Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

பாண்டியன் ஸ்டோர்ஸ்: கோர்ட்டில் மயில் சொன்ன வார்த்தை! அடிக்க பாய்ந்த பழனி! மீனா செய்த செயல்

Subscribe to Oneindia Tamil

சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஜனவரி 6ஆம் தேதிக்கான எபிசோடில் பாண்டியன் குடும்பத்திற்கு எதிராக மயில் சாட்சி சொல்லியிருக்கிறார். இதனால் பாண்டியன் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி கிடைக்கிறது. அதை தொடர்ந்து என்ன நடந்தது என்பதை பற்றி விரிவாக பார்க்கலாம்.

பாண்டியன் குடும்பத்தின் மீது தங்கமயில் அம்மா கொடுத்த கம்ப்ளைன்ட் காரணமாக அனைவரையும் போலீஸ் லாக்கப்பில் வைத்திருக்கின்றனர். பிறகு கோர்ட்டில் விசாரணை நடக்கிறது அப்போது நான் கோர்ட்டுக்கு வர முடியாது என்று மயில் சொல்ல, அதற்கு மயில் அம்மா பாக்கியம் நீ உன் குடும்பத்தோட சேர்ந்து வாழணும் என்றால் நாங்க சொல்றதை மட்டும் கோர்ட்டில் வந்து சொன்னால்தான் முடியும் என்று அவருடைய மனதை மாற்றுகிறார்.

Pandian Stores serial vijay tv

இன்றைய எபிசோடு ஆரம்பத்தில் மீனா அரசி எல்லோரும் கோர்ட்டு வாசலில் காத்திருக்கின்றனர். அவர்களை தொடர்ந்து பழனிவேல், சக்திவேல், முத்துவேல் எல்லோரும் வருகின்றனர். மறுபக்கத்தில் மயில் அவருடைய அம்மா அப்பாவுடன் வருகிறார். அவர்களைப் பார்த்ததும் அரசி கோபமாகி திட்டுகிறார். இவர்களை சும்மாவே விட கூடாது என்று அவர் பேசிக் கொண்டிருக்க மீனா அரசியை சமாதானம் செய்கிறார்.

இருக்கிற பிரச்சனையே பெருசா இருக்கு இதுல நீ புது பிரச்சனையை கிளப்ப வேண்டாம் என்று மீனா சொல்லிக் கொண்டிருக்கும் நேரத்தில் மயில் பழனியை பார்த்ததும் சித்தப்பா என்று சொல்ல, அதற்கு பழனி கோபமாகி யார் யாருக்கு சித்தப்பா? உன்னை அந்த வீட்டு பொண்ணு போல ராணி மாதிரி பார்த்தாங்க. ஆனா நீ அவங்களை கோர்ட் படி ஏற வச்சுட்ட... ஒரு நாள் முழுக்க உன்னால அவங்க ஜெயில்ல கஷ்டப்பட்டு இருக்காங்க அந்த குற்ற உணர்ச்சி கூட இல்லாம வந்து நின்னுட்டு நீ சொந்தம் கொண்டாடுறியா என்று பழனி அடிக்க போகிறார்.

அப்போது அவரை மீனா மற்றும் அரசி சமாதானம் செய்து கூட்டிக் கொண்டு போகின்றனர். அப்போது சரவணனை பார்த்ததும் மாமா என்று மயில் அழுது கொண்டிருக்க, பாக்யா அமைதியா இரு என்று திட்டுகிறார். அந்த நேரத்தில் முத்துவேல் சக்திவேலை பார்த்ததும் மயிலுடைய அம்மா அவர்களிடம் பேசப்போகிறார். உங்கள் எதிரி குடும்பம் படுற கஷ்டத்தை வேடிக்கை பார்க்க வந்தீங்களா?

எங்களுக்காக ஒரு உதவி பண்ணுவீங்களா அந்த குடும்பத்துக்கு எதிராக சாட்சி சொல்லணும் என்று பாக்கியம் கேட்க, அதற்கு சக்திவேல் கோபமாகிறார். பிறகு அவரே சமாதானமாகி அவ்வளவுதானா உங்களுக்காக நாங்க வந்து சாட்சி சொல்கிறோம் என்று வில்லத்தனமாக பேசுகிறார். இதைக் கேட்டு பாக்கியமும், மாணிக்கமும் சந்தோஷம் அடைகின்றனர்.

அதைத்தொடர்ந்து கோர்ட்டில் விசாரணை நடக்கிறது. அப்போது மயிலை விசாரிக்கிறார்கள். அவரிடம் என்ன நடந்தது என்று கேட்க, மயில் தரப்பு வக்கீல் பாண்டியன் குடும்பத்தின் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை சொல்கின்றனர். மயிலை புகுந்த வீட்டில் அடித்ததால் தான் அவருடைய வயிற்றில் இருந்த குழந்தை அபார்ஷன் ஆகிவிட்டது என்று சொல்கின்றனர்.

பாண்டியன் ஸ்டோர்ஸ் 2: மயக்கமடைந்த கோமதி.. உண்மையை நிரூபிக்க குமார் போட்ட பிளான்! கதறி அழுத அரசி
அப்போது நீதிபதி மயிலிடம் உன்னை அடித்தார்களா என்று கேட்க, அவளும் அம்மா பேச்சைக் கேட்டு ஆமாம் என்று சொல்கிறார். அதைக் கேட்டு பாண்டியன் குடும்பம் ஷாக் ஆகி நிற்கிறது. அரசி என்ன சித்தப்பா இப்படி எல்லாம் பொய் பேசுறாங்க என்று பயத்தோடு கேட்கிறார். அப்போது மயில் தரப்பு வக்கீல் இவங்க அடிச்சு கொடுமை படுத்திட்டு இப்போ டைவர்ஸ் நோட்டீஸும் அனுப்பி, சரவணனுக்கு வேற கல்யாணம் செய்ய பாக்குறாங்க என்று அபாண்டமாக பழி போடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+