Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

"ஈரானில் புதிய தலைமைக்கான நேரம் வந்துவிட்டது!" டிரம்ப் சொன்ன வார்த்தை! உற்று பார்க்கும் உலக நாடுகள்

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: ஈரானில் இப்போது தொடர் போராட்டங்கள் நடந்து வரும் நிலையில், அங்கு ஆட்சி மாற்றத்திற்கான நேரம் வந்துவிட்டதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தெரிவித்துள்ளார். ஈரானை 37 ஆண்டுகளாக கமேனி ஆட்சி செய்து வரும் நிலையில், ஈரானை வாழ்வதற்கு மோசமான இடமாக கமேனி மாற்றிவிட்டதாகவும் ஈரானில் புதிய தலைமைக்கான நேரம் இது என்று டிரம்ப் தெரிவித்துள்ளார்.

மத்தியக் கிழக்கு நாடுகளில் ஒன்றான ஈரானில் கடந்த சில வாரங்களாகவே தொடர்ச்சியாகப் போராட்டங்கள் நடந்து வருகிறது. அங்குள்ள கமேனி ஆட்சிக்கு எதிரான இந்தப் போராட்டம் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. போராட்டத்தை ஒடுக்க ஈரான் அரசும் தீவிர நடவடிக்கைகளை எடுத்து வரும் சூழலில் அங்கு நிலைமை நாளுக்கு நாள் மோசமாகி வருகிறது.

Donald Trump iran middle east

டிரம்ப்

இதற்கிடையே ஈரான் போராட்டங்கள் குறித்து அமெரிக்க அதிபர் டிரம்ப் சில முக்கிய தகவல்களைத் தெரிவித்துள்ளார். ஈரானின் புதிய தலைமைக்கான நேரம் வந்துவிட்டதாகவும் அங்கு கமேனி ஆட்சி முடிவுக்கு வரப் போவதாகவும் டிரம்ப் தெரிவித்தார். மேலும், ஈரான் தலைவர் கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு 800க்கும் மேற்பட்டோரைத் தூக்கிலிட வேண்டாம் எடுத்தது சிறந்த முடிவுகளில் ஒன்று என்றும் டிரம்ப் குறிப்பிட்டார்.

ஈரான் தலைமை அடக்குமுறை மற்றும் வன்முறையை நம்பியே நாட்டை ஆட்சி செய்வதாக டிரம்ப் வாதிட்டார். ஈரான் நாட்டின் முழுமையான அழிவுக்கு காமேனியே காரணம் என்றும் முன் எப்போதும் இல்லாத அளவுக்கு அங்கு வன்முறை உச்சத்திற்குப் போய்விட்டதாகவும் அவர் குற்றம் சாட்டினார்.

பல ஆயிரம் பேர் படுகொலை

அவர் மேலும் கூறுகையில், "ஒரு நாடு மிக மோசமாகச் செயல்பட்டாலும், அந்நாட்டின் தலைமை நாட்டை முறையாக நிர்வகிப்பதில் கவனம் செலுத்த வேண்டும். அமெரிக்காவில் நான் செய்வது போல.! அதை விட்டுவிட்டுப் பல ஆயிரம் பேரைக் கொன்று கட்டுப்பாட்டைத் தக்கவைக்கக் கூடாது.. தலைமை என்பது பயம் மற்றும் மரணம் தொடர்பாக இருக்கக்கூடாது. அது மரியாதை தொடர்பானது" என்றார்.

ஈரானின் உச்சத் தலைவர் கமேனியை "மோசமான மனிதர்" என்று குறிப்பிட்ட டிரம்ப், அவரால் தான் ஈரான் வாழ்வதற்கு மிகவும் மோசமான இடமாக மாறியுள்ளதாகவும் சாடினார். டிரம்பின் இந்தக் கருத்துகள், போராட்டங்களில் ஈடுபட்டுள்ள "தூண்டுபவர்களின் முதுகை உடைப்பேன்" என்று காமினி சபதமெடுத்த உடனேயே வெளிவந்தன. ஈரான் முழுவதும் நடந்த அரசுக்கு எதிரான போராட்டங்களில் ஏற்பட்ட "மரணங்களுக்கு" டிரம்பே காரணம் என்றும் காமினி குற்றம் சாட்டினார்.

பதிலடி

ஈரானில் போராட்டங்கள் தீவிரமடைந்துள்ள நிலையில், அதை ஒடுக்கும் முயற்சியில் அந்நாட்டு அரசு ஈடுபட்டுள்ளது. ஈரானில் போராட்டங்களுக்கு அமெரிக்காவே காரணம் எனச் சாடிய கமேனி, போராட்டத்தைத் தூண்டுவோரின் முதுகை உடைப்பேன் என மிரட்டல் விடுத்திருந்தார். அதற்குப் பதிலடி கொடுக்கும் விதமாகவே டிரம்பின் இந்தப் பேச்சு இருக்கிறது.

முன்னதாக தனது ஆதரவாளர்களிடையே உரையாற்றிய கமேனி மேலும், "நாட்டைப் போருக்கு இட்டுச் செல்ல நாங்கள் விரும்பவில்லை.. ஆனால் உள்நாட்டுக் குற்றவாளிகளை மன்னிக்க மாட்டோம்.. சர்வதேச குற்றவாளிகளும் கூட தண்டனையிலிருந்து தப்ப முடியாது" என்றார். ஈரானிய அதிகாரிகள் இந்தப் போராட்டங்களைப் பயங்கரவாத நடவடிக்கைகள் என்றும் கலவரங்கள் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.

ஈரான்

ஈரான் போராட்டங்களுக்கு நாடுகடத்தப்பட்ட பட்டத்து இளவரசர் ரெசா பஹ்லவி ஆதரவு தெரிவித்துள்ளார். இவரது தந்தை மேற்குலக ஆதரவு நிலைப்பாடு கொண்டவர். 1979 இஸ்லாமியப் புரட்சியின்போது நாட்டைவிட்டுத் தப்பி ஓடியவர். இப்போது போராட்டங்கள் வெடித்துள்ள நிலையில், பஹ்லவி மீண்டும் ஈரானை வழிநடத்த வேண்டும் என்ற குரல்களும் அதிகரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+