கொளுத்தும் வெயில்.. தமிழ்நாட்டில் நடத்த 2 முக்கிய விஷயம்..!!
சென்னை: தமிழ்நாட்டில் கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், மின்சார தேவையும் உயர்ந்துள்ளது. இதே நேரத்தில், சோலார் மின்சார உற்பத்தியும் வேகமாக உயர்ந்து வருகிறது.
பொதுவாகவே வெளியில் காலத்தில் மின்சார தேவை அதிகம் இருக்கும், இக்காலக்கட்டத்தில் போதுமான சப்ளை இல்லாத போது பல இடத்தில் மின்வெட்டு வரும். மின்வெட்டு குறிப்பாக தொழிற்சாலைகளை கடுமையாக பாதிக்கும். இத்தகைய சூழ்நிலையில் புதுப்பிக்கத்தக்க மின்சாரம் பெரிய அளவில் கொடுக்கும்.

தமிழ்நாட்டில் சோலார் பேனல் அமைக்கப்பட்டுள்ள அளவு அதிகரித்துள்ள காரணத்தால் மின்சார உற்பத்தி அதிகரித்து மின்பற்றாக்குறை பிரச்சனையை குறைத்துள்ளது. ஒருப்பக்கம் மின்சார சேவை அதிகரிப்பு, மறுபுறம் சோலார் மின்சாரம் அதிகரிப்பு என இந்த இரட்டை மாற்றம், தேர்தல் காலத்தில் மின் விநியோகத்தில் பெரிய தடை இல்லாமல் மின்சார தேவையை நிர்வகிக்க உதவும் என இத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
வெப்பநிலை உயர்வும் - மின்சார தேவையும்
கோடைக்கால வெப்பநிலை உயர்வால், ஏர் கண்டிஷனர், கூலர்கள், பேன் போன்ற குளிரூட்டும் சாதனங்களின் பயன்பாடு அதிகரித்துள்ளது. மேலும், சில பகுதிகளில் LPG பற்றாக்குறை காரணமாக, இன்டக்ஷன் அடுப்புகள் பயன்படுத்துவதும் அதிகரித்துள்ளது. இதன் விளைவாக, மாநிலம் முழுவதும் மின்சார தேவையில் தொடர்ந்து உயர்ந்து வருகிறது.
சோலார் மின்சார உற்பத்தியில் சாதனை
தமிழ்நாடு மின் பகிர்மானக் கழகம் வெளியிட்ட தரவுகளின்படி, மார்ச் 24 அன்று 54.8 மில்லியன் யூனிட் (MU) மற்றும் மார்ச் 27 அன்று 55.6 MU சோலார் மின்சாரம் மாநிலத்தில் விநியோக வலையில் சேர்க்கப்பட்டுள்ளது. இது, ஆகஸ்ட் 20, 2025 அன்று பதிவு செய்யப்பட்ட 53.9 MU என்ற முந்தைய சாதனையை அதிகமாகும்.
இந்த சாதனை, கோடைக்கால உச்சநிலை நிலை அடைவதற்கு முன்னதாகவே பதிவாகியிருப்பது குறிப்பிடத்தக்கது. மார்ச் 24 மற்றும் 27ஆம் நாட்களில், சோலார் மின்சாரம் மாநிலத்தின் மொத்த மின்சார பயன்பாட்டில் சுமார் 13% பங்கை வகித்ததுள்ளது கூடுதல் பலத்தை தேர்த்துள்ளது.
மாதாந்திர உற்பத்தி வளர்ச்சி
மத்திய மின்சார கழகம் வெளியிட்டுள்ள தரவுகளின்படி, இந்த ஆண்டு பிப்ரவரி மாதத்தில் தமிழ்நாடு 1,745.24 MU சோலார் மின்சாரம் உற்பத்தி செய்துள்ளது. இது கடந்த ஆண்டு அதே காலத்துடன் ஒப்பிடுகையில் 40.18 MU அதிகமாகும்.
மின்சார பயன்பாட்டில் புதிய உச்சம்
சமீபத்திய தரவுகளின்படி, தமிழ்நாட்டில் ஒரு நாளில் மின்சார பயன்பாடு அளவு 423.887 MU ஆக உயர்ந்து, இந்த கோடை காலத்தின் அதிகபட்ச அளவாக பதிவு செய்யப்பட்டுள்ளது. கடைசியாக ஏப்ரல் 30, 2024 அன்று 454.32 MU என்ற உச்சநிலை இருந்தது. இந்த ஆண்டு கோடைக்காலத்தில் உச்சத்தில் அந்த அளவை தாண்டும் வாய்ப்பு இருப்பதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இதன் மூலம் கோடை காலத்தில் மின்தேவை சோலார் மின்சார உற்பத்தி அதிகளவில் பூர்த்தி செய்யும். இதேவேளையில் பிற மாநிலத்தில் இல்லாத பலம் தமிழ்நாட்டுக்கு காற்றாலை மின்சார உற்பத்தியிலும் உள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications