பாண்டியன் ஸ்டோர்ஸ்: வீட்டுக்கு வந்த கோமதியிடம் அம்மா சொன்ன விஷயம்! கதறி அழுத குடும்பம்! பாண்டியன் எடுத்த முடிவு
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 சீரியலில் 2026 ஜனவரி 8ஆம் தேதிக்கான எபிசோடில் ஜெயிலில் இருந்த பாண்டியன் குடும்பத்தினர் ஜாமினில் வெளியே வந்திருக்கின்றனர். அப்போது தன்னுடைய அண்ணன்களிடம் கோமதி மன்னிப்பு கேட்டு பேசி இருக்கிறார். அதைத் தொடர்ந்து பாண்டியன் மயில் விஷயத்தில் முக்கிய முடிவு எடுத்திருக்கிறார் என்ன நடந்தது என்று பார்க்கலாம்.
இன்றைய எபிசோடின் ஆரம்பத்தில் பாண்டியன் குடும்பத்தினர் எல்லோருக்கும் ஜாமீன் கிடைக்கிறது. எல்லோரும் போலீஸ் ஸ்டேஷனில் கையெழுத்து போட்டு விட்டு வெளியே வருகின்றனர். பிறகு மீனாவின் அப்பா சம்மந்தி உங்களுக்காக எந்த பிரச்சனை என்றாலும் நாங்க வருவோம் உங்களுக்காக எந்த கோர்ட்டில் வேண்டும் என்றாலும் நாங்க வந்து சாட்சி சொல்லுவோம் என்று சொல்கின்றனர்.

அப்போது கோமதியின் அண்ணன்கள் இருவரும் இப்போதைக்கு பிரச்சனை எதுவும் இல்ல. பிறகு விசாரணைக்கு மட்டும் வந்தா போதும், எல்லோரும் வீட்டுக்கு போவோம் என்று சொல்ல, கோமதி தன்னுடைய அண்ணன்கள் கையை பிடித்துக் கொண்டு, இதுவரைக்கும் நம்ம ரெண்டு குடும்பத்துக்குள்ள அவ்வளவு சண்டை இருந்தது.
ஆனாலும் எனக்கு ஒரு பிரச்சனைன்னு வந்ததும் வந்து நின்னீங்க, நீங்க மட்டும் இல்லன்னா என் நிலைமை என்ன ஆயிருக்கும் என்று தெரியவில்லை என்று சொல்ல, அதற்கு முத்துவேல் என்ன இருந்தாலும் நாம ஒரே ரத்தம் தான்... பிடிக்கலைன்னு இருந்தாலும் பிரச்சனை என்று வரும்போது ஒதுங்கி இருக்க முடியாது என்று சென்டிமென்டாக பேசுகிறார்.
அப்போது பாண்டியனும் மச்சான்களின் கையைப் பிடித்து கண்கலங்க பேசுகிறார். அதைத் தொடர்ந்து எல்லோரும் வீட்டிற்கு வருகின்றனர். அப்போது காந்திமதியை பார்த்ததும் கோமதி கதறி அழுகிறார். மகளுக்கு ஆரத்தி எடுக்க சொல்கிறார். இதுவரைக்கும் நடந்த பிரச்சனை எல்லாம் போகட்டும் இனியாவது நல்லாதாவே நடக்கும், நீ வீட்டுக்குள்ள போய் குளிச்சுட்டு சாமி கும்பிடு என்று மகளை அனுப்பி வைக்கிறார்.
பிறகு பாண்டியன் வீட்டில் எல்லோரும் சாப்பிட்டு கொண்டு இருக்க, கோமதி மட்டும் சாப்பிடாமல் அழுது கொண்டிருக்கிறார். அப்போது பாண்டியன் கோமதியை சமாதானப்படுத்துகிறார். ஏற்கனவே சாப்பிடாமல் தான் நேற்று உடம்பு சரியில்லாமல் போய் ஹாஸ்பிடலுக்கு போக வேண்டிய சூழ்நிலை வந்தது. இப்போ மறுபடியும் அதே போல பண்ணாத என்று சாப்பிட வைக்கிறார்.
பிறகு சரவணனிடம் வந்து மன்னிப்பு கேட்கிறார். என்னால்தான் உன்னுடைய வாழ்க்கை இப்படி போயிடுச்சு இவ்வளவு பிரச்சனைக்கு நானும் காரணம் தான் என்று சொல்ல, அதற்கு சரவணன் நீங்க எனக்கு நல்லது தான் நினைச்சீங்க ஆனால் நடந்தது தான் வேற என்னுடைய கல்யாணத்தை வச்சு தானே இவ்வளவு பிரச்சனை வந்துச்சு எல்லாம் போகட்டும்.. ஆனால் இனி அந்த மயில் வீட்டுக்குள் வரவே முடியாது என்று சொல்கிறார்.
உடனே கோமதி கோபமாக, அவள் வந்துருவாளா? இதற்கு முன்பு கூட அவ மேல கொஞ்சம் கரிசனம் இருந்துச்சு. ஆனால் எல்லாரையும் ஸ்டேஷன்ல வச்சதுக்கு பிறகு அவளை இந்த வீட்டுக்குள்ள நடை ஏற்ற மாட்டேன் என்று கோமதி ஆவேசமாக பேசுகிறார். அப்போது பாண்டியன் நடந்ததெல்லாம் நடக்கட்டும் இனி அந்த குடும்பத்தால நம்ம குடும்பத்துக்கு ஒரு பிரச்சனை வர விடமாட்டேன் என்று முடிவாக சொல்லுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
Super Singer : சூப்பர் சிங்கர் அருணாவிற்கு கல்யாணம்.. மகிழ்ச்சியோடு வெளியிட்ட பதிவு! குவியும் வாழ்த்து -
குக் வித் கோமாளி 7 தொடங்கும் முன்பே பஞ்சாயத்து.. புகழ் பற்றி நெட்டிசன் போட்ட கமெண்டுக்கு வந்து விழுந்த அடி! -
சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா! -
பல லட்சம் ஊழியர்களுக்கு.. அடுத்தடுத்து கணக்கில் வரும் ரூ.3000.. யாருக்கு கிடைக்கும்? என்ன காரணம்? -
இரண்டாக உடையும் வானம்.. இடி, மின்னலுடன் பேய் மழை! வார்னிங் கொடுத்த வானிலை மையம் -
மூட்டை மூட்டையாக போய் தங்கத்தை அடகு வைக்கும் மக்கள்.. வெளியான ஷாக் தகவல்.. இப்படி ஒரு காரணமா? -
பத்திரப்பதிவில் இன்று முதல் புதிய ரூல்ஸ்! அதிகரிக்கும் சொத்து பதிவு செலவு! கலங்கும் நடுத்தர மக்கள் -
அந்த பேச்சு பேசின ஆதவ் அர்ஜுனா.. வில்லிவாக்கம் சம்பவத்தில் வாய் திறக்கலயே! கப்சிப் தவெக! -
ஏப்ரல் 1ம் தேதியான இன்று சம்பளம், கடன் எதுவுமே சாத்தியமில்லை... மக்கள் அறிய வேண்டிய உண்மை -
தங்கத்தை இப்போது வாங்கலாமா? இல்லை கொஞ்சம் காத்திருக்கலாமா? ஒரே வரியில் ஆனந்த் சீனிவாசன் விளக்கம் -
அண்ணாமலை போட்ட கண்டிஷன்.. அதிர்ந்துபோன டெல்லி.. கோவை வடக்குத் தொகுதியில் எகிறும் எதிர்பார்ப்பு












Click it and Unblock the Notifications