Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

மன்றோ கோட்பாட்டை முன்னெடுக்கும் டிரம்ப்! அதிகார பசியில் அமெரிக்கா.. வார்னிங் கொடுக்கும் வல்லுநர்கள்!

Subscribe to Oneindia Tamil

வாஷிங்டன்: கடந்த 1989ல் ஆபரேஷன் ஜஸ்ட் காஸ் என்கிற பெயரில் பனாமா மீது படையெடுத்த அமெரிக்கா, அதே பாணியில் தற்போது வெனிசுலா அதிபர் நிக்கோலஸ் மதுரோவை கைது செய்திருக்கிறது. ஏன் அமெரிக்கா இப்படி செய்தது? இதற்கு பின்னால் இருக்கும் காரணம் என்ன? என்பது குறித்து சர்வதேச அரசியல் வல்லுநர்கள் விளக்கமளித்தள்ளனர்.

டெம்பிள் பல்கலைக்கழகத்தின் வரலாற்றுப் பேராசிரியரும், 'லத்தீன் அமெரிக்கா மற்றும் கரீபியனில் அமெரிக்க தலையீடுகளின் ஒரு சுருக்கமான வரலாறு' புத்தகத்தின் ஆசிரியருமான ஆலன் மெக்பெர்சன், அமெரிக்கா மன்றோ கோட்பாட்டை பின் தொடர்வதாகவும், எனவேதான் இந்த நடவடிக்கைகளில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ளார்.

Venezuela US America

89ல் நடந்தது இப்போதும் நடக்கிறது

அதாவது, "மதுரோ கைதுக்குப் பிறகு செய்தியாளர் மாநாட்டில் பேசிய டொனால்ட் டிரம்ப், மேற்கு அரைக்கோளத்தில் அமெரிக்காவின் ஆதிக்கம் மீண்டும் ஒருபோதும் கேள்விக்குள்ளாகாது என்று பேசியதை நாம் கவனிக்க வேண்டும். 19 ஆம் நூற்றாண்டின் நடுப்பகுதியிலிருந்து, அமெரிக்கா பொருளாதார அழுத்தங்கள் மட்டுமல்லாமல் இராணுவ ரீதியாகவும் தனது அண்டை நாடுகளில் தலையிட்டுள்ளது. 1989 இல் பனாமாவின் மானுவல் நோரியேகா கைது செய்யப்பட்ட சம்பவம், தற்போதைய நிலைக்கு ஒப்பிட்டு பார்க்கலாம்.

முதல் தாக்குதல்

பிரேசில், சிலி, அர்ஜென்டினா போன்ற நாடுகளில், அமெரிக்கா தனது ராணுவத்தை பயன்படுத்தி மறைமுக நடவடிக்கைகள் மூலம், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அரசுகளை கவிழ்த்தது. இராணுவ சர்வாதிகாரிகள் ஆட்சியில் அமர்த்தப்பட்டார்கள். ஆனால், இந்த விஷயங்களில் நேரடியாக தனது ராணுவத்தை அமெரிக்கா அதிகம் பயன்படுத்தியது கிடையாது. அந்த வகையில் நேற்று நடந்த சம்பவம் தென் அமெரிக்க நாட்டின் மீதான முதல் நேரடி அமெரிக்க இராணுவத் தாக்குதலாகும்.

மன்றோ கோட்பாடு

இந்த தாக்குதல், அமெரிக்காவின் வெளியுறவு மற்றும் பாதுகாப்பு கொள்கைகளில் ஏற்பட்டிருக்கும் மாற்றத்தை சுட்டிக்காட்டுகிறது. சில வாரங்களுக்கு முன்பு, டிரம்ப் நிர்வாகத்தால் புதிய தேசிய பாதுகாப்பு கொள்கைகள் வெளியாகியிருந்தன. அதில் என்ன சொல்லப்பட்டிருக்கிறதோ, அதுதான் நேற்று நடைமுறையில் செய்து காட்டப்பட்டிருக்கிறது. இந்த கொள்கைகளை உற்று பார்த்தால், 1823 இல் அப்போதைய அதிபர் ஜேம்ஸ் மன்றோவால் முன்வைக்கப்பட்ட கொள்கையுடன் இது ஒத்து போவது தெளிவாக புரியும்.

நியூ வெர்ஷன்

'அமெரிக்கா அமெரிக்கர்களுக்கே' என்ற மன்றோ சொன்னார். அமெரிக்க என்பது இப்போது இருக்கும் நிலப்பரப்புடன் நாம் புரிந்து கொள்ளக் கூடாது. மாறாக, தென்/வட அமெரிக்காவையும் சேர்த்துதான் அவர் கூறியிருந்தார். பிரேசில், சிலி, வெனிசுலா போன்ற நாடுகள் மீது படையெடுத்து, அதை நாம் கட்டுக்குள் கொண்டுவர வேண்டும் என்று அவர் கூறியிருந்தார். இதைத்தான் மன்றோ கோட்பாடு என்று சொல்கிறார்கள். இதன் நியூ வெர்ஷனைதான் சில வாரங்களுக்கு முன்னர் தேசிய பாதுகாப்பு கொள்கையைாக டிரம்ப் முன்வைத்திருந்தார்.

லத்தீன் அமெரிக்க நாடுகள்

இந்த கொள்கை, தென் மற்றும் மத்திய அமெரிக்காவில் அமெரிக்க ஆதரவுடனான இராணுவப் புரட்சிகளை நியாயப்படுத்துகிறது. தனது விருப்பப்படி அரசியல் முடிவுகளை இராணுவ வலிமையால் லத்தீன் அமெரிக்க நாடுகளில், அமெரிக்கா இனியும் திணிக்கும் என்பதற்கு வெனிசுலா தாக்குதல் உதாரணம்.

  • வெனிசுலா
  • பிரேசில்
  • அர்ஜென்டினா
  • கொலம்பியா
  • சிலி
  • பெரு
  • ஈக்வடார்
  • பொலிவியா
  • பராகுவே
  • உருகுவே
  • மெக்சிகோ
  • பனாமா
  • குவாத்தமாலா
  • எல் சால்வடார்
  • நிகரகுவா
  • கியூபா

இவையெல்லாம்தான் லத்தீன் அமெரிக்க நாடுகள். கடந்த பல ஆண்டுகளாக லத்தீன் அமெரிக்க நாடுகளில், அமெரிக்க ராணுவ தலையீடு என்பது நடந்து வந்திருக்கிறது.

Venezuela US America

மெக்சிகோ போர்

மெக்சிகோவின் முன்னாள் பகுதியான டெக்சாஸை அமெரிக்கா இணைத்துக் கொண்டதால் எல்லைப் பிணக்குகள் தொடங்கி, 1847 இல் மெக்சிகோ மீது அமெரிக்கா படையெடுத்தது. அமெரிக்கப் படைகள் தலைநகர் மெக்சிகோ சிட்டியை ஆக்கிரமித்தன. 1848 இல் ஒரு ஒப்பந்தம் கையெழுத்தான பிறகே போர் முடிவுக்கு வந்தது. இந்த ஒப்பந்தம் மெக்சிகோ தனது பிரதேசத்தின் 55% ஐ (கலிபோர்னியா, நெவாடா, உட்டா, அத்துடன் அரிசோனா, நியூ மெக்சிகோ, கொலராடோ மற்றும் வயோமிங் பகுதிகளை உள்ளடக்கியது) விட்டுக்கொடுக்க கட்டாயப்படுத்தியது.

கியூபா

அதேபோல 1898 இல், ஸ்பெயினுக்கு எதிரான கியூபாவின் சுதந்திரப் போரில் அமெரிக்கா உதவியது. வெற்றிக்குப் பிறகு, அமெரிக்கா புவேர்ட்டோ ரிக்கோவின் கட்டுப்பாட்டைப் பெற்றதுடன், 1902 வரை கியூபாவை ஆக்கிரமித்தது. அப்போது ஒரு ஒப்பந்தம் போடப்பட்டது. அதில், அமெரிக்க கடற்படைக்கு குவாண்டானாமோ விரிகுடாவின் நிரந்தரக் கட்டுப்பாட்டை வழங்கியது. அமெரிக்கப் படைகள் பின்னர் 1906 முதல் 1909 வரையிலும், மீண்டும் 1917 முதல் 1922 வரையிலும் தீவை ஆக்கிரமித்தன. ஃபிடல் காஸ்ட்ரோவின் 1959 புரட்சிக்குப் பிறகு, கியூபா சுதந்திரம் பெற்றது.

பிரேசில்

பிரேசிலின் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட இடதுசாரி ஜனாதிபதி ஜோவோ கூலார்ட்டை 1964 இல் தூக்கியெறிய இராணுவப் புரட்சிக்கு உருவானது. இதற்கு பின்னால் அமெரிக்காதான் இருந்தது. ராணுவத்திற்கு எதிராக கிளர்ச்சி ஏற்பட்டால் தலையிடுவதற்கு, அமெரிக்க கடற்படைக் குழு ஒன்று பிரேசில் கடற்கரையில் நிலைநிறுத்தப்பட்டது.

ஆபரேஷன் காண்டோர்

1970 களில், பிரேசில், சிலி மற்றும் அர்ஜென்டினா போன்ற நாடுகளில் ராணுவ கிளர்ச்சி மூலம் அமெரிக்க ஆதரவு அரசுகள் உருவாக்கப்பட்டன. இந்த அரசை எதிர்க்கும் இடதுசாரிகள், சோசலிஸ்டுகள் கொடூரமான முறையில் கொல்லப்பட்டனர். இதற்காக 'ஆபரேஷன் காண்டோர்' திட்டத்தை அமெரிக்கா செயல்படுத்தியது.

இப்படியாக தற்போது வெனிசுலாவிலும் அமெரிக்கா வெளிப்படையாக தலையீடு செய்து, எனக்கு எண்டே கிடையாது என்பதை நிரூபித்திருக்கிறது" என கூறியுள்ளார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+