Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சூப்பர் "சுயம்பு"... திரிஷ்யம் மொத்த வசூலின் பாதியை 3 நாளில் அள்ளியது பாபநாசம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கமல்ஹாசனின் பாபநாசம் வசூல் மழையில் குளித்துக் கொண்டுள்ளதாம். இதன் மூலப் படமான மோகன்லாலின் திரிஷ்யம் படம் மொத்தமாக வசூலித்த தொகையில் பாதியை திரைக்கு வந்த 3 நாளிலேயே பாபநாசம் வசூலித்து விட்டது.

நல்ல கதையை மையமாக வைத்து கமல்ஹாசன் நடிக்கும் படங்கள் பெரும்பாலும் சூப்பர் ஹிட்டாகி விடும். பல படங்களை உதாரணமாக காட்டலாம்.

நல்ல கதையோடு, கமல்ஹாசனின் உயிரோட்டமான நடிப்பும் இணைந்து அந்தப் படத்தை வேறு தளத்திற்குக் கொண்டு போய் விடும். பாபநாசம் லேட்டஸ்ட் உதாரணம்.

சூப்பர் சுயம்புலிங்கம்

சூப்பர் சுயம்புலிங்கம்

பாபநாசம் படத்தைப் பார்த்தவர்கள் வாயாரப் பாராட்டி வருகிறார்கள். மூலப் படமான திரிஷ்யத்தை விட மிகச் சிறப்பாக வந்திருப்பதாக பாராட்டுகிறார்கள். பல இடங்களில் மோகன்லாலை கமல்ஹாசன் மிஞ்சி விட்டார் என்ற பாராட்டுகளும் குவிகின்றன.

மோகன்லாலை ஓவர் டேக் செய்த கமல்

மோகன்லாலை ஓவர் டேக் செய்த கமல்

மோகன்லாலின் உடல் மொழியை பல இடங்களில் கமல்ஹாசனின் உடல் மொழி ஓவர் டேக் செய்வதையும் காண முடிவதாக ரசிகர்கள் கூறுகிறார்கள்.

வசூல் மழை

வசூல் மழை

திரை விமர்சகர்களின் பாராட்டுகளைக் குவித்து வரும் அதே நேரத்தில் வசூலிலும் அசத்தி வருகிறது பாபநாசம். திரைக்கு வந்த 3 நாட்களில் இப்படம் ரூ 25 கோடி வசூலைத் தொட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றண.

3 நாட்களில் ரூ. 25 கோடி

3 நாட்களில் ரூ. 25 கோடி

சமீப காலத்தில் முதல் 3 நாட்களிலேயே ரூ. 25 கோடியைத் தொட்ட முதல் படம் என்ற பெருமையும் பாபநாசத்திற்குக் கிடைத்துள்ளது.

ஒரிஜினலை விட சூப்பர்

ஒரிஜினலை விட சூப்பர்

ஒரிஜினல் திரிஷ்யம் படம் திரைக்கு வந்த முதல் எட்டு நாட்களில் வெறும் 6.7 கோடியை மட்டுமே உலக அளவில் வசூலித்தது.

மொத்த வசூலில் பாதி இப்போதே

மொத்த வசூலில் பாதி இப்போதே

மேலும் 150 நாட்கள் ஓடிய திரிஷ்யத்தின் மொத்த வசூல் ரூ. 55 கோடியாகும். ஆனால் அதில் கிட்டத்தட்ட பாதியை இப்போதே வசூலித்து விட்டது பாபநாசம். பாபநாசம் தற்போது தொட்டுள்ள வசூலானது, திரிஷ்யம் 50 நாட்கள் கழித்துத் தொட்ட தொகையாகும்.

அமெரிக்காவிலும் சாதனை

அமெரிக்காவிலும் சாதனை

அமெரிக்காவில் இப்படம் ஜூலை 2ம் தேதி முதல் இதுவரை ரூ. 1.72 கோடியை வசூலித்துள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இது பெரிய சாதனையாக கருதப்படுகிறது.

ரூ. 100 கோடி வருமா?

ரூ. 100 கோடி வருமா?

திரையிட்ட அனைத்து இடங்களிலும் அரங்கு நிறைந்த காட்சிகளாக பாபநாசம் ஓடி வருவதால் வசூலும் அமோகமாகவே உள்ளது. இதே நிலை நீடித்தால் இப்படம் ரூ. 100 கோடியை வசூலிக்கலாம். அப்படி வசூலித்தால், எந்தவிதமான ஆர்ப்பாட்டமும் இல்லாமல் திரைக்கு வந்து 100 கோடியை வசூலித்த முதல் கமல் படம் என்ற பெருமை இதற்குக் கிடைக்கும்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+