திருப்பாவை, திருப்பள்ளியெழுச்சி பாடல் 28: இறைவன் எளிமையானவன்! ஓலை குடிசைக்கும் செல்வார்!
சென்னை: மார்கழி மாதம் 28-ஆம் நாள் இன்று! "குறையொன்றுமில்லாத கோவிந்தா" என்ற சொற்றொடர், கண்ணனுக்கு ஒரு குறை இருந்து, அது பின்னர் நீங்கியதாகச் சுட்டுகிறது. அப்படியென்றால், அந்தக் குறை என்ன?

ராம அவதாரத்தில், ராம பட்டாபிஷேகம் நடந்தது. இதில் வால்மீகி ஓர் ஆர்வத்தில் ஒரு குறிப்பை எழுதினார்: இந்திர லோகத்தின் எட்டு திசை காவலர்கள் பட்டாபிஷேகம் நடத்தியது போல, அயோத்தியில் வசிஷ்டர், வாமதேவர், ஜாபாலி, காஷ்யபர், காத்யாயனர், ஸுயஜ்ஞர், கவுதமர், விஜயர் ஆகிய எட்டு முனிவர்கள் ராமருக்குப் பட்டாபிஷேகம் செய்ததாக அவர் குறிப்பிட்டார். இது ராமனுக்குக் குறையாகப் பட்டது.
இந்திரனை வென்று 'இந்திரஜித்' பட்டம் பெற்றவனைத் தம் தம்பியான லட்சுமணன் வென்றான். அப்படிப்பட்ட கீழான இந்திரனுடன் தம்மை ஒப்பிட்டது தவறு என ராமர் கருதினார். அதுமட்டுமின்றி, கௌதமர் மனைவி அகலிகையுடன் தவறி நடந்த இந்திரனுடன் ஒப்பிடலாமா? என்பதும் ராமரின் பெரும் குறையாக இருந்தது.
கிருஷ்ண அவதாரத்தில் இந்தக் குறை நீங்கியது. ஆயர்கள் தனக்குச் செய்த பூஜையை நிறுத்தியதால் சீற்றமடைந்த இந்திரன் பெரும் மழை பொழியச் செய்தான். அப்போது கண்ணன் கோவர்தனகிரியைக் குடையாகத் தூக்கி மக்களைக் காத்தார். இதைக் கண்ட இந்திரன், கண்ணனின் காலில் பணிந்து மன்னிப்புக் கோரினான்.
இப்படியாக, ராம அவதாரத்தில் ஏற்பட்டக் குறை கிருஷ்ண அவதாரத்தில் நிவர்த்தி செய்யப்பட்டதால், ஆயர்குலப் பெண்கள் மகிழ்ந்து கண்ணனை "குறையொன்றுமில்லாத கோவிந்தா" எனப் போற்றிப் பாடினர்.
திருப்பாவை பாடல் 28
கறவைகள் பின்சென்று கானம் சேர்ந்துண்போம்
அறிவொன்றும் இல்லாத ஆயர்குலத்து உன்றன்னை
பிறவி பெறுந்தனை புண்ணியம் யாமுடையோம்
குறைவொன்றும் இல்லாத கோவிந்தா! உன்தன்னோடு
உறவேல் நமக்கிங்கு ஒழிக்க ஒழியாது
அறியாத பிள்ளைகளோம் அன்பினால் உன்தன்னை
சிறுபேர் அழைத்தனவும் சீறி யருளாதே
இறைவா! நீ தாராய் பறையேலோர் எம்பாவாய்.
பாடல் விளக்கம்: குறையற்ற கோவிந்தனிடம் பக்தர்கள் தங்கள் பக்தியைத் தெரிவித்தனர். தாங்கள் பசுக்களை மேய்த்து, தயிர்ச்சாதம் உண்ணும் எளிய, அறிவற்ற ஆயர்கள் என அடையாளப்படுத்தினர். எனினும், கோவிந்தனைத் தலைவனாகக் கொண்டதால் வைகுண்டம் தங்கள் பிறவிப்பயன் என்பதில் அசைக்க முடியாத நம்பிக்கை கொண்டிருந்ததோடு, இறைவனுடனான உறவை யாராலும் பிரிக்க முடியாது எனவும் வலியுறுத்தினர்.
விரத முறைகளை அறியாதவர்கள் என்றும், கண்ணா, மணிவண்ணா, கருணாகரா என உரிமையுடன் அழைத்ததற்காகக் கோபிக்க வேண்டாம் என வேண்டினர். தங்கள் நோன்பை ஏற்று அருள இறைவனைப் பிரார்த்தித்தனர்.
திருப்பள்ளியெழுச்சி பாடல் 8
முந்திய முதல் நடு இறுதியும் ஆனாய்
மூவரும் அறிகிலர் யாவர் மற்றறிவார்
பந்தணை விரலியும் நீயும் நின்னடியார்
பழங்குடில் தோறும் எழுந்தருளிய பரனே!
செந்தழல் புரை திருமேனியும் காட்டித்
திருப்பெருந்துறையுறை கோயிலும் காட்டி
அந்தணன் ஆவதும் காட்டி வந்தாண்டாய்
ஆரமுதே! பள்ளி எழுந்தருளாயே!
பாடல் விளக்கம்: பக்தர்களை ஆட்கொண்டு, இனிய அருள்பவராக சிவபெருமான் போற்றப்படுகிறார். பார்வதியுடன் அடியவர்களின் இல்லங்களுக்கு எழுந்தருளும் அவர், உலகைப் படைத்து, நடுநாயகமாக நின்று, அழிக்கும் கடவுளாகவும் விளங்குகிறார். மும்மூர்த்திகளான பிரம்மா, விஷ்ணு, ருத்ரன் ஆகியோராலும் அறிய முடியாதவர் சிவன் என்பது ஐதீகம்.
தன்னை அறிய முற்பட்டபோது நெருப்பாகத் தோன்றி திருப்பெருந்துறையைக் காட்டி, அந்தணர் வேடத்தில் வந்து பக்தர்களை ஆட்கொண்டதாகவும் கூறப்படுகிறது. இறைவன் எளிமையானவர் என்பதால், செல்வந்தர், ஓலைக் குடிசைவாசி என பாகுபாடின்றி அனைவருக்கும் அருள்பவர். அவரை வணங்க நல்ல உள்ளம் மட்டுமே போதும் என்பதே இதன் மையக்கருத்து. உலகம் செழிக்க அவர் துயில் எழவேண்டுமென அடியவர்கள் பிரார்த்திக்கின்றனர்.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications