Gold Loan: ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகை.. உண்மையில் எவ்வளவு கடன் கிடைக்கும்? - முழு விபரம்
இந்தியாவில் தங்க நகை கடன் என்பது நடுத்தர மற்றும் கிராமப்புற குடும்பங்களின் அவசர நிதி ஆதாரமாக நீண்டகாலமாக பயன்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், ஏப்ரல் 1, 2026 முதல் தங்க நகை கடனில் பெரிய மாற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய ரிசர்வ் வங்கி (RBI) புதிய விதிகளை அறிமுகப்படுத்தியதன் மூலம், தங்க கடன் பெறும் முறை முழுமையாக மாறியுள்ளது. குறிப்பாக, "கையில் இருக்கும் தங்கத்திற்கு உண்மையில் எவ்வளவு கடன் கிடைக்கும்?" என்ற கேள்வி இப்போது மக்கள் மத்தியில் அதிகமாக எழுந்துள்ளது.

புதிய LTV முறை
முன்பு வங்கிகளும், NBFC-களும் தங்கத்தின் மதிப்பில் 75% வரை மட்டுமே கடன் கிடைக்கும் என்ற ஒரே விதி இருந்தது. ஆனால் 2026 முதல் இது 'Tiered Loan-to-Value (LTV)' அமைப்பாக மாற்றப்பட்டுள்ளது. அதாவது அடுக்கு தர நிலை அடிப்படையில் தங்க கடன் வழங்கும் முறையில் ஏப்ரல் 1 முதல் நடைமுறைப்படுத்தப்பட்டு உள்ளது.
அதன்படி, கடன் தொகைக்கு ஏற்ப LTV மாறும். அதாவது நீங்கள் ரூ.2.5 லட்சம் வரை தங்க நகையை அடமானமாக வைத்து கடன் எடுத்தால் தங்கத்தின் மதிப்பில் சுமார் 85% வரை வங்கிகள் கடன் அளிக்கும், ரூ.2.5 லட்சம் முதல் ரூ.5 லட்சம் வரையில் கடன் எடுத்தால் தங்கத்தின் மதிப்பில் சுமார் 80% வரை வங்கிகள் கடன் அளிக்கும், இதுவே ரூ.5 லட்சத்திற்கு மேல் கடன் பெற நினைத்தால் 75% வரை கடன் பெற முடியும்.
இந்த மாற்றம் சிறிய அளவில் கடன் பெறுபவர்களுக்கு கூடுதல் நன்மை தரும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
ரூ.5 லட்சம் மதிப்பிலான தங்க நகை
ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கம் வைத்திருக்கும் ஒரு குடும்பத்திற்கு, இன்றைய 22 காரட் விலையான 13990.00 அடிப்படையில் கணக்கிட்டால்
35.73 கிராம் தங்கம் அப்படியானால் 4.5 பவுன் தங்கம். இந்த 4.5 பவுன் தங்க நகைக்கு உங்களுக்கு எவ்வளவு கடன் கிடைக்கும்..?
முதலாவது, ரூ.2.5 லட்சம் கடன் பெற விரும்பினால், 85% LTV அடிப்படையில் சுமார் ரூ.2.94 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை மட்டுமே அடகு வைக்க வேண்டும்.
இரண்டாவது, ரூ.3 லட்சம் கடன் பெறும் சூழலில், 80% LTV அடிப்படையில் சுமார் ரூ.3.75 லட்சம் மதிப்புள்ள தங்கத்தை அடகு வைக்க வேண்டும்.
மூன்றாவது, ரூ.4 லட்சம் கடன் பெற விரும்பினால், முழு ரூ.5 லட்சம் மதிப்புள்ள தங்கத்தையும் அடகு வைக்க வேண்டி இருக்கும்.
பழைய விதிகளுடன் ஒப்பீடு
புதிய LTV அமைப்பின் முக்கிய நன்மை, ஒரே தங்க மதிப்புக்கு அதிக கடன் பெறும் வாய்ப்பு. உதாரணமாக, ரூ.5 லட்சம் தங்கத்திற்கு முன்பு அதிகபட்சம் ரூ.3.75 லட்சம் மட்டுமே கிடைத்த நிலையில், இப்போது ரூ.4 லட்சம் வரை பெற முடிகிறது.
இதனால் அவசர காலங்களில் கூடுதல் நிதிஆதாரம் கிடைக்கும்.
தங்கத்தின் மதிப்பு கணக்கிடும் புதிய முறை
இதேபோல் வங்கிகளுக்கும், என்பிஎப்சி-க்கும் தங்கத்தின் மதிப்பு கணக்கிடும் விதியும் மாற்றப்பட்டுள்ளது. கடந்த 30 நாட்களின் சராசரி விலை அல்லது முந்தைய நாள் விலை - இதில் எது குறைவான மதிப்போ அதை கணக்கில் எடுத்துக்கொள்ளப்படும். இதனால் விலை மாற்றத்தின் தாக்கத்தை வங்கிள் எளிதாக தற்காத்துக்கொள்ள முடியும்.
இந்த விலை, Indian Bullion and Jewellers Association (IBJA) அல்லது SEBI பதிவு செய்யப்பட்ட அமைப்புகளின் தரவின் அடிப்படையில் நிர்ணயிக்கப்படும். இது வங்கிகளுக்கும், நுகர்வோருக்கும் பாதுகாப்பான முறையாக கருதப்படுகிறது.
முக்கியமாக கவனிக்க வேண்டிய அம்சம்
2026 விதிகளில் மிகவும் முக்கியமான மாற்றம் , வாங்கிய நகை கடனை திருப்பிச் செலுத்தும் கால வரம்பு. தங்க கடன்களுக்கு அதிகபட்சமாக 12 மாத காலமே வழங்கப்படும்.
உதாரணமாக, ரூ.4 லட்சம் கடனை வருடத்திற்கு 10% வட்டியில் எடுத்தால், 12 மாதங்களுக்கு சுமார் ரூ.40,000 வட்டி செலவாகும். மொத்தமாக ரூ.4.4 லட்சம் திருப்பிச் செலுத்த வேண்டும்.
மறைந்திருக்கும் முக்கிய மாற்றம்
இந்த புதிய 'Tiered LTV' அமைப்பு, கடன் தொகையைப் பொருத்தே எவ்வளவு தங்கம் அடகு வைக்க வேண்டும் என்பதை தீர்மானிக்கிறது.
இதனால், ஒரே ரூ.5 லட்சம் தங்கத்துக்கு பல்வேறு கடன் விருப்பங்கள் உருவாகின்றன. ஆனால் அதே நேரத்தில், எந்த அளவு தங்கத்தை "lock" செய்ய வேண்டும் என்பது முக்கிய முடிவாக மாறுகிறது.
2026-இல் சிறந்த தங்கக் கடனை வழங்கும் வங்கி எது?
| வங்கி | வட்டி விகிதம் | குறைந்தபட்சக் கடன் | கால அளவு | LTV விகிதம் |
| முத்தூட் ஃபைனான்ஸ் | 11.50% முதல் | ரூ.1,500 | 12 மாதம் | 75.00% |
| மணப்புரம் ஃபைனான்ஸ் | 9.90% முதல் | ரூ.3,000 | 12 மாதம் | 75.00% |
| எஸ்.பி.ஐ | 8.25% முதல் | ரூ.20,000 | 36 மாதம் | 75.00% |
| பஜாஜ் ஃபைனான்ஸ் | 9.50% முதல் | ரூ.5,000 | 12 மாதம் | 75.00% |
| IIFL ஃபைனான்ஸ் | 11.88% முதல் | ரூ.3,000 | 24 மாதம் | 75.00% |












Click it and Unblock the Notifications