வைகோவை பரிதாப அதிமுக தொண்டர்கள் மலைபோல நம்புவது இதற்குதான்...!
அதிமுக எதிர்கொள்ளும் நெருக்கடிகளில் இருந்து மீள வைகோ உதவுவார் என்பது அக்கட்சி தொண்டர்களின் நம்பிக்கை. வைகோதான் அதிமுகவுக்கு அரணாக இருப்பார் என்கின்றனர் அக்கட்சி தொண்டர்கள்.
சென்னை: திக்கு தெரியாத காட்டில் இருக்கும் அதிமுக தொண்டர்கள் பாஜக, திமுகவின் நெருக்கடிகளில் இருந்து கட்சியை காப்பாற்ற மதிமுக பொதுச்செயலர் வைகோவை மலைபோல நம்பியிருப்பதாக கூறுகின்றனர்.
ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து அதிமுகவின் அடுத்த தலைமை யார் என்பது புரியாத புதிராக இருக்கிறது. சசிகலா, ஓபிஎஸ் அணிகள் வரிந்து கட்டிக் கொண்டு அதிமுகவை கட்டுப்பாட்டில் கொண்டுவர முயற்சிக்கின்றன.
ஜெயலலிதா வகித்து வந்த பொதுச்செயலர் பதவிக்கு பெரிய முட்டல் மோதல் தொடங்கியுள்ளது. சசிகலாவே அதிமுகவின் பொதுச்செயலராகக் கூடும் என்றெல்லாம் கூறப்படுகிறது. தற்போதைய அதிமுகவின் நிலை அக்கட்சி தொண்டர்களை கதிகலங்க வைத்துள்ளது.

நெருக்கடி தரும் பாஜக, திமுக
உட்கட்சி மோதல்களுக்கு அப்பால் மத்திய பாஜக அரசு இன்னும் எத்தனை நெருக்கடிகளை கொடுக்குமோ என்ற கவலையும் அதிமுக தொண்டர்களை வாட்டி வருகிறது. அதுமட்டுமின்றி தற்போதைய சூழ்நிலையை பயன்படுத்தி திமுக என்ன மாதிரியான நெருக்கடியை கொடுக்குமோ என்கிற கவலையும் அதிமுகவினருக்கு உள்ளது.

வைகோ மீது நம்பிக்கை
அதே நேரத்தில் பாஜக மற்றும் திமுகவின் நெருக்கடிகளை எதிர்கொள்ள எப்படியும் வைகோ தங்களுக்கு ஆதரவாகவே இருப்பார் என நம்புகின்றனர். இதற்கு 2 நிகழ்வுகளையும் சுட்டிக்காட்டுகின்றனர் அதிமுக தொண்டர்கள்.

இடைக்கால முதல்வர் விவகாரம்
ஜெயலலிதா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டபோது திமுக உள்ளிட்ட கட்சிகள் 'இடைக்கால முதல்வர்' கோரிக்கையை முன்வைத்தன. அப்போது அப்பல்லோ மருத்துவமனைக்கு போன வைகோ அப்படியே ஆளுநர் மாளிகைக்குப் போனார். தம்முடைய பழைய நண்பரான வித்யாசாகர் ராவை சந்தித்தேன் என்று கூறிய வைகோ அப்படியே இடைக்கால முதல்வர் என்ற பேச்சுக்கே இடமில்லை என அதிமுகவின் செய்தித் தொடர்பாளராகவும் குரல் கொடுத்தார். இடைக்கால முதல்வர் என்ற கோரிக்கையை ஏற்கவே கூடாது என்றே வித்யாசாகர் ராவிடம் வலியுறுத்த சென்றார் வைகோ என்பதுதான் இச்சந்திப்பின் பின்னணி.

சட்டசபை குழுக்கள்...
அதேபோல் சட்டசபை குழுக்களை உடனே அமைக்க வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஸ்டாலின் நெருக்கடி கொடுத்ததுடன் ஆளுநரை சந்தித்து பேசுவதாகவும் அறிவித்தார். அன்றைய நாளும் வைகோ, ஆளுநர் வித்யாசாகர் ராவை சந்தித்தார். அப்போது ஜல்லிக்கட்டு விவகாரம் குறித்து பேசியதாக செய்தியாளர்களிடம் கூறினார் வைகோ. ஆனால் தற்போதைய நிலையில் அதிமுக அரசால் எதுவும் செய்ய முடியாது; ஸ்டாலின் வேண்டுமென்றே நெருக்கடி கொடுப்பதால் அதை ஏற்காதீர்கள் என வலியுறுத்ததான் சென்றாராம் வைகோ.

திருநாவுக்கரசர்
இதேபோல் பாஜக ஏதாவது நெருக்கடி கொடுக்கும்போதும் வைகோ தங்களுக்காக பேசுவார் என்பது அதிமுகவினரின் மலையான நம்பிக்கை. என்னதான் திமுகவுடன் கூட்டணி வைத்திருந்தாலும் அண்மைக்காலமாக அதிமுகவை அனுதாபத்துடன் அணுகுகிறது காங்கிரஸ். காங்கிரஸ் கட்சியின் அனுசரணையைப் பெற்றுத்தர தங்களுக்கு திருநாவுக்கரசர் இருக்கிறார்... பழைய பாசம் இன்னும் இருப்பதால் திருநாவுக்கரசரும் தங்களுக்கு எப்படியும் உதவுவார் என்றும் நம்புகின்றனர் அதிமுகவினர்...

வரலாற்று சோகம்
ஜெயலலிதா என்ற இரும்புப் பெண்மணியின் கண்ணசைவில் இந்திய அரசியல் சரித்திரமே மாறிய நிகழ்வுகள் உண்டு. அவர் தலைமை வகித்த பேரியக்கம் இன்று வேறு கட்சிகளின் தலைவர்களின் அரவணைப்புக்காக காத்திருப்பது வரலாற்று சோகமே!
-
170... திமுக மாஸ்டர் பீஸ் தலைகீழா போகுதா? கியரை மாற்றிய அதிமுக! லட்டு மாதிரி கையில் முத்தரையர் ஓட்டு -
அவிநாசி தனபால், ஆரணி சேவூர் ராமசந்திரன் உள்பட 13 அதிமுக சிட்டிங் எம்எல்ஏக்களுக்கு சீட் மறுப்பு! -
அதிமுகவின் 3ஆம் கட்ட வேட்பாளர் பட்டியல் எப்போது வெளியீடு? -
கோவையில் 6 சிட்டிங் எம்எல்ஏவுக்கு மீண்டும் வாய்ப்பு.. செங்கோட்டையனை எதிர்த்தவருக்கே வாய்ப்பில்லையா -
மதுரை மத்திய தொகுதியில் புதிய நீதிக் கட்சி போட்டி! ஏ.சி. சண்முகம் களம் காண்கிறாரா? -
பூவை ஜெகன்மூர்த்தி கட்சிக்கு 1 தொகுதியை ஒதுக்கியது அதிமுக! மீண்டும் கே.வி.குப்பத்தில் போட்டி -
அவிநாசி, ஊட்டி, நாகர்கோவில்! அதிமுக கோட்டைகளை பாஜகவுக்கு தாரை வார்ப்பதா? கொந்தளிக்கும் நிர்வாகிகள் -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
மகளிர் உரிமை தொகை வராது.. அடுத்த 1 வாரத்தில் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கெல்லாம் கிடைக்கும்? -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
மகளிர் உரிமைத்தொகை ரூ.3,000.. கல்வி கடன் தள்ளுபடி.. ராமதாஸ் வெளியிட்ட தேர்தல் வாக்குறுதிகள்! -
₹10 லட்சம் லோன் எடுத்தா ஒரு பகுதி இலவசமா? கூட்டுறவு வங்கியில் மானியம்.. பிசினஸ் லாபம் சூப்பர் சான்ஸ்












Click it and Unblock the Notifications