சிறகடிக்க ஆசை: ரோகிணியால் முத்துவுக்கு வந்த பிரச்சனை! அண்ணாமலை எடுத்த முடிவு! கதையே மாறிப்போச்சு!
சென்னை: விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் 'சிறகடிக்க ஆசை' சீரியலில், ரோகிணியின் பழைய காதல் ரகசியம் வித்யாவுக்கு தெரிய வந்த நிலையில், இன்று அந்த ரகசியம் வெளியே பரவாமல் தடுக்க, ரோகிணி ஒரு 'மாஸ்டர் பிளான்' போட்டிருக்கிறார். தனது தந்திரத்தால், முத்துவுக்கு கிடைத்த சவாரியை தவிர்க்க வைத்து, 3 கணவர்களையும் வீட்டில் பூட்டிவிட்டு, மனைவிகள் கிளம்பிய சம்பவம் சுவாரசியமாக இருந்தது.
ரகசியத்தை காக்க ரோகிணியின் பிளான்
ரோகிணியின் பழைய கணவரின் குடும்பத்தினர் தான், முத்துவுக்கு கிடைத்த சவாரி என்பதை அறிந்த வித்யா, குழப்பத்தில் இருக்கிறார். வித்யாவிடம், "இப்ப என்ன செய்றது? நீ முருகன் கிட்ட சொல்லி முத்துக்கு அந்த சவாரி கொடுக்க விடாமல் பண்ணு" என்று ரோகிணி சொல்ல, வித்யாவோ, "அப்படியெல்லாம் சொன்னா முருகன் ஒத்துக்க மாட்டாரு. கோபப்படுவார். அதனால் நான் சொல்ல மாட்டேன்" என்று முடிவெடுக்கிறார்.
மாஸ்டர் பிளான்
உடனே, ரோகிணி கொஞ்ச நேரம் யோசித்துவிட்டு, "நானே முடிவெடுக்கிறேன்" என்றுச் சொல்கிறார். அவர் போட்டுள்ள பிளான் இதுதான்: "என்கிட்ட பாண்டிச்சேரி போறதுக்கு ஒரு கூப்பன் இருக்கு. வீட்ல யாரையும் இல்லாம மாமனார் மட்டும் தனியா இருந்தா, முத்து அவர விட்டு எங்கேயும் போகமாட்டான்" என்று சொல்லி, மொத்த பெண்களையும் கிளப்ப முடிவெடுக்கிறார்.
மகேஸ்வரியின் பாராட்டு
உடனே விஜயாவுக்கு போன் போட்டுப் பாண்டிச்சேரி போகும் விஷயத்தைச் சொல்கிறார். "அது லேடிஸ் மட்டும் போக வேண்டிய டிக்கெட். சுருதியை கேட்டு பார்க்கிறேன்" என்று விஜயா சொல்ல, ரோகிணி சந்தோஷப்படுகிறார். ரோகிணியின் சாமர்த்தியத்தைப் பார்த்து "இது மாதிரி ஷார்ட் டைம்ல இப்படி ஒரு பிளானை உன்னால மட்டும் தான் போட முடியும்" என்று மகேஸ்வரி பாராட்டுகிறார். வித்யா மட்டும் "இதெல்லாம் எவ்வளவு நாளைக்குன்னு தெரியலை" என்றுப் புலம்புகிறார்.
மனோஜின் சோகம்
ரோகிணி துணிகளைப் பேக் பண்ண, மனோஜ் சோகமாக வந்து, "போய் தான் ஆகணுமா ரோகிணி? இப்பதான் நம்ம லைஃபை ஸ்டார்ட் பண்ணோம். அதுக்குள்ள ரெண்டு நாள் எதுக்கு போகணும்?" என்று கேட்கிறார். "நான் உன்னை ரொம்ப மிஸ் பண்ணுவன் ரோகிணி. ரெண்டு நாளைக்குத் தாங்குற மாதிரி ஏதாவது கொடுத்துட்டுப் போ" என்று இருவரும் ரொமான்ஸ் செய்கின்றனர்.
ஸ்ருதியின் கணக்கு
மறுபக்கம் ஸ்ருதி பேக்கிங் பண்ணிக் கொண்டிருக்க, "நீ போய் தான் ஆகணுமா?" என்று கேட்கிறார். ரவி, "உனக்கும் எங்க அம்மாவுக்கும் செட்டாகாது என்று சொல்ல" அதற்கு ஸ்ருதி, "அவங்க என்கிட்ட எதுவும் பண்ண மாட்டாங்க. அவங்களுக்கு வசதியா இருக்கிறவங்களோட எதுவும் பேச மாட்டாங்க. உங்க அம்மா பேக்ரவுண்ட் வச்சு தான் பழகுவாங்க. இதே மீனாவா இருந்தா ஏதாவது சொல்லிக்கிட்டு இருப்பாங்க. ரோகிணியே இவ்வளவு நாள் திட்டிக்கிட்டு இருந்தாங்க. ஆனா, அவங்க ஒரு வருமானத்தைக் கொடுத்து உடனே ஃபர்ஸ்ட் நைட்டுக்கு ஏற்பாடு பண்ணிட்டாங்க" என்று சொல்ல, ரவி ஆச்சரியப்படுகிறான். ஸ்ருதி கிளம்பும்போது, "நீ போன உடனே ஜாலியா இருப்பேன்" என்று ரவி சொல்ல, ஸ்ருதி ரவியின் கையைக் கடித்துவிட்டுச் சென்று விடுகிறாள்.
தனித்து விடப்பட்ட அண்ணாமலை
மீனா, பாட்டியை பார்க்க சென்றிருக்கும் நிலையில், விஜயா, ரோகிணி, ஸ்ருதி மூவரும் பாண்டிச்சேரிக்கு புறப்பட்டதால், வீட்டில் அண்ணாமலை, முத்து, ரவி, மனோஜ் என ஆண்குடும்பம் மட்டும் மிஞ்சியது. முத்து வீட்டுக்கு வர, அண்ணாமலை சோகமாக இருக்கிறார். "எல்லாரும் இருந்தா வீடு கலகலப்பா இருக்கும். ஆனா, யாரும் இல்லன்னு வெறிச்சோடி இருக்கு" என்று சொல்ல, மீனா போன் போட்டு இருக்கிறார். அனைவரும் பிரசாதம் போய் இருக்கும் விஷயத்தை மீனாவிடம் சொல்கிறார். உடனே முத்து, "நான் எங்கேயும் போக மாட்டேன். அப்பா கூட தான் இருப்பேன்" என்றுச் சவாரியை ரத்து செய்கிறார்.

ரவியின் கம்பெனி
அண்ணாமலை, "நான் என்ன குழந்தையா? நீங்க போய் உங்க வேலையை பாருங்க" என்று சொல்லியும் முத்து பிடிவாதமாக இருக்கிறான். "நானும் போக மாட்டேன்" என்று ரவியும், "நானும் லீவு சொல்லிடறேன்னு" முத்துவும் சொல்லுகிறார்கள். மனோஜை விசாரிக்கும்போது, "நீங்க மட்டும் ஜாலியா வீட்ல இருப்பீங்க. நான் மட்டும் வேலைக்குப் போறேன்" என்று மனோஜ் சொல்லிவிடுகிறான்.
அடுத்த இரண்டு நாட்கள், பெண்கள் இல்லாத வீட்டில் இந்த மூவர் அணியும், தனிமையில் அண்ணாமலையும் என்னென்னச் செய்யப் போகிறார்கள் என்பதைப் பார்ப்பதில் சுவாரசியம் கூடுகிறது.
-
குக் வித் கோமாளியில் சர்ப்ரைஸ்.. நீக்கப்பட்ட ரக்ஷன்.. புது போட்டியாளராக “பரிதாபங்கள்” டிராவிட்! செம சம்பவம் -
மாதம்பட்டி ரங்கராஜனின் சவால்! நான் இந்த இடத்தில் வந்து நிற்க காரணம்.. உருக்கமாக போஸ்ட் போட்ட ஜாய்! அடுத்த பஞ்சாயத்து -
பாண்டியன் ஸ்டோர் 2: கோமதியால் கதறி அழுத பாண்டியன்.. காந்திமதி சொன்ன விஷயம்! உடைந்த குடும்பம் -
குக் வித் கோமாளியில் பஞ்சாயத்து மேல் பஞ்சாயத்து! மணிமேகலை இடத்தில் ஜோயா! புதிதாக வந்த ரோஜா! காரணம் இருக்கு! -
Pandian Stores 2 serial update: பாண்டியன் செய்த முட்டாள்தனம்.. உயிருக்கு போராடும் கோமதி.. அரசி கேட்ட கேள்வி! -
சென்னை இளைஞர் கொடைக்கானலுக்கு நண்பர்களுடன் ஜாலியாக சுற்றுலா.. கற்பனையில் நினைக்காத சம்பவம் -
'இல்லத்தரசி' கூப்பன்.. எங்கே வாங்கலாம்? எப்படிப் பயன்படுத்தலாம்? கோட்டை வட்டாரத்தில் கசிந்த தகவல் -
ரூ.100 கோடியை போய் FDல் போட்டு இருக்காரே.. விஜய் சொதப்பிட்டாரே.. யாருங்க இந்த ஐடியா தந்தது? -
கார் ஓட்டுநரின் மகனுக்கு சீட்! எங்கயோ இடிக்குதே! விஜய்யின் ரியல் எஸ்டேட் தொழில் குறித்து ஷாக் தகவல் -
மகளிர் உரிமை தொகை கிடைக்காது.. ஆனாலும் நாளை முதல் தமிழக அரசு தரும் ரூ.2000.. யாருக்கு வரும்? -
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
திமுக-அதிமுக இடையே கடும் போட்டி.. ஆட்சியை பிடிப்பது யார்? ஆட்டத்திலேயே இல்லாத தவெக! புதிய சர்வே












Click it and Unblock the Notifications