For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

சீமானின் நாம் தமிழர்கட்சியில் பண்பாட்டு மீட்புக்காக “வீரத்தமிழர் முன்னணி” - நாளை உதயம்!!

By Mathi
Google Oneindia Tamil News

சென்னை: இயக்குநர் சீமானின் நாம் தமிழர் கட்சியில் பண்பாட்டு மீட்புக்காக வீரத் தமிழர் முன்னணி என்ற அமைப்பு உருவாக்கப்பட்டுள்ளது. இதன் தொடக்க விழா நாளை பழனியில் நடைபெற உள்ளது.

இது தொடர்பாக நாம் தமிழர் கட்சி தலைமை நிலையம் வெளியிட்டுள்ள அறிக்கை:

பண்பாட்டு புரட்சி இல்லாது, அரசியல் புரட்சி வெல்லாது என்பதை நடுகல் மரபினராகிய நாங்கள் நன்கு உணர்ந்திருக்கிறோம். இயற்கை வழிபாட்டை கொண்ட தமிழர் நாம் உலகப் பொதுமறையாம் திருக்குறளே எமது மறை; எங்கள் வழி வள்ளுவம்; எங்கள் வழிபாடு இயற்கை; எங்கள் தெய்வங்கள் முன்னோர்கள் என்ற நெறியின் படி..

Seeman

பெரும்புகழ் இறையோன் முருகன், வாழ்வியல் நெறிகட்டி வள்ளுவப் பெருந்தகை, தமிழ்மொழி இலக்கணம் கண்ட தொல்காப்பியர், மகத்துவம் பொருந்திய மாமுனி அகத்தியர், அறம் முழங்கிய ஔவை பாட்டி, நீதியின் வடிவம் கண்ணகி, வழிபாட்டு வழிகாட்டி அய்யா வள்ளலார், ஆன்மிகமும் அறிவியலும் கற்பித்த ஆசான் திருமூலச் சித்தர்,

அய்யா வழி வைகுந்தர், பெருமைமிகு கிருபானந்த வாரியார், மதிப்புமிகு குன்றக்குடி அடிகளார் உள்ளிட்டோரைக் குறியீடுகளாகக் கொண்டும், எங்கள் இனம் காக்க போராடிய கரிகாற்சோழன், அருண்மொழிச்சோழன், அரசேந்திர சோழன், பூலித்தேவன், தீரன் சின்னமலை, வேலு நாச்சியார், பண்டார வன்னியன், மருதுபாண்டியர், அழகுமுத்துக்கோன், பெரும்பிடுகு, சுந்தரலிங்கம், ஒண்டிவீரன் ஆகியோரை தெய்வங்களாக நெஞ்சில் நிறுத்தியும் வரும் தைப்பூச நாட்களில் புதிய எழுச்சிக்கு நாம் தயாராகிவிட்டோம்.

நாளை பிப்ரவரி 7 ஆம் தேதி பழனியில் தமிழ்ப் பண்பாட்டை மீட்கவும் காக்கவும் வீரத்தமிழர் முன்னணியைத் தொடங்க இருக்கிறோம். மாலை 3 மணிக்கு பழனியாண்டவர் கலை கல்லூரியிலிருந்து பேரணி தொடங்கி தேரடி வீதியில் நிறைவடைந்து தொடக்க விழா பொதுக்கூட்டம் நடைபெறுகிறது.

இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

English summary
Naam Thamizhar Party leader Director Seeman will launch new front movement for his party the name of "Veerath Thamizhar Munnani".
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X