிட்ட பல பகுதிகளில், பெரிதாக வெள்ள பாதிப்பு இல்லை. இந்த பகுதிகளிலும், அடுக்கு மாடி வீடுகளில் உள்ளோரிடமும், கணக்கெடுப்பு அதிகாரிகள் படிவத்தை கொடுத்து, விவரங்களை சேகரித்துள்ளனர். சில பகுதிகளில், 'எங்கள் பகுதியில் வெள்ள பாதிப்பு இல்லை; ஏன், கணக்கெடுக்கிறீர்கள்?' என, மக்கள் கேள்வி எழுப்பினர்.அதிகாரிகளுடன் சென்ற ஆளுங்கட்சியினர், 'தேர்தல் வருது; முதல்வர் கொடுக்கும் பணத்தை ஏன் வேண்டாம் என்கிறீர்கள்?' எனக் கூறி, படிவங்களை பூர்த்தி செய்து வாங்கினர். எனினும் ஏராளமான மக்கள் வெள்ளநிவாரணம் வேண்டாம் என்று கூறியுள்ளனர்.

வீட்டு உரிமையாளர்கள் அடாவடி
வீட்டை வாடகைக்கு விட்டால் நிவாரணத் தொகை யார் பெற வேண்டும் என்பதில் புதிய சிக்கல் உருவாகியுள்ளது. வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாடகைதாரர் படிவத்தில் நிரப்பிக் கொடுத்தால், வீட்டு உரிமையாளர் நிவாரணத் தொகையை தங்களிடம் ஒப்படைக்க வேண்டும் என்று சண்டையிடுகின்றனர். கொடுக்க மறுத்தால் வீட்டை காலிசெய்யுமாறு மிரட்டப்படுகின்றனர். இதனால் வெள்ளத்தில் பாதிக்கப்பட்ட வாடகைதாரர்கள் புலம்புகின்றனர்.

வெள்ளம் பாதித்த பகுதிகள்
சென்னை, ராமாவரம் உள்ளிட்ட பல பகுதிகளில், அதிகாரிகள் வீடுதோறும் சென்று கணக்கெடுக்கவில்லை. அதிகாரி ஓரிடத்தில் அமர்ந்தபடி, விண்ணப்பத்தை கொடுக்க, பகுதி மக்கள் விண்ணப்பத்தை பூர்த்தி செய்து கொடுத்துள்ளனர். சில இடங்களில், ஒரே வீட்டில், ரேஷன் கார்டை வைத்து குடும்ப தலைவர் பெயரில், ஒரு விண்ணப்பமும்; 'ரேஷன் கார்டு இல்லை' எனக் கூறி, ஆதார் அட்டை, வாக்காளர் அடையாள அட்டை வைத்து, மகன், மகள் பெயரில் கூடுதல் விண்ணப்பங்களும் மற்றும் வங்கிக் கணக்கு எண்களும் கொடுத்துள்ளனர். வங்கிக் கணக்கு எண்ணை வைத்து, அனைவருக்கும் நிவாரண நிதி கொடுக்கப்பட உள்ளதா என்ற கேள்வி எழுகிறது. இப்படிப்பட்ட சிக்கலை எப்படி கையாள்வது என, வருவாய்த் துறை அதிகாரிகள் தவித்து வருவதாக கூறப்படுகிறது.
-
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
500 கோடி விஜய்.. 5 கோடி ஸ்டாலின்.. இரண்டு பேரில் யார் பணக்காரர்கள்? யாருக்கு அதிக கடன்? மினி அலசல்! -
அண்ணாமலை போட்ட அந்த ஒரு கண்டிஷன்.. ஆடிப் போன டெல்லி மேலிடம்.. பிம்ப அரசியல் உடைகிறதா? இனி என்னாகும் -
பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மீனா கேட்ட கேள்வி.. பாண்டியனின் எதிர்பாராத முடிவு.. சரவணன் நிலைமை? செம சம்பவம் -
ஆரணியில் கால் வைத்த மகாலட்சுமி.. 75 வருட ரூல்ஸை உடைத்து திமுக முதல்முறை சாதனை.. அதிரும் திருவண்ணாமலை!












Click it and Unblock the Notifications