ஜெ. மரணம் குறித்து நீதி விசாரணை: ஓபிஎஸ் அறிவிப்புக்கு மு.க.ஸ்டாலின் வரவேற்பு
ஜெயலலிதா மரணம் தொடர்பான நீதி விசாரணையை வரவேற்பதாக திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
சென்னை: ஜெயலலிதா மரணம் குறித்து நீதி விசாரணை நடத்தப்படும் என்ற முதல்வர் ஓ. பன்னீர்செல்வம் அறிவிப்புக்கு திமுக செயல் தலைவரும் எதிர்க்கட்சித் தலைவருமான மு.க.ஸ்டாலின் ஆதரவு தெரிவித்துள்ளார்.
ஜெயலலிதா மரணத்தில் மர்மம் இருப்பதாக தொடர்ந்து குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்படுகின்றன. இந்த நிலையில் ஜெயலலிதாவுக்கு சிகிச்சை அளித்த லண்டன் மருத்துவர் ரிச்சர்ட் பியால் உள்ளிட்டோர் சென்னையில் திடீரென செய்தியாளர்களை சந்தித்து ஜெயலலிதாவுக்கான சிகிச்சை குறித்து விளக்கம் அளித்தனர்.

ஆனாலும் ஜெயலலிதா மரணம் குறித்த மர்மங்கள் விலகவில்லை. இந்த நிலையில் சென்னையில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய முதல்வர் ஓ.பன்னீர்செல்வம், ஜெயலலிதா மரணம் தொடர்பாக உச்சநீதிமன்ற நீதிபதியைக் கொண்டு விசாரணை கமிஷன் அமைக்கப்படும் என அறிவித்தார்.
இது தொடர்பாக சென்னை கோபாலபுரத்தில் செய்தியாளர்களிடம் பேசிய மு.க.ஸ்டாலின், முதல்வர் ஓ. பன்னீர்செல்வத்தின் அறிவிப்பு வரவேற்புக்குரியது. காலம் தாழ்ந்த அறிவிப்பாக இது இருந்தாலும் முறைப்படி செய்வார்கள் என எதிர்பார்க்கிறேன் என்றார்.
-
கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!! -
ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
தவெக கூட்டத்தில் மதுபாட்டில் வீச்சு.. சிக்கிய 2 பேர்.. யார் இவர்கள்? போலீஸ் சொன்ன ஷாக் தகவல்












Click it and Unblock the Notifications