இந்தியர்களை பிடித்து வைத்த டிரம்ப்.. அமெரிக்கா பறிமுதல் செய்த ரஷ்ய கப்பலில் 3 இந்தியர்கள்! ஷாக் தகவல்
வாஷிங்டன்: வெனிசுலா மீதான தடையை மீறியதாக கூறிய ரஷ்யா கொடியுடன் சென்ற ‛Marinera' எண்ணெய் கப்பலை அட்லாண்டிக் கடலில் நேற்று அமெரிக்க கடற்படை பறிமுதல் செய்தது. இந்த கப்பலில் மொத்தம் 28 பேர் உள்ள நிலையில் அதில் 3 பேர் இந்தியாவை சேர்ந்தவர்கள் என்ற திடுக்கிட வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.
அமெரிக்கா - வெனிசுலா இடையே நீண்டகாலமாக மோதல் உள்ளது. சில நாட்களுக்கு முன்பு வெனிசுலா அதிபர் நிகோலஸ் மதுரோ மற்றும் அவரது மனைவி ஆகியோரை அமெரிக்க படையினர் நாடு புகுந்து கைது செய்து அமெரிக்காவின் நியூயார்க் சிறையில் அடைத்துள்ளனர்.

போதைப்பொருள் கடத்தல் தொடர்பான வழக்கில் அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
மேலும் வெனிசுலா மீது அமெரிக்கா பல்வேறு தடைகளை விதித்துள்ளது. தற்போது வெனிசுலாவின் எண்ணெய் வர்த்தகத்தை அமெரிக்கா தனது கட்டுப்பாட்டில் எடுத்துள்ளதாக அறிவித்துள்ளது. இப்படியான சூழலில் தான் ‛பெல்லா -1' எனும் பெயரில் செயல்பட்டு வந்த எண்ணெய் கப்பல் அமெரிக்காவின் தடையை மீறி வெனிசுலாவில் இருந்து புறப்பட்டதாக கூறப்படுகிறது.
மேலும் இந்த கப்பல் தற்போது பெயர் மாற்றம் செய்து Marinera என்ற பெயரில் அட்லாண்டிக் கடலில் வலம் வருவது கண்டுபிடிக்கப்பட்டது. கடந்த 2 வாரங்களாக இந்த எண்ணெய் கப்பலை அமெரிக்கா கண்காணித்து வந்த நிலையில் நேற்று சிறை பிடித்தது. இந்த கப்பலில் ரஷ்யாவின் கொடி இருந்தது.ரஷ்யாவைச் சேர்ந்த புரேவெஸ்ட்மரின் நிறுவனத்தை சேர்ந்தது தான் இந்த கப்பல்.
இதனால் அமெரிக்காவின் பறிமுதல் நடவடிக்கைக்கு எதிராக ரஷ்யா களமிறங்கியது. ரஷ்யா தனது நீர்மூழ்கி கப்பல் மற்றும் போர்க்கப்பலை அனுப்பி ‛பெல்லா -1' எண்ணெய் கப்பலுக்கு பாதுகாப்பு வழங்கியது. இருப்பினும் நேற்று அமெரிக்கா அந்த கப்பலை பறிமுதல் செய்தது.
'Marinera' crew consists of 17 Ukrainian citizens, 6 Georgian citizens, 3 Indian citizens and 2 Russian citizens, RT source clarifies https://t.co/JgPQ3eE2x9 pic.twitter.com/s7Y0ngdLqF
— RT (@RT_com) January 8, 2026
இந்நிலையில் தான் கப்பலில் உள்ள பணியாளர்கள் குறித்த முக்கிய தகவல் வெளியாகி உள்ளது. அந்த கப்பலில் மொத்தம் 28 பேர் உள்ளனர். இதில் அதிகபட்சமாக 17 பேர் உக்ரைன் நாட்டை சேர்ந்தவர்கள். 6 பேர் ஜார்ஜியாவையும், 3 பேர் இந்தியாவையும், 2 பேர் ரஷ்யாவையும் சேர்ந்தவர்கள் என்ற தகவல் வெளியாகி உள்ளது.
இதனை ஆர்டி ஊடகம் உறுதி செய்துள்ளது. ரஷ்யா டூடே என்ற பெயரில் ரஷ்யாவில் செயல்பட்டு வந்த இந்த ஊடகம் தற்போது ஆர்டி என்று சுருக்கமாக அழைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் தான் அந்த ஊடகத்தின் எக்ஸ் வலைதள பக்கத்தில் இதுபற்றி தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
ஈரானின் பலத்தை அழிச்சிட்டோம்.. ஒப்பந்தத்திற்கு வராவிட்டால் கற்காலத்திற்கு.. டிரம்ப் பகிரங்க வார்னிங் -
ஹார்முஸ் ஜலசந்தியில் இருந்து எங்களுக்கு எண்ணெய் தேவையில்லை.. கை கழுவிய டிரம்ப் -
அயதுல்லா அலி கமேனியின் மகனையும் முடித்த இஸ்ரேல்? உண்மையில் அதிகாரம் யாரிடம்? ஓங்கும் ஐஆர்ஜிசி கை! -
வந்த வேலை முடிந்தது.. 2-3 வாரத்தில் குட் நியூஸ்! ஈரான் குறித்து பேசிய டிரம்ப்! இந்தியா தப்பிக்குமா? -
அமெரிக்காவால் ஏன் ஈரான் போரில் ஜெயிக்க முடியவில்லை.. உலகத்தையே முடக்கிய இஸ்ரேலின் தவறு -
நேட்டோவில் இருந்து விலகும் அமெரிக்கா? உலக நாடுகளுக்கே அதிர்ச்சி கொடுத்த டிரம்ப்.. இப்படி ஆகிடுச்சே -
நிலவில் மீண்டும் கால் வைக்கும் மனிதர்கள்.. 53 ஆண்டுக்கு பிறகு மற்றொரு சரித்திரம் படைக்கும் அமெரிக்கா -
கோதாவில் இறங்கும் இங்கிலாந்து.. 35 நாடுகளை திரட்டி ஹார்முஸ் ஜலசந்தி திறப்பு? எகிறும் டென்ஷன் -
கூகுள், மைக்ரோசாப்ட் நிறுவனங்கள் மீது தாக்குதல் நடத்துவோம்.. அமெரிக்காவுக்கு வார்னிங் கொடுத்த ஈரான்! -
துபாய்க்கு இப்போ தான் உசுரே வந்துருக்கு..ஈரானை முடக்கிய அமெரிக்கா? டிரம்ப் சொன்ன வார்த்தை.. அடுத்து? -
வளைகுடாவில் அமெரிக்காவுக்கு இன்னொரு தலைவலி.. ஈராக்கில் சர்வதேச செய்தியாளர் கடத்தல்.. ஷாக் வீடியோ -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்?












Click it and Unblock the Notifications