For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

திருச்சி, மதுரை, கோவையில் மெட்ரோ ரயில், சத்துணவுடன் பால்: திமுக தேர்தல் அறிக்கை

By Karthikeyan
Google Oneindia Tamil News

சென்னை: தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவோடு பால் வழங்கப்படும் என்று திமுக தேர்தல் அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

கடந்த 2006 ஆம் ஆண்டு சட்டசபை தேர்தலில் கதநாயகனாக திகழ்ந்தது திமுக தேர்தல் அறிக்கை. அதேபோல் வரும் சட்டசபை தேர்தலில்
திமுக தேர்தல் அறிக்கையில் என்ன அம்சங்கள் இடம்பெறும் என்ற எதிர்பார்ப்பு இருந்த நிலையில் இன்று மாலை சென்னை அறிவாலயத்தில் திமுக தலைவர் கருணாநிதி தேர்தல் அறிக்கையை வெளியிட்டார்.

Trichy,madurai, kovai, metro rail project will be implement - karunanidhi

தேர்தல் அறிக்கையின் சில முக்கிய அம்சங்கள்:

தொடக்கப்பள்ளி குழந்தைகளுக்கு சத்துணவோடு பால் வழங்கப்படும்

சாலையோர மக்களுக்கு இலவச காப்பிடங்கள்.

நீர் மேலாண்மை ஆணையம் அமைக்க சட்டம் கொண்டுவரப்படும்.

2 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் 200 தடுப்பணைகள்.

வெள்ள தடுப்பு மேலாண்மைக் குழு அமைக்கப்படும்.

பணிக்காலத்தில் இறக்கும் அரசு - ஊழியர் குடும்பங்களுக்கு ரூ. 5 லட்சம் இழப்பீடு.

விண்ணப்பித்த 15 நாட்களில் ஸ்மார்ட் ரேசன் அட்டை.

ஊரக வேலைவாய்ப்பு சம்பளம் ரூ.100 லிருந்து ரூ.150 ஆக உயர்த்தப்படும்.

தனியார் நிறுவனங்களில் ஆண்டுக்கு ஒரு லட்சம் வேலைவாய்ப்பு.

மாவட்டந்தோறும் வேலை வாய்ப்பு முகாம்

பகுதி நேர கணினி, ஓவிய ஆசிரியர்கள் பணி நிரந்தரம் செய்யப்படுவார்கள்.

திருச்சி, மதுரை, கோவையில் மெட்ரோ ரயில்

திருமண உதவித்தொகை 60 ஆயிரம் ரூபாயுடன் 4 கிராம் தங்கம்.

துப்புரவு தொழிலாளர்களுக்கு மழைக்கால நிவாரணமாக 5 ஆயிரம் ரூபாய் வழங்கப்படும்.

25 லட்சம் மாணவர்களுக்கு திறன் மேம்பாட்டு பயிற்சி வழங்கப்படும்.

காஞ்சிபுரத்தில் பட்டுப்பூங்கா அமைக்கப்படும்.

ஏழை எளிய மாணவர்களுக்கு தொழில் கல்வி கட்டணத்தை அரசே ஏற்கும்.

ஒரு லட்சம் பட்டதாரிகளுக்கு சுயதொழில் தொடங்க ஒரு லட்ச ரூபாய் வழங்கப்படும்

மீண்டும் வருமுன் காப்போம் திட்டம்.

தொழில் முனைவோருக்கு நூறு நாட்களுக்குள் ஒற்றை சாளர முறையில் அனுமதி.

மாதந்தோறும் 20 கிலோ அரிசி தொடர்ந்து வழங்கப்படும்.

அனைத்து விவசாயிகளுக்கும் மும்முனை மின்சாரம் வழங்கப்படும்.

விண்ணப்பிக்கும் அனைத்து விவசாயிகளுக்கும் மின் இணைப்பு.

கிருஷ்ணகிரியில் தோட்டக்கலை பல்கலைக்கழகம். சேது சமுத்திர திட்டம் மீண்டும் செயல்படுத்த நடவடிக்கை

இலங்கையிடம் இருந்து கச்சத்தீவை மீட்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.

கடலோர மாவட்டங்கள் அனைத்திலும் கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்.

தாதுமணல், கிரானைட், அகழ்வாராய்ச்சியில் 2 லட்சம் இளைஞர்கள் பங்களிப்புடன் திட்டம்.

ஜல்லிக்கட்டு, மஞ்சுவிரட்டு, ரேக்ளா பந்தயம் நடத்த நடவடிக்கை.

எம்.ஜி.ஆர். திரைப்பட நகர் புதுப்பொலிவூட்டப்படும்.

நடிகர் சிவாஜிக்கு மணிமண்டபம்.

வழக்கறிஞர்கள் சே மநல நிதி ரூ. 7 லட்சமாக உயர்வு.

8-வது ஊதியக்குழு அமைக்கப்படும்.

English summary
Dmk election manifesto: Trichy,madurai, kovai, metro rail project will be implement - karunanidhi
 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X