புடவையை பிடிச்சு இழுத்து அடிச்சேனா? புள்ளைங்க மேல சத்தியம் செய்! பல் உடைப்பு வழக்கில் ஜிபி முத்து ஆதங்கம்
சென்னை: டிக் டாக் ஆக்டிவாக இருந்த காலகட்டத்தில் அதில் வீடியோக்களை வெளியிட்டு பிரபலமாகி, பிக் பாஸ் நிகழ்ச்சி வழியே பட்டிதொட்டி எங்கும் சென்று, தற்போது திரைப்படங்களில் நடித்து வரும் நடிகர் ஜி.பி.முத்து, ஒரு புதிய சட்ட சிக்கலில் சிக்கியிருக்கிறார். பக்கத்து வீட்டுப் பெண்ணைத் தாக்கியதாக 3 பிரிவுகளின் கீழ் இவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், "இது சுத்த பொய்யான வழக்கு" என்று அவர் இணையத்தில் வீடியோ வெளியிட்டுப் பரபரப்பைக் கிளப்பியுள்ளார்.
வழக்குப்பதிவின் பின்னணி
தூத்துக்குடி மாவட்டம், உடன்குடியை அடுத்துள்ள பெருமாள்புரத்தைச் சேர்ந்தவர் ஜி.பி.முத்து. அதே பகுதியில் வசித்து வரும் முத்து மகேஷ் மற்றும் அவரது மனைவி பால அமுதாவுக்கும், ஜி.பி.முத்துவுக்கும் இடையே நடந்தத் தகராறுதான் இந்தச் சட்டப் பிரச்சனைக்குக் காரணம். கடந்த 2ஆம் தேதி, ஜி.பி.முத்துவின் இரண்டு மகன்களும் தெருவில் விளையாடிக் கொண்டிருந்தபோது, அந்த வழியாக வந்த முத்து மகேஷ், "எதற்காக இப்படித் திரிந்து கொண்டு இருக்கிறீர்கள்? உங்க அப்பாவை மாதிரி ஆக போறீங்களா? என்றும் சில ஆபாசமான வார்த்தைகளையும் பேசினதாக கூறப்படுகிறது.

தாக்குதல் புகார்
இதைத் தொடர்ந்து, முத்து மகேஷ் வீட்டிற்கு ஜி.பி.முத்துவும், அவரது மனைவி மற்றும் உறவினர்களும் சென்று பேசியதாக கூறப்படுகிறது. அப்போது ஏற்பட்டத் தகராறில், முத்து மகேஷ் மனைவி பால அமுதாவைத் தாக்கியதாகவும், இதில் அவரின் பற்கள் உடைந்து, தலை மற்றும் கையில் காயம் ஏற்பட்டதாகவும் கூறப்படுகிறது.
இதையடுத்து, பால அமுதா 108 ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். இந்தச் சம்பவம் குறித்து குலசேகரபட்டினம் போலீசார் விசாரணை நடத்தினர். அதில், ஜி.பி.முத்துவும் அவரது உறவினர்கள் 4 பேரும் தாக்கியது உறுதியானதாகக் கூறி, அவர்கள் மீது 3 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
ஜி.பி.முத்துவின் விளக்கம்
தற்போது, ஜி.பி.முத்து தனது இணையதளப் பக்கத்தில் ஒரு வீடியோவை வெளியிட்டு, இதுகுறித்துத் தனதுச் சொந்தப் பேச்சு வழக்கிலேயேப் பேசியுள்ளார். "மக்களே, என்னைய பத்தி ஒரு பொய் வழக்குப் போட்டுருக்காங்க மக்களே! பக்கத்து வீட்டுக்காரன் முத்து மகேஷ் என் புள்ளைங்க தெருவுல விளையாடிட்டு இருக்கும்போது, மது போதையில் வந்து, 'இனிமேல் இந்தப் பக்கம் வந்தா அவ்வளவுதான், கொன்னுருவேன்'னு மிரட்டுனான்.
அதை என்னன்னு கேக்கத்தான் நானும் என் பொண்டாட்டியும் அவங்க வீட்டுக்குப் போனோம். அப்போ அவனோட பொண்டாட்டி பால அமுதா அமைதியாத்தான் பேசுனா. 'இவன் மேலதான் தப்பு'ன்ற மாதிரிதான் அவ இருந்தா. அதனால, அந்தாளு (முத்து மகேஷ்) என்ன பண்ணான்னா, எங்க கண்ணு முன்னாடியே அவனோட பொண்டாட்டி பால அமுதாவை அடிச்சு, பல்லை உடைச்சான். இதை அங்க இருந்தவங்க எல்லாரும் பாத்தாங்க! ஆனா, இப்போ காவல்நிலையத்துல, 'நான் பால அமுதாவின் புடவையைப் பிடிச்சு இழுத்து, முடியைப் பிடிச்சு இழுத்து அடிச்சதா' புகார் கொடுத்துருக்கான்!
ஏன்டா, எனக்கும் 2 புள்ளைங்க இருக்கு. உனக்கும் 2 புள்ளைங்க இருக்கு. உண்மையிலேயே உன் பொண்டாட்டியோட புடவையை பிடிச்சு இழுத்து நான் அடிச்சுருந்தா, என் புள்ளைங்க மேல சத்தியம் செய்யி! அப்போ நான் ஒரு மாசம் ஜெயில்ல இருக்கேன்! தனிப்பட்ட பகையை ஊர் பகையாக்கி, என்னைய பத்திப் பொய் வழக்குகளைப் போட்டுருக்கான்! இதைப் பத்தி நான் சட்டப்படி நடவடிக்கை எடுப்பேன் மக்களே!"என்று பேசி இருக்கிறார்.
ஜி.பி.முத்துவின் இந்த ஆவேச பேச்சு இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், இந்த வழக்கு சட்டரீதியாக எப்படி முடிவுக்கு வரும் என்ற எதிர்பார்ப்பு எழுந்திருக்கிறது.
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
எல்லாரும் மன்னிச்சிருங்க.. வாழ்க்கையில் நடந்த சோகம்! உருக்கமாக பேசிய பாக்கியலட்சுமி சீரியல் கோபி -
தமிழ்நாட்டில் 27 வயது தாசில்தார் சம்பளம்.. 37 வயதில் எவ்வளவு மாறியிருக்கும் தெரியுமா? -
பாதாளத்தில் விழும் தங்கம்.. "ரூ.10,000க்கு கூட போகலாம்.." மெகா இன்ப செய்தியை சொன்ன ஆனந்த் சீனிவாசன் -
சென்னையில் 2 லட்சம் பேருக்கு பறந்த நோட்டீஸ்.. வீடு, கட்டிடம் வைத்துள்ளவர்களுக்கு முக்கிய அறிவிப்பு -
அண்ணாமலை கடும் ‘அப்செட்’.. தேர்தலில் போட்டியிட மறுப்பது ஏன்? எடப்பாடியால் கலங்கும் பாஜக! 2 மேட்டர் -
கோவையில் 2022ல் சரவணம்பட்டியில் இடம் வாங்கி போட்டிருந்தால் இன்று நீங்கள் கோடீஸ்வரன்.. மாறிய மதிப்பு -
சென்னையில் அதிமுகவுக்காக இறங்கும் 13 பேர்.. 3 பெண்களுக்கு வாய்ப்பு.. கொளத்தூரில் யாருக்கு வாய்ப்பு? -
இந்தியாவை உலுக்கும் "ஜாம்பி" போதை மருந்து.. 2 மணி நேரமா இன்ச் கூட அசையல.. திகிலூட்டும் வீடியோ! -
"பதிலடி தாக்குதல் நடத்துவோம்.." ஈரானுக்கு எதிராக ஒன்றுகூடும் வளைகுடா.. 6 நாடுகள் கூட்டாக அறிக்கை -
ஆபரண தங்கம் 6 சவரன் 15 வருடம் முன் வாங்கினீங்களா? அப்போ ₹1 லட்சம், இப்ப ரேட் தெரிஞ்சா ஷாக் ஆவீங்க -
"எங்க இப்போ கை வை பார்க்கலாம்.." ஹார்முஸை முடக்கிய ஈரான் தளபதி படுகொலை.. இஸ்ரேல் அறிவிப்பு!












Click it and Unblock the Notifications