சிறகடிக்க ஆசை: முத்து- மீனா சொன்ன மகிழ்ச்சி செய்தி! கேக் கொடுத்து கொண்டாட்டம்! மனம் மாறிய விஜயா!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சிறகடிக்க ஆசை சீரியலில் 2026 ஏப்ரல் இரண்டாம் தேதிக்கான எபிசோடில் மனோஜின் மனமாற்றத்தை பார்த்து முத்துவும் மீனாவும் சந்தோஷப்படுகின்றனர். அதே நேரத்தில் முத்து மீனா வாழ்க்கையில் புதிய ஒரு மாற்றமும் வந்திருக்கிறது. அவர்கள் இருவரும் மீனாவின் அம்மாவிடம் சந்தோஷமான செய்தியை சொல்லி இருக்கின்றனர். என்ன நடந்தது என்று விரிவாக பார்க்கலாம்.

சிறகடிக்க ஆசை இன்றைய எபிசோடு
சிறகடிக்க ஆசை சீரியலின் இன்றைய எபிசோடு ஆரம்பத்தில், முத்துவும் மீனாவும் சந்தோஷமாக பேசிக் கொண்டிருக்கும்போது, உதவி செய்ததற்காக மனோஜ் முத்துவை கூப்பிட்டு தேங்க்ஸ் சொல்கிறார். இதுவரை எதற்கெடுத்தாலும் முத்துவை திட்டி வந்த மனோஜே இப்படியாக வந்து நன்றி சொன்னதை கேட்டு முத்து சந்தோஷப்படுகிறார் ஆனாலும் இதை கொஞ்சம் சிரிச்சால தான் சொன்னா என்னவா என்று மீனா விடும் சொல்லிக் கொண்டிருக்கிறார்.
வியாபாரிகள் எலக்சன்
இதற்கிடையில், பூக்கடை சங்க தேர்தல் நடைபெறவுள்ளதாக தகவல் வெளியாக, பூ கட்டுபவர்கள் பலர் சிந்தாமணியை சந்தித்து இந்த முறை நீங்கள் போட்டியிட்டு தலைவர் ஆக வேண்டும் என்று சொல்கின்றனர் முதலில் சிந்தாமணி என்னால நேரடியா நிற்க முடியாது நான் சொல்லுற ஆள் பெயர் அளவுக்குத்தான் தலைவராக இருப்பார் நான் தானே எல்லா விஷயத்தையும் பார்க்கிறேன் அதனால இந்த முறையும் அதுபோல நடக்கட்டும் என்று சொல்ல ஆனால் வந்தவர்கள் சிந்தாமணி கண்டிப்பாக நேரடியாக போட்டி போட வேண்டும் என்று சொல்கின்றனர். இதனால் சிந்தாமணியும் தேர்தலில் நிற்க சம்மதம் தெரிவிக்கின்றார்.
போட்டியாளராகவும் மீனா
மற்றொரு பக்கம், சில பெண்கள் மீனாவையும் சந்தித்து தேர்தலில் போட்டியிடுமாறு கேட்கின்றனர். சிந்தாமணியை எதிர்த்து நான் எப்படி நிற்பேன் என்று முதலில் மீனா தயங்குகிறார். ஆனால் முத்து பேசிப் புரியவைத்து, இறுதியில் மீனாவையும் தேர்தலில் நிற்க சம்மதிக்க வைக்கிறார்.
சிந்தாமணிக்கு தெரிந்த விஷயம்
இந்த தகவலை சிந்தாமணி ஆட்கள் வந்து சொல்கின்றனர் முதலில் சிந்தாமணி இதை நம்ப மறுக்கிற மீனா அவாள் எப்படி இப்படி ஒரு தேர்தலில் நிற்க முடியும் என்று கேட்கிறார் ஆனாலும் கண்டிப்பாக மீனாதான் நிற்கிறார் என்று சொன்னதும் இதை எப்படி சமாளிக்கலாம் என்று யோசிக்கிறார். அவருடைய ஆதரவாளர்களும், உங்களையே எதிர்த்து ஒருவர் நிற்கிறாரே என்று தூண்டி விடுகின்றனர். உடனே சிந்தாமணி, விஜயாவை பயன்படுத்தி மீனாவை தேர்தலில் இருந்து விலகச் செய்யலாம் என்று திட்டமிடுகிறார்.
தொடர்ந்து முத்துவும் மீனாவும் சந்திராவின் வீட்டிற்கு சென்று, ஸ்வீட் கொடுத்து தேர்தலில் நிற்கவுள்ளதாக தெரிவிக்கின்றனர். அப்போது அங்கே இருந்த ரேகா, சிந்தாமணியின் சூழ்ச்சிகளை அறிந்ததால், எதிரிகள் எதையும் செய்யக்கூடும் என்று எச்சரிக்கிறார். ஆனால் முத்து, அதையெல்லாம் பார்த்துக் கொள்ளலாம் என்று சொல்கிறார். இதற்கு ரேகாவும் மகிழ்ச்சி தெரிவிக்கிறார். சிந்தாமணியின் மகள் தான் ரேகா என்பது தெரியாமல், அவரின் முன்னிலையிலேயே அவருடைய அம்மாவைப் பற்றி பேசிக் கொண்டே இருக்கிறார்கள்.
சிறகடிக்க ஆசை சீரியல் கதை
இதனை தொடர்ந்து, சிந்தாமணி விஜயாவை தனியாக அழைத்து பேசுகிறார். மீனா தேர்தலில் போட்டியிடுகிறாள் என்று போட்டுக் கொடுக்கிறார், அதோடு மீனா தலைவர் ஆன பிறகு வீட்டில் உங்கள் மரியாதை குறைந்து விடும், அவளைப் பார்ப்பதற்காக பல பேர் வருவாங்க அவங்க கூட உட்கார்ந்து பேசுவா, இனிமேல் இது விஜயா வீடு என்று சொல்லமாட்டார்கள், தலைவி மீனா வீடு என்று தான் சொல்வார்கள் என்று ஏத்தி விடுகிறார். இதனால் விஜயாவும் கோபமடைந்து விடுகிறார். இப்படியாக இன்றைய எபிசோடு முடிவடைகிறது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications