பலத்தை நிரூபிக்க பகீரத பிரயத்னம்... 50 எம்எல்ஏக்களுக்கு தினகரன் குறி- எடப்பாடி கோஷ்டி அலறல்!
சென்னை: அதிமுகவின் அதிகாரப் போட்டியின் உச்சமாக தினகரன் 50 எம்.எல்.ஏக்களை வளைத்துப் போடுவதில் படுதீவிரமாக இருக்கிறாராம். தினகரன் தரப்புடன் கை கோர்த்தால் அமைச்சர் பதவி கிடைக்கும் என்கிற நம்பிக்கையில் இந்த வளைத்துப் போடும் படலம் அரங்கேறுகிறதாம்.
அதிமுக எம்.எல்.ஏக்களில் பலரும் முதல்வர் எடப்பாடி அரசின் மீது கோபத்தில் உள்ளனர். சிபாரிசு, பொதுப்பணித்துறை ஒப்பந்தம், அரசு வேலை என அமைச்சர்களை சந்திக்கச் சென்றால் உரிய மரியாதை கிடைப்பதில்லையாம்.
கூவத்தூரில் உறுதியளித்தபடி, உள்ளூர் பணிகளுக்கு உரிய கமிஷனும் வேலைகளும் கிடைக்கவில்லை. இதைப் பற்றிக் கேட்கும்போதெல்லாம், தினகரன் வரட்டும். பார்த்துக் கொள்ளலாம் என அமைச்சர்கள் பதில் கொடுத்தனர். அரசுப் பணிகளில் கிடைக்கும் பணத்தை அமைச்சர்களே எடுத்துக் கொண்டனர். கார்டனில் சசிகலா இருந்திருந்தால் அவருக்கும் ஒரு பங்கு போயிருக்கும். சிறையில் இருந்து தினகரன் வந்துவிட்டதால், அவருக்கு எந்தப் பங்கும் போய்விடக் கூடாது என்பதற்காகத்தான் அவரை ஒதுக்கி வைக்கின்றனராம்.

அமைச்சர் பதவிக்காக..
கூவத்தூர் முகாமிலேயே, ஓபிஎஸ்-ன் நிதி அமைச்சர் பதவியை தங்க.தமிழ்ச்செல்வன் எதிர்பார்த்தார். யாருக்கு எந்த துறை? என சசிகலா முடிவு செய்ததை எடப்பாடி நிறைவேற்றவில்லை. அதனால்தான், அதிருப்தி எம்.எல்.ஏக்கள் அனைவரும் ஒன்று திரண்டனர்.

ஆட்சி கவிழாது
இதனை எடப்பாடி பெரிதாக எடுத்துக் கொள்ளவில்லை. என்னுடைய ஆட்சியைக் கவிழ்த்தால், இன்னொரு தேர்தலை இவர்கள் சந்திக்க விரும்ப மாட்டார்கள் என நினைத்தார். நிலைமை வேறு மாதிரி சென்று கொண்டிருக்கிறது.

அனுதாபம் வந்துவிட்டது
திகார் சிறையில் அடைக்கப்பட்ட பிறகு, தன் மீது மக்கள் மத்தியில் அனுதாபம் வந்துவிட்டதாகக் கருதுகிறார் தினகரன். ஆட்சிக்கு எச்சரிக்கை கொடுக்கும்விதமாகவே எம்.எல்.ஏக்களை சந்தித்து வருகிறார். ஐம்பதுக்கும் மேற்பட்ட எம்.எல்.ஏக்களை வளைக்க இருக்கிறதாம் தினகரன் கோஷ்டி.

உச்சகட்ட ஆடுபுலி ஆட்டம்
தினகரன் கோஷ்டியில் ஐக்கியமானால் எப்படியும் அமைச்சராகிவிடலாம் என்ற நப்பாசையில் பலரும் தாவ தயாராகி வருகிறார்களாம். அதிமுகவில் இன்னொரு ஆடு புலி ஆட்டம் உச்சகட்டமாக நடந்தேறி கொண்டிருக்கிறது.
-
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
செங்கோட்டையனுக்கு பதில் கோபியில் பிரபு! 127 வேட்பாளர்களை அறிவித்தார் எடப்பாடி பழனிசாமி -
செக் வைத்த எடப்பாடி பழனிசாமி! அண்ணாமலை அப்செட்? தமிழக பாஜக வேட்பாளர் தேர்வு கூட்டத்தில் மிஸ்ஸிங்! -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
ஸ்டாலின் களமிறக்கும் "மிசைல்" விஐபி! அதிமுக எதிர்பார்க்கல! விஸ்வநாதனுக்கு செக்? திமுக சர்ப்ரைஸ் மூவ் -
ஓபிஎஸ்ஸுக்கு பதில்! போடியில் நாராயணசாமி! லால்குடியில் லீமா! கோபியில் பிரபு! களநிலவரம் என்ன? -
எடப்பாடி பழனிசாமி வைத்த பொறி.. சிக்கிய அண்ணாமலை.. சல்லி சல்லியாக உடைந்த பர்னிச்சர் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர்












Click it and Unblock the Notifications