சென்னை உட்பட 23 மாவட்டங்களில் சம்பவம் இருக்கு! ஆரஞ்சு + மஞ்சள் அலர்ட்! அடுத்த 2 மணி நேரம் உஷார்
சென்னை: இலங்கையை ஒட்டிய வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, வட கடலோர மாவட்டங்களில் மழையை கொடுத்து வருகிறது. இந்நிலையில், அடுத்த 2 மணி நேரத்திற்கு சென்னை உட்பட 23 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு மற்றும் மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டிருக்கிறது.
இது குறித்து சென்னை வானிலை ஆய்வு மையம் விடுத்துள்ள அறிவிப்பில், "சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டத்திற்கு அடுத்த 2 மணி நேரத்திற்கு ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது.

மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர், தஞ்சாவூர் மாவட்டங்களில் அடுத்த இரண்டு மணி நேரத்தில் இடி, மின்னலுடன் மழை பெய்யும். ராணிப்பேட்டை, கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, திருப்பூர், கோயம்புத்தூர், ஈரோடு, நீலகிரி, நாமக்கல், சேலம், கரூர், திருச்சி, அரியலூர், பெரம்பலூர், விழுப்புரம் மற்றும் கடலூரில் கனமழைக்கான மஞ்சள் அலர்ட் கொடுக்கப்பட்டிருக்கிறது" என தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
ஆரஞ்சு, மஞ்சள் அலர்ட் என்றால் என்ன?
மிதமானது முதல் கனமழை பெய்யும்போது இந்த அலர்ட் கொடுக்கப்படுகிறது. 24 மணி நேரத்தில் 6-12 செ.மீ வரை மழை பெய்யும் என்கிற நிலை இருக்கும்போது, மஞ்சள் அலர்ட் கொடுக்கப்படும். 24 மணி நேரத்தில் 12-20 செ.மீ அளவுக்கு மழை பெய்ய வாய்ப்பு இருக்கும்போது ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்படுகிறது. ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டால், கன முதல் மிக கனமழை வரை பெய்யும் என்று அர்த்தம்.
-
Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன? -
இன்று முதல் அடுத்த ஒரு வாரத்துக்கு மழை பிச்சு உதறும்..தென் தமிழகத்திற்கு அலர்ட் கொடுத்த வானிலை மையம் -
தமிழகத்தின் 44 தனித்தொகுதிகளில் 90% வேட்பாளர்கள் தகுதி நீக்கம்? அர்ஜுன் சம்பத் பொதுநல வழக்கு -
RTE admissions: தனியார் பள்ளிகளில் இலவச கல்வி! ஆர்டிஇ சேர்க்கை எப்போது? யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்? -
Spot the difference: இந்த இரு படங்களுக்கிடையே 3 வித்தியாசங்களை கண்டுபிடியுங்கள்! சவாலுக்கு ரெடியா? -
எவ்வளவு வேகம்! சிட்டிக்கு நடுவே வளர்ந்து நிற்கும் ஸ்டீல் ராட்சசன்.. சென்னையின் காஸ்ட்லி ப்ராஜெக்ட் -
Gold Loan: தங்க நகைக் கடன் இனி இவ்வளவுதான்! ரிசர்வ் வங்கியின் புதிய விதிகள் இன்று முதல் அமல்! -
இன்று முதல் புதிய வருமான வரி விதிகள் அமல்! சம்பளதாரர்கள் கவனிக்க வேண்டிய 'டாப் 10' மாற்றங்கள்! -
Low Pressure: காற்றழுத்த தாழ்வு பாதையால் நடக்கும் மேஜிக்! தென் கடலோர மாவட்டங்களில் பிச்சு உதறப் போகுது மழை! -
BJP Candidate List: தமிழக பாஜக வேட்பாளர்கள் யார்? இன்று வெளியீடு! அண்ணாமலை பெயர் இருக்காதா? -
அரசு ஊழியர்களுக்கு ஹேப்பி நியூஸ்..டபுள் ஆன ஊதியம்! அதிரடியாக வெளியான ஆர்டர்! யார் யாருக்கு? எவ்வளவு? -
இடி, மின்னலுடன் மழை கொட்டப்போகுது.. 0.9 கி.மீ உயரத்தில் நடந்த வானிலை மாற்றம்! சம்பவம் இருக்கு












Click it and Unblock the Notifications