மெரினாவில் போலீஸ் குவிப்பு: போராட்டக்காரர்கள் மீது தடியடி.. பதற்றம் !
சென்னை மெரினா கடற்கரையில் ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக கட்டுக்கடங்காத இளைஞர்கள் கூடியுள்ளதால் பாதுகாப்புக்காக போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.
சென்னை: ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக மெரினா கடற்கரையில் போராட்டம் நடத்திவரும் இளைஞர்கள் மீது போலீசார் திடீர் தடியடி நடத்தினர். இதனால் சிறிது நேரம் அங்கு பதற்றம் நிலவியது.
ஜல்லிக்கட்டுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் வெகுண்டெழுந்துள்ள மாணவர்கள், இளைஞர்கள் ஆங்காங்கே போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர். சென்னை மெரினாவில் நடைபெற்று வரும் போராட்டம் தீவிரமடைந்து வருகிறது. கடந்த 2 நாட்களாக இரவு பகல் பாராது இளைஞர்கள், மாணவர்கள், பொதுமக்கள், பெண்கள், குழந்தைகள் என பல தரப்பினரும் தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

அமைதியாக அறவழியில் சென்று கொண்டிருந்த போராட்டத்தில் இன்று இரவு 8 மணிக்கு திடீரென போலீசார் அதிகளவு குவிக்கப்பட்டனர். சாலையில் கூடியிருந்தவர்கள் மீது லத்தியால் போலீசார் லேசான தடியடி நடத்தினர். இதில் காவலர் மற்றும் போராட்டக்காரர்கள் சிலர் காயம் அடைந்துள்ளனர்.
போலீசார் மீது தண்ணீர் பாட்டில்கள் வீசியதால் தடியடி நடத்தப்பட்டதாகவும், வேடிக்கை பார்க்க வந்தவர்களை அப்புறப்படுத்தும் போது லேசான தடியடி நடத்தியதாகவும் போலீசார் கூறுகின்றனர். அமைதியாக போராட்டம் நடத்தினால் காவல்துறை உரிய பாதுகாப்பை அளிக்கும் என தெரிவித்துள்ளது.
போராட்டத்தில் ஈடுபட்டுள்ள இளைஞர்கள் காமராஜர் சாலைக்கு வரவேண்டாம் எனவும் அறிவுறுத்தியுள்ளனர். எனினும், மாணவர்கள் மற்றும் இளைஞர்கள் அமைதியான வழியில் போராட்டத்தை தொடரலாம் என்று போலீசார் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பல்வேறு பகுதிகளில் இருந்து மெரினாவுக்கு ஏராளமான இளைஞர்கள் படையெடுத்து வருவதால் தொடர்ந்து பதற்றம் நிலவுகிறது.
-
15 out of 16: சென்னை மாவட்டத்தில் எத்தனை தொகுதிகளில் திமுக போட்டி? சத்யராஜ் மகளுக்கு சீட் இல்லை! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
சென்னை மாணவி தடா அருவிக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
வைத்திலிங்கம் வயிற்றில் பாலை வார்த்த ஸ்டாலின்! திமுகவுக்கு ஜம்ப்பான 5 பேருக்கு சீட்! யார் அவர்கள்? -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
தமிழ் புத்தாண்டு பலன்: எச்சரிக்கையாக இருக்க வேண்டிய 3 ராசிகள்.. உங்க ராசி இருக்கா பாருங்க -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா?












Click it and Unblock the Notifications