இனியாவது தங்கம் விலை குறையுமா? ஒரு வழியாக முடிவுக்கு வரும் அமெரிக்கா ஷட் டவுன்! டிரம்பிற்கு நிம்மதி
வாஷிங்டன்: அமெரிக்க அரசு கடந்த 40 நாட்களாகவே ஷட் டவுன் காரணமாக முடங்கியிருக்கிறது. இதனால் அமெரிக்க பெடரல் ஊழியர்கள் பல ஆயிரம் பேர் வேலை இல்லாமல் உள்ளனர். இதற்கிடையே ஷட் டவுனை முடிவுக்குக் கொண்டு வரும் மிக முக்கியமான மசோதா இப்போது அங்கு நிறைவேறியுள்ளது. இதனால் அடுத்த சில நாட்களில் ஷட் டவுன் முடிவுக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவில் செலவினங்கள் குறித்த மசோதா ஒவ்வொரு ஆண்டும் அக்டோபர் 1ம் தேதிக்கு முன்பு நிறைவேற்ற வேண்டும். இருப்பினும், இந்தாண்டு டிரம்ப்பின் குடியரசுக் கட்சியால் செலவின மசோதாவை நிறைவேற்ற முடியவில்லை. இதன் காரணமாக அங்குக் கடந்த அக்டோபர் 1ம் தேதி முதல் பெடரல் அரசு முடங்கியுள்ளது. ஒரு மாதத்திற்கு மேலாக அங்கு இதே நிலை தான் இருக்கிறது.

அமெரிக்கா ஷட் டவுன்
2018-2019 காலகட்டத்தில் டிரம்ப் முதல்முறை அதிபராக இருந்தபோது அமெரிக்கா 35 நாட்கள் முடங்கியிருந்தது. அதுவே அமெரிக்க வரலாற்றில் மிக நீண்ட ஷட் டவுனாக இருந்த நிலையில், அதை விட அதிக நாட்கள் இந்த முறை ஷட் டவுன் நீடிக்கிறது. இதனால் அமெரிக்க மக்கள் மிகக் கடுமையாகப் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஷட் டவுன் காரணமாக அத்தியாவசியமற்ற அமெரிக்க ஊழியர்கள் அனைவரும் கட்டாய விடுப்பில் அனுப்பப்பட்டனர். அத்தியாவசியமான ஊழியர்கள் அனைவரும் சம்பளம் இல்லாமல் வேலை செய்ய வேண்டிய கட்டாயத்திற்குத் தள்ளப்பட்டனர். அமெரிக்க பெடரல் அரசு ஆள் பற்றாக்குறையால் கடுமையாகப் பாதிக்கப்பட்டது. இதனால் அங்குத் தேசிய பூங்காக்கள் மூடப்பட்டன. மேலும், விமானச் சேவையும் கூட கடுமையாகப் பாதிக்கப்பட்டது.
இழுபறி
இதற்கிடையே இந்த ஷட் டவுன் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது. அமெரிக்காவின் செனட் செனட் சபையில் குடியரசுக் கட்சியினர் 53 எம்பிகள், ஜனநாயகக் கட்சியினர் 45 எம்பிக்கள், ஜனநாயகக் கட்சிக்கு ஆதரவு சுயேச்சைகள் இருவர் என மொத்தம் 100 எம்பிக்கள் உள்ளனர். அவர்களில் 60 எம்பிக்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே செலவின மசோதாவை நிறைவேற்ற முடியும். எதிர்க்கட்சியில் இருந்து குறைந்தது ஏழு எம்பிக்கள் ஆதரவு தேவைப்பட்டதால் ஷட் டவுனை முடிவுக்குக் கொண்டு வர முடியவில்லை.
எதிர்க்கட்சியான ஜனநாயகக் கட்சியைப் பொறுத்தவரை ஏழை மக்கள் இன்சூரன்ஸ் வாங்கும்போது அவர்களுக்கு வழங்கப்படும் வரிச் சலுகை இந்தாண்டு டிசம்பருடன் முடிகிறது. அதை நீடித்தால் மட்டுமே செலவின மசோதாவுக்கு ஆதரவு அளிப்போம் எனத் தெரிவித்தனர். இந்த வரிச் சலுகை நிறுத்தப்பட்டால் பல லட்சம் பேர் பாதிக்கப்படுவார்கள் என்பதால் இதில் ஜனநாயகக் கட்சி உறுதியாக இருந்தது. இதுவே இழுபறிக்குக் காரணமாக இருந்தது.
சமரசம்
இந்தச் சூழலில் தான் ஒரு சமரச முடிவு எட்டப்பட்டுள்ளது. அதாவது டிசம்பர் மாதம் இரண்டாவது அல்லது மூன்றாவது வாரம் வரிச் சலுகையை நீட்டிப்பது தொடர்பான விவகாரத்தில் தனி வாக்கெடுப்பு நடத்துவதாக டிரம்ப்பின் குடியரசு கட்சியினர் உறுதியளித்தனர். இதை ஏற்று 8 ஜனநாயகக் கட்சி எம்பிக்கள் செலவின மசோதாவுக்கு ஆதரவளித்தனர்.
அதாவது இப்போது செலவின மசோதா மட்டும் நிறைவேறுகிறது. இந்த புதிய மசோதாவின்படி பெடரல் அரசு ஜனவரி 30ம் ததி வரை தேவைப்படும் நிதி ஒதுக்கப்படும். இதன் மூலம் அவர்களுக்குத் தேவையான 60 வாக்குகள் கிடைத்துவிட்டது. இதன் மூலம் செலவின மசோதா செனட் சபையில் நிறைவேறியது. இதனால் ஷட் டவுன் விரைவில் முடிவுக்கு வரும் சூழல் ஏற்பட்டுள்ளது.
அடுத்து என்ன
அடுத்தகட்டமாகச் செலவின மசோதாவை அவர்கள் பிரதிநிதிகள் சபைக்கு அனுப்ப வேண்டும். இருப்பினும், அங்கு டிரம்ப்பின் குடியரசுக் கட்சிக்குத் தேவையான பெரும்பான்மை இருப்பதால் எளிதாக மசோதா பாஸ் ஆகும். அதன் பிறகு அதிபர் டிரம்ப் அதற்கு ஒப்புதல் தருவார். இதன் மூலம் அமெரிக்க ஷட் டவுன் முடிவுக்கு வரும். அடுத்த ஓரிரு நாட்களில் இவை அனைத்தும் முடிந்துவிடும் என்றே தெரிகிறது.
தங்கம் விலை
அமெரிக்கா ஷட் டவுன் காரணமாகவே தங்கம் விலை கணிசமாக அதிகரித்திருந்தது. இப்போது அது முடிவுக்கு வந்துவிட்டதால் பலரும் தங்கம் விலை குறையும் என்றே எதிர்பார்த்தனர். இருப்பினும், அதற்குள் அமெரிக்க வேலைவாய்ப்பு குறித்த ரிப்போர்ட் வெளியாகிவிட்டது. அது மோசமாக இருப்பதால் தங்கம் விலை மீண்டும் ஏற ஆரம்பித்துவிட்டது குறிப்பிடத்தக்கது.
-
இந்தியர்களுக்கு பெரிய ஆப்பு.. H-1B விசா ரூல்ஸை மொத்தமாக மாற்றும் டிரம்ப்! இது தேவையில்லாத வேலையாச்சே -
ஈரானிடம் உள்ள 400 கிலோ யுரேனியம்.. கண்வைத்த டிரம்ப்.. தரைவழி தாக்கி மீட்க அமெரிக்கா மாஸ்டர் பிளான் -
முடங்கும் துபாய், அபுதாபி! அடியோடு மங்கும் தங்கம் மார்க்கெட்! ஆடிப்போன இந்திய ஜுவல்லரி நிறுவனங்கள் -
மனைவி தனது பெற்றோரிடமிருந்து பெற்ற சொத்தில் கணவருக்கு உரிமை உண்டா? ஐகோர்ட் தீர்ப்பு முழு விவரம் -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
தமிழகத்தில் 2010 ல் RI ஆக வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் எவ்வளவு சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
இல்லத்தரசி கூப்பன் திட்டத்தில்.. நுணுக்கமான விஷயமே இதுதான்.. டிஆர்பி ராஜா சொன்ன சுவாரசிய தகவல் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது!












Click it and Unblock the Notifications