Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

சபதம் போட்டு 'தாதா' முகத்தை சசிகலா காட்டியபோது நடுநடுங்கிப் போன வளர்மதி

ஜெயலலிதா நினைவிடத்தில் சபதம் போட்டு தாதா முகத்தை சசிகலா காட்டியபோது நடுநடுங்கிப் போனார் முன்னாள் அமைச்சர் வளர்மதி.

Subscribe to Oneindia Tamil

சென்னை: ஜெயலலிதா நினைவிடத்தில் சசிகலா சபதம் போட்டு தாம் பெண் தாதா என்பதை வெளிப்படுத்திய போது அருகே இருந்த முன்னாள் அமைச்சர் வளர்மதி வெலவெலத்துப் போனவராக இருந்தார்.

அதிமுகவில் போல்டான பெண்மணிகளில் ஒருவராக நெட்டிசன்களால் கலாய்க்கப்படுபவர் முன்னாள் அமைச்சர் வளர்மதி. ஜெயலலிதாவின் அதிதீவிர விசுவாசியாக தம்மை காட்டிக் கொண்டு வேப்பிலை ஆடை உடுத்துவது, மண் சோறு சாப்பிடுவது, தீச்சட்டி எடுப்பது என ஏகத்துக்கும் அலம்பல் காட்டியவர்.

சசி ஆதரவாளர்

சசி ஆதரவாளர்

ஜெயலலிதா மறைந்தபோது சகஜமான நிலையில் வளர்மதி சிரித்துக் கொண்டே இருந்தது அதிமுக தொண்டர்களை அதிர்ச்சி அடைய வைத்தது. ஜெயலலிதா மறைவுக்குப் பின்னர் தீவிர சசிகலா ஆதரவாளராக மாறிப் போனார் வளர்மதி.

பெண் தாதா

பெண் தாதா

சசிகலாவோ முதல்வர் பதவி கிடைக்காத விரக்தியில் வெறித்தனமாக ஒரு பெண் தாதாவைப் போல செயல்படுகிறார் என தமிழக காங். கமிட்டி தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் கூறியிருந்தார். அதை இன்று ஜெயலலிதாவின் நினைவிடத்தில் வெளிப்படுத்தினார் சசிகலா.

சபதம்

சபதம்

பெங்களூரு சிறைக்குப் போவதற்கு முன்னர் ஜெயலலிதா நினைவிடத்துக்கு போய் 3 முறை சமாதியில் ஓங்கி அடித்து சத்தியம் செய்து தாதாவை போலவே ஆவேசமாக சபதமெடுத்துக் கொண்டார். அப்போது யாரையோ அழிப்பேன் என்றெல்லாம் முணகினார்.

அதிர்ந்த வளர்மதி

அவரது அருகே இருகரம் கூப்பியவாறு நின்றிருந்த வளர்மதி அதிர்ச்சியில் உறைந்து குலைநடுங்கியவராக சசிகலாவையே பார்த்துக் கொண்டிருந்தார். வளர்மதியே அதிர்ந்து போறாங்கன்னா 'சின்னம்மா' ஆவேசம் எப்படி இருக்கும் என்பதுதான் அங்கு நின்றிருந்த அதிமுக தொண்டர்களின் கமெண்ட்டாக இருந்தது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+