Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

ஆசை நாயகிகளுடன் நீராவி முருகன் போட்ட கும்மாளம்..!

Subscribe to Oneindia Tamil

சென்னை: சென்னை ஆசிரியையிடம் பட்டாக்கத்தியைக் காட்டி 10 பவுன் நகைகளைப் பறித்துச் சென்று நீண்ட தேடலுக்குப் பின்னர் சிக்கியுள்ள ரவுடி நீராவி முருகன் குறித்த பல்வேறு பரபரப்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

தூத்துக்குடி மாவட்டம் புதியம்புத்தூரை சேர்ந்த நீராவி முருகன் சிறு வயதில் இருந்து குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்ததால், திருமண வாழ்க்கையும் அவனுக்கு கசப்பானதாகவே மாறிவிட்டது.

தாயும், தந்தையும் இறந்து விட்ட நிலையில், மனைவி மற்றும் 2 குழந்தைகளுடன் தூத்துக்குடி வந்த நீராவி முருகனை விட்டு குழந்தைகளுடன் மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதன் பின்னரே நீராவி முருகன் குற்றச்செயல்களில் ஈடுபடுவது அதிகரிக்கத்தொடங்கியுள்ளது.

அருணா கொலை வழக்கு

அருணா கொலை வழக்கு

தூத்துக்குடியில் கடந்த 2011ம் ஆண்டு தி.மு.க. பிரமுகர் ஏ.சி.அருணாவை கொலை செய்த வழக்கில் போலீசாரால் தேடப்பட்டு வந்த நீராவி முருகன், சென்னையில் பதுங்கி இருந்தான். பின்னர் அந்த ஆண்டில் மே மாதம் ஜார்ஜ்டவுன் கோர்ட்டில் சரண் அடைந்த அவன், பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டான்.

வழிப்பறி, பூட்டை உடைத்து திருடுவது

வழிப்பறி, பூட்டை உடைத்து திருடுவது

பின்னர் ஜாமீனில் வெளிவந்த அவன் தூத்துக்குடி மற்றும் நெல்லையில் வழிப்பறி, பூட்டை உடைத்து வீடுகளில் கொள்ளையடிப்பது உள்ளிட்ட குற்றச்செயல்களில் ஈடுபட்டு வந்தான்.

ஊரைக் காலி செய்தான்

ஊரைக் காலி செய்தான்

இந்த நேரத்தில் எதிர் கோஷ்டியினர் நீராவி முருகனை தீர்த்துக்கட்ட திட்டம் தீட்டினர். இதனால் உயிருக்கு பயந்து ஊரை காலி செய்த அவன் கடந்த 2013-ம் ஆண்டு சென்னையில் வந்து பதுங்கினான்.

சென்னையில் கைவரிசை

சென்னையில் கைவரிசை

இங்கு பல இடங்களில் கைவரிசை காட்டிய அவன், காஞ்சிபுரத்தில் வசித்து வரும் தனது நண்பன் அப்பாத்துரையுடன் சேர்ந்தும் குற்றச்செயல்களில் ஈடுபட்டான். 2 பேரும் சேர்ந்து காஞ்சீபுரம், திருவள்ளூர், சென்னை உள்ளிட்ட பகுதிகளில் செயின் பறிப்பு, வீடு புகுந்து கொள்ளையடிப்பது போன்ற செயல்களில் ஈடுபட்டனர்.

கோவில்பட்டிக்கு பயணம்

கோவில்பட்டிக்கு பயணம்

இந்த நேரத்தில் கோவில்பட்டியில் தொழில் அதிபர் ஒருவர் தனது வீட்டில் யானை தந்தத்தை பதுக்கி வைத்திருப்பதாக நீராவி முருகனுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அவன் சென்னையில் இருந்து தனது கூட்டாளி அப்பாத்துரையுடன் கோவில்பட்டிக்கு சென்றான்.

கார் கடத்தல்

கார் கடத்தல்

அங்கு தொழில் அதிபரை சந்தித்து பேசிய 2 பேரும் நீங்கள் யானைத்தந்தம் வைத்திருக்கும் விஷயத்தை போலீசில் சொல்லி காட்டி கொடுத்து விடுவோம் என்று கூறி பணம் கேட்டு மிரட்டினர். தொழில் அதிபர் பணம் கொடுக்க மறுத்ததால் அவரது ‘மாருதி ஷிப்ட்' காரை சென்னைக்கு கடத்தி வந்து விட்டனர். இதையடுத்து நீராவி முருகனை பிடிக்க கோவில்பட்டி போலீசார் சென்னை வந்தனர்.

கோயம்பேட்டிலிருந்து தப்பினான்

கோயம்பேட்டிலிருந்து தப்பினான்

அப்பாத்துரையை கைது செய்த போலீசார் அவனை வைத்து நீராவி முருகனை பிடிக்க திட்டமிட்டனர். கோயம்பேட்டில் வைத்து அவனை சுற்றி வளைத்த போது போலீசாரை தாக்கி விட்டு தப்பிய அவன் அதன்பின்னர் போலீசில் பிடிபடவே இல்லை.

ஒட்டிக் கொண்ட புதுக் கூட்டாளி

ஒட்டிக் கொண்ட புதுக் கூட்டாளி

இதன்பிறகு தனது புதிய கூட்டாளியாக தூத்துக்குடியை சேர்ந்த அரிகிருஷ்ணன் என்பவனை சேர்த்துக்கொண்டு நீராவி முருகன் செயின் பறிப்பில் ஈடுபட்டு வந்தான். வடபழனி, மடிப்பாக்கம், துரைப்பாக்கம் போன்ற பகுதிகளில் தனியாக நடந்து சென்ற பெண்களை மடக்கி கத்தியை காட்டி மிரட்டி செயின் பறிப்பில் ஈடுபட்டுள்ளான்.

ஆசிரியை வேலத்திடம் கைவரிசை

ஆசிரியை வேலத்திடம் கைவரிசை

இந்த நிலையில்தான் கடந்த மாதம் 19-ந்தேதி துரைப்பாக்கத்தில் ஆசிரியை வேலத்திடம் செயின் பறித்த நீராவி முருகன், கல்லூரி மாணவி ஒருவரின் செல்போன் கேமராவில் சிக்கினான்.

ஆந்திரத்து ஆசை நாயகிகள்

ஆந்திரத்து ஆசை நாயகிகள்

முருகன் ஏதாவது ஒரு பகுதியில் கொள்ளை சம்பவத்தை அரங்கேற்றி முடிந்ததும் நேராக ஆந்திர மாநிலம் காளகஸ்தி பகுதிக்கு சென்று விடுவான். அங்கு ஆந்திர மாநில அழகிகளுடன் உல்லாசமாக இருப்பதை வழக்கமாக கொண்டிருந்தான்.

ஆசை நாயகியுடன் குடித்தனம்

ஆசை நாயகியுடன் குடித்தனம்

அப்போது ஆந்திர பெண் ஒருவருடன் நீராவி முருகனுக்கு பழக்கம் ஏற்பட்டது. அவரை ஆசை நாயகியாக வைத்துக் கொண்ட அவன் காளகஸ்தியில் எருப்பேடு என்ற பகுதியில் வசித்து வந்திருப்பதும் விசாரணையில் தெரிய வந்துள்ளது.

அழகி வீட்டில் தஞ்சம்

அழகி வீட்டில் தஞ்சம்

சென்னை துரைப்பாக்கத்தில் ஆசிரியை வேலத்திடம் செயினை பறித்த பின்னர் நேராக ஆந்திராவுக்கு சென்று கள்ளக்காதலியின் வீட்டில் தான் நீராவி முருகன் தங்கி இருக்கிறான்.

ஊருக்கு வந்தபோது சிக்கினான்

ஊருக்கு வந்தபோது சிக்கினான்

பின்னர் அங்கிருந்து கேரளா சென்று விட்டு நெல்லை மாவட்டத்துக்கு வந்துள்ளான். அங்கு நண்பர்களின் வீட்டில் தஞ்சம் அடைந்திருந்தபோதுதான் போலீசில் சிக்கிக் கொண்டான்.

70 செல்போன்கள்

70 செல்போன்கள்

போலீசில் மாட்டிக்கொள்ளாமல் இருப்பதற்காக நீராவி முருகன், அடிக்கடி செல்போன் நம்பர்களையும், செல்போனையுமே மாற்றியுள்ளான். 70 செல்போன்களையும், ஏராளமான சிம்கார்டுகளையும் அவன் பயன்படுத்தி இருக்கிறான்.

திண்டுக்கல்லிலும் கைவரிசையாம்

திண்டுக்கல்லிலும் கைவரிசையாம்

3 கொலை வழக்குகளில் தொடர்புடைய அவன், திண்டுக்கல் மாவட்டத்திலும் கைவரிசை காட்டியுள்ளான்.

சென்னையில் 20 பெண்களிடம்

சென்னையில் 20 பெண்களிடம்

சென்னையில் மட்டும் சுமார் 20 பெண்களிடம் நீராவி முருகன் செயின் பறிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்று போலீசார் சந்தேகிக்கிறார்கள். நெல்லை, தூத்துக்குடி, சென்னை, திண்டுக்கல், காஞ்சீபுரம், திருவள்ளூர் மாவட்டங்களை சேர்ந்த 55 பெண்களிடம் அவன் செயின் பறிப்பில் ஈடுபட்டிருக்கலாம் என்று தனிப்படை போலீசார் தெரிவித்தனர்.

குகன், ஜோசப்

குகன், ஜோசப்

யாருக்கும் சந்தேகம் வராமல் இருப்பதற்காக தனது ஊரில் இருந்து வந்து சென்னையில் தங்கி படிக்கும் கல்லூரி மாணவர்களின் அறையில் போய் தங்குவதை நீராவி முருகன் வழக்கமாக வைத்துள்ளான். குகன், ஜோசப் என விதவிதமான பெயர்களையும் வைத்துக்கொண்டு நீராவி முருகன் ஏமாற்றி வந்திருக்கிறான்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+