டிரம்பால் பெரிய தாக்குதல் நடக்கப்போகுது? ‛நோட்டம்' அறிவித்த அமெரிக்கா! மெக்சிகோ தான் டார்க்கெட்டா?
வாஷிங்டன்: அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் கிரீன்லாந்தை கைப்பற்ற போவதாக கூறினார். அதேபோல் ஈரான் மீதும் தாக்குதல் நடத்தும் சான்ஸ் இருக்கிறது. இதற்கிடையே தான் அமெரிக்காவின் விமான துறை சார்பில் திடீரென்று ‛நோட்டம்' அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதனால் அமெரிக்கா பெரியளவிலான தாக்குதலுக்கு தயாராகி வருகிறதா? மெக்சிகோவை டிரம்ப் குறிவைத்துள்ளதாக திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

அமெரிக்கா அதிபராக இருக்கும் டொனால்ட் டிரம்ப் தொடர்ந்து பல்வேறு நாடுகளை மிரட்டி வருகிறார். சமீபத்தில் வெனிசுலாவுக்குள் நுழைந்து அந்த நாட்டின் அதிபர் நிகோலஸ் மதுரோ, அவரது மனைவியை அமெரிக்கா ராணுவத்தின் சிறப்பு படையினர் கைது செய்தனர். அதன்பிறகு டென்மார்க்கிற்கு சொந்தமான கிரீன்லாந்தை கைப்பற்ற டிரம்ப் முடிவு செய்துள்ளார்.
அமெரிக்காவின் பாதுகாப்புக்கு கிரீன்லாந்து மிகவும் முக்கியம். இதனால் கிரீன்லாந்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டுக்குள் எடுக்கும். இந்த விஷயத்தை அமெரிக்காவை அங்கீகரிக்காத நாடுகளுக்கு 25 சதவீத வரி விதிக்கப்படும் என்று டொனால்ட் டிரம்ப் மிரட்டி உள்ளார்.
இது போதாது என்று ஈரானில் உள்நாட்டு குழப்பம் நிலவி வருகிறது. அந்த நாட்டில் மக்கள் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்த போராட்டத்தை அரசு முடக்க நினைத்தால் அமெரிக்கா தலையீடு செய்யும் என்று டொனால்ட் டிரம்ப் அறிவித்தார். தற்போது அவர் அந்த முடிவில் இருந்து பின்வாங்கி உள்ளார். இருப்பினும் ஈரானுக்கும், அமெரிக்காவுக்கும் நீண்டகால பகை உள்ளது. இதனால் ஈரான் மீது எப்போது வேண்டுமானாலும் அமெரிக்கா தாக்குதல் நடத்தும் அச்சம் உள்ளது.
இப்படியான சூழலில் தான் அமெரிக்கா புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அமெரிக்க அரசின் எஃப்ஏஏ (Federal Aviation Administration)எனும் விமான போக்குரவத்து மற்றும் கட்டுப்பாட்டு துறை சார்பில் ‛நோட்டம்' (NOTAM) அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இந்த நோட்டம் என்பது பிற நாடுகளின் விமானங்களுக்கு முன்னெச்சரிக்கை வழங்குவதாகும். பொதுவாக ஒரு நாடு தனது வான்எல்லையில் விமானப்படை, ராணுவத்தை வைத்து போர் பயிற்சி மேற்கொள்ளும்போது பிற விமானங்கள் குறுக்கே வந்து விடக்கூடாது. குறிப்பிட்ட அந்த இடத்தில் விமானிகள் கவனமுடன் விமானத்தை இயக்க வேண்டும் என்பதை கூறும் வகையில் இந்த அறிவிப்பு வெளியிடப்படும்.
அந்த வகையில் தான் திடீரென்று அமெரிக்கா ‛நோட்டம்' அறிவிப்பை வெளியிட்டுள்ளது. இருப்பினும் அதற்கான காரணம் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. நேற்று முதல் அமலுக்கு வந்த இந்த ‛நோட்டம்' அறிவிப்பு அடுத்த 60 நாட்களுக்கு நடைமுறையில் இருக்கும் என்று அமெரிக்கா கூறியுள்ளது. அதன்படி மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, பனாமா, பொகோட்டா, குவாயாகுயில், மாசட்லான் கடற்பகுதி, கிழக்கு பசிபிக் பெருங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் நோட்டம் அறிவிப்பு அமலில் இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் அமெரிக்கா ராணுவ நடவடிக்கைகளை ஏதேனும் மேற்கொள்ள உள்ளதா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏற்கனவே அமெரிக்காவில் பென்டகன் அலுவலகம் (ராணுவ தலைமையகம்) பரபரப்பாக செயல்பட்டு வருகிறது. கரீபியன் கடலின் தெற்கு பகுதியில் அமெரிக்க இராணுவம் பெருமளவில் நிலைநிறுத்தப்பட்டுள்ளது.
ஏற்கனவே மெக்சிகோவிற்கும், அமெரிக்காவுக்கும் மோதல் உள்ளது. மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் ஊடுருவல் நடப்பதாக டிரம்ப் தொடர்ந்து குற்றம்சாட்டி வருகிறார். அதுமட்டுமின்றி கடந்த வாரம் கூட மெக்சிகோவை முழுமையாக போதைப்பொருள் கும்பல் கட்டுப்பாட்டுக்குள் எடுத்துள்ளதாக குற்றம்சாட்டினார். அதோடு போதைப்பொருள் கும்பலை குறிவைத்து அமெரிக்கா மெக்சிகோவில் தாக்குதல் நடத்தலாம் என்பதையும் அவர் சூசகமாக தெரிவித்தார்.
இதனால் டிரம்பின் அடுத்த டார்க்கெட் மெக்சிகோவா? என்ற கேள்வி எழுந்துள்ளது. ஏனென்றால் மெக்சிகோ, அமெரிக்காவுடன் எல்லையை பகிர்ந்து வருகிறது. இதனால் தான் அந்த நாட்டின் வழியாக அமெரிக்காவுக்குள் ஊடுருவல் உள்ளதாக டிரம்ப் குற்றம்சாட்டினார். மேலும் தற்போது அமெரிக்கா ‛நோட்டம்' அறிவித்துள்ள கரிபீயன் கடல் மற்றும் பசிபிக் கடல் உள்ளிட்டவை மெக்சிகோ நாட்டின் இருபகுதிகளில் அமைந்துள்ளன. இன்னொரு புறம் அமெரிக்க நாடு உள்ளதோடு மறுபுறம் மத்திய அமெரிக்கா உள்ளது.
இதனால் தற்போது அமெரிக்காவின் நோட்டம் அறிவிப்பு என்பது மெக்சிகோவை சுற்றியே அமைந்துள்ளது. இவை எல்லாவற்றுக்கும் மேலாக வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மீதும் டிரம்ப் போதைப்பொருள் கடத்தல் தொடர்பான குற்றச்சாட்டை தான் முன்வைத்தார். அதன்பிறகு தான் அவர் கைது செய்யப்பட்டார். தற்போது மெக்சிகோ மீதும் டிரம்ப் அத்தகைய குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளார்.
முன்னதாக, வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோவை, டிரம்ப் கைது கைது செய்த பிறகு கரிபீயன் முழுவதும் அமெரிக்கா விமான துறை விமான பயணங்களுக்கு தடை விதித்தது. இதனால் முக்கிய விமான நிறுவனங்களின் 100க்கும் மேலான விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. இது அமெரிக்காவின் பிராந்தியத்தில் அதிகரித்து வரும் ராணுவ நடவடிக்கைகளுக்கு சான்றாக உள்ளது.
இப்படியான சூழலில் தற்போது மெக்சிகோ, மத்திய அமெரிக்கா, பனாமா, பொகோட்டா, குவாயாகுயில் மற்றும் மாசட்லான் கடற்பகுதி, கிழக்கு பசிபிக் பெருங்கடல் உள்ளிட்ட பகுதிகளில் அமெரிக்கா ‛நோட்டம்' அறிவித்து இருப்பது பெரும் பதற்றத்தை ஏற்படுத்தி உள்ளது. அதோடு பெரிய சம்பவம் ஏதோ நடக்க வாய்ப்புள்ளதாக சர்வதேச அரசியல் நோக்கர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.
-
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
அமெரிக்காவை ஏமாற்றிய டிரம்ப்.. எல்லாமே ஒரு லிமிட் தான்.. அடுத்து என்ன! உற்று பார்க்கும் உலக நாடுகள் -
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம்












Click it and Unblock the Notifications