Gold price: மீண்டும் அதிரடியாக குறைந்த தங்கம் விலை.. நகை பிரியர்கள் ஹேப்பி.. ஒரு சவரன் ரேட் என்ன?
சென்னை: தங்கம் விலை கடந்த சில நாட்களாகவே குறைந்து வந்த நிலையில் நேற்று பெரிய அளவில் உயர்ந்து அதிர்ச்சி கொடுத்து வருகிறது. இந்த நிலையில் இன்று தங்கம் விலை அதிரடியாக சரிந்து இருக்கிறது. சவரனுக்கு ரூ.800 குறைந்துள்ளதாக நகை பிரியர்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.
நேற்று தங்கம் விலை காலையில் குறைந்து இருந்த நிலையில் மாலையில் அதிகரித்தது. காலையில் பெயருக்கு ரூ.480 குறைந்த தங்கம் விலை மாலையில் ஒரு சவரன் ரூ.1,380 அதிகரித்து அதிர்ச்சி கொடுத்து இருந்தது. மாத இறுதி நாளான இன்று தங்கம் விலை எப்படி இருக்குமோ என நினைத்த நிலையில் தங்கம் விலை வீழ்ச்சியடைந்துள்ளது.
தங்கம் விலை கடந்த மார்ச் 1 ஆம் தேதியுடன் ஒப்பிடும் போது சுமார் 15 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது என்றாலும் தற்போது மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது நகை பிரியர்களுக்கு சற்று கலக்கத்தை ஏற்படுத்தி இருக்கிறது.

தாறுமாறாக உயரும் தங்கம் விலை
தங்கம் விலை கடந்த மார்ச் 1 ஆம் தேதியுடன் ஒப்பிடும் போது சுமார் 15 ஆயிரம் என்ற அளவில் குறைந்துள்ளது என்றாலும் தற்போது மீண்டும் உயரத் தொடங்கியிருக்கிறது. நேற்று முன் தினமும் ரூ.1840 என்ற அளவில் உயர்ந்து இருந்ததால் இன்று விலை எப்படி இருக்கும் என்ற எதிர்ப்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.
கடந்த 2025 ஆம் ஆண்டு ஜனவரி 1 ஆம் தேதி ஒரு சவரன் தங்கம் விலை ரூ.57 ஆயிரம் என்று இருந்தது. ஒரே வருடத்தில் தாறுமாறாக உயர்ந்த தங்கம் விலை கடந்த ஜனவரி 1 ஆம் தேதி ரூ.96 ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரே வருஷத்தில் கிட்டத்தட்ட 40 ஆயிரம் வரை உயர்ந்து நகை பிரியர்கள் மற்றும் சாமானிய மக்களுக்கு பேரதிர்ச்சியை கொடுத்தது. தங்கம் விலை வரலாற்றில் இதுவே அதிக உயர்வாக பார்க்கப்பட்டது.
ஏற்ற இறக்கத்துடன் தங்கம் விலை
ஆனால், இதெல்லாம் சாம்பிள் தான், இனி தான் மெயின் பிக்சர் இருக்கு என்பது போல ஒரு வருஷத்தில் உயர்ந்த தங்கம் விலை ஒரே மாதத்தில் ஏறும் வகையில் ராக்கெட் வேகத்தில் சென்றது தங்கம் விலை. அதாவது பிப்ரவரி மாதத்திலேயே தங்கம் விலை ரூ.1.25 லட்சம் என்று ஆகிவிட்டது. கிட்டத்தட்ட ஒரே மாதத்தில் ரூ.30 ஆயிரம் அதிகரித்து மீண்டும் பேரதிர்ச்சியை கொடுத்தது.
அமெரிக்க அதிபர் டிரம்ப் விதித்த வரிகள், உலக பொருளாதாரத்தில் நிச்சயமற்ற தன்மை போன்ற காரணங்களால், முதலீட்டாளர்கள் பலரும் பாதுகாப்பு கருதி தங்கம் மற்றும் வெள்ளி மீதே முதலீடுகளை குவித்து வந்தனர். தங்கம் விலை உயர்வுக்கு இதுவும் ஒரு காரணமாக பர்க்கப்பட்டது. இதையடுத்து தங்கம் விலை குறைவதும், ஏறுவதுமாக இருந்து வருகிறது.
ஒரு சவரன் எவ்வளவு?
குறைந்துகொண்டே வந்தாலும் திடீரென விலை அதிகரித்து உயரத் தொடங்கிவிடுகிறது. கடந்த சனிக்கிழமை தங்கம் விலை ஒரு கிராம் சென்னையில் ரூ.13,360-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,09,280-க்கு விற்பனை செய்யப்பட்டது.
நேற்று முன் தினம் வார விடுமுறை நாள் அதே விலை நீடித்தது. ஆனால் நேற்று காலையில் தங்கம் விலை சற்று சரிந்தது. அதாவது சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை நேற்று காலையில் ரூ.640 குறைந்து ரூ.1,08,800-க்கு விற்பனை செய்யப்பட்டது. இதேபோல் ஒரு கிராம் தங்கம் ரூ.80 குறைந்து ரூ.13,600-க்கு விற்பனை செய்யப்பட்டது. ஆனால் மாலையில் மீண்டும் தங்கம் விலை அதிகரித்தது.
தங்கம் விலை காலையில் ரூ.480 குறைந்து இருந்த நிலையில் மாலையில் ரூ.1,360 அதிகரித்தது. சென்னையில் ஒரு சவரன் தங்கம் விலை ரூ.1,10,160-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் ஒரு கிராம் ஆபரணத் தங்கம் ரூ.170 அதிகரித்து ரூ.13,770-க்கு விற்பனை செய்யப்படுகிறது. இன்றாவது விலை குறையுமா என எதிர்பார்ப்பு ஏற்பட்டது. அதன்படியே இன்று தங்கம் விலை இன்று குறைந்துள்ளது. சென்னையில் இன்று ஒரு சவரன் தங்கம் விலை ரூ.800 குறைந்து ரூ.1,09,360-க்கு விற்பனை செய்யப்படுகிறது. சென்னையில் இன்று ஒரு கிராம் தங்கம் ரூ.100 குறைந்து ரூ.13,670-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
வெள்ளி விலையும் உயர்வு
தங்கம் விலையை போலவே வெள்ளி விலையும் ஏற்ற இறக்கத்துடன் இருந்து வந்தது. கடந்த சனிக்கிழமை சென்னையில் ஒரு கிராம் வெள்ளி ரூ.250-க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று முன் தினமும் அதே விலையே நீடித்தது. ஆனால் நேற்று மாலையில் தங்கத்தை போல வெள்ளியும் அதிகரித்தது. இதன்படி மாலையில் ரூ.5 அதிகரித்து ஒரு கிராம் வெள்ளி ரூ.255-க்கு விற்பனை செய்யப்பட்டது. இந்த நிலையில் தங்கம் விலை குறைந்தால் வெள்ளி விலையும் குறையும் என்பது போல, கிராமுக்கு ரூ.5 குறைந்துள்ளது.சென்னையில் வெள்ளி ஒரு கிராம் இன்று ரூ.250-க்கு விற்பனை செய்யப்படுகிறது.
தங்கம் விலை நிலவரம்:
31.03.2026 - ஒரு சவரன் ரூ.1,10,160 (இன்று)
30.03.2026 - ஒரு சவரன் ரூ.1,10,160 (நேற்று மாலை)
30.03.2026 - ஒரு சவரன் ரூ.1,08,800 (நேற்று காலை)
29.03.2026 - ஒரு சவரன் ரூ.1,09,280
28.03.2026 - ஒரு சவரன் ரூ.1,09,280
27.03.2026- ஒரு சவரன் ரூ.1,07,440
26.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,800 (மாலை)
26.03.2026- ஒரு சவரன் ரூ.1,09,360 (காலை)
25.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,800
24.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,000
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,06,720 (மாலை)
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,01,360 (மதியம்)
23.03.2026- ஒரு சவரன் ரூ.1,03,600 (காலை)
22.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960
21.03.2026- ஒரு சவரன் ரூ.1,08,960
20.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,600
19.03.2026- ஒரு சவரன் ரூ.1,11,200 (மாலை)
19.03.2026- ஒரு சவரன் ரூ.1,14,400 (காலை)
18.03.2026- ஒரு சவரன் ரூ.1,16,560
17.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,200
16.03.2026- ஒரு சவரன் ரூ.1,17,680
15.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
14.03.2026- ஒரு சவரன் ரூ.1,18,080
13.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,200
12.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,760
11.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,960
10.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
9.03.2026- ஒரு சவரன் ரூ.1,19,600
8.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
7.03.2026- ஒரு சவரன் ரூ.1,20,400
6.03.2026 - ஒரு சவரன் ரூ.1,19,680
5.03.2026 - ஒரு சவரன் ரூ.1,20,960
4.03.2026 - ஒரு சவரன் ரூ.1,21,600
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,23,720 (மாலை)
3.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,200 (காலை)
2.03.2026 - ஒரு சவரன் ரூ.1,25,280
1.03.2026 - ஒரு சவரன் ரூ.1,26,200
-
காற்றழுத்த தாழ்வு பாதை.. பிச்சு உதறப் போகும் மழை.. இடி, மின்னலுடன் கொட்டப் போகுது! -
தாள்ளாடுதே தங்க சந்தை.. தாறுமாறாக விலை இருப்பது ஏன்? இன்னும் எத்தனை நாளைக்கு இப்படியே இருக்கும்? -
சர்வதேச தங்க மார்கெட்டில் பூகம்பம்.. 25 ஆண்டுகளில் முதல்முறையாக தங்கத்தை விற்று தள்ளும் ரஷ்யா! -
அடுத்த ரவுண்டு ஆரம்பம்.. வெயிலுக்கு பிரேக் தரும் மழை.. 2 ஆம் தேதி வரை கொளுத்த போகுது! வானிலை மையம் -
தங்கம் ரொம்பவே ரிஸ்க்.. "இந்த" கோல்ட் பக்கமே போக வேண்டாம்.. உடைத்து பேசிய ஆனந்த் சீனிவாசன் -
விஜய் வேட்பாளர்களை அறிமுகம் செய்யும் நேரம், திரிஷா வெளியிட்ட பதிவு.. இப்படி பண்றீங்களேம்மா? -
தவெக வேட்பாளர்கள் அறிமுக கூட்டம் LIVE: 234 தொகுதிகளில் 23 பெண்களுக்கு மட்டுமே வாய்ப்பு அளித்த விஜய் -
வில்லிவாக்கம் விஸ்வரூபம்.. ஆதவ் இதை எதிர்பார்த்து இருக்கவே மாட்டாரு.. கேம் சேஞ்சர் கார்த்திக் மோகன் -
விஜய்க்கு எதிராக பெரம்பூர், திருச்சியில் கிழக்கில்.. களமிறங்கும் திமுக, அதிமுக வேட்பாளர்கள் யார்? -
Bose Venkat: சீட் தராததால் கட்சி மாறுகிறேனா? நான் திமிர்பிடித்த திமுககாரன்! போஸ் வெங்கட் பொளேர்! -
அரசியலன்னா இதுதான்.. எப்போ என்ன நடக்கும்னே தெரியாது.. ஸ்டாலின் டிக் அடித்த பெயர்.. பலர் ஷாக் -
இதுவரை திமுக ஜெயிக்காத.. கோவை தெற்கு தொகுதியைத் கேட்டு வாங்கிய செந்தில் பாலாஜி.. என்ன காரணம்?












Click it and Unblock the Notifications