30 வருட சரிவில் தங்கம்.. இந்தியாவுக்கா இந்த நிலைமை? ஆடிப்போன உலக நாடுகள்!
ஏப்ரல் மாதத்தில் இந்தியாவின் தங்க இறக்குமதி கடுமையாகக் குறைந்துள்ளது. உலகின் இரண்டாவது பெரிய தங்க நுகர்வு நாடான இந்தியா மார்ச் மாதம் வெறும் 15 மெட்ரிக் டன் தங்கம் மட்டுமே இறக்குமதி செய்துள்ளது. கடந்த ஆண்டு இதே ஏப்ரல் மாதம் 35 டன்னும், முந்தைய நிதியாண்டில் சராசரியாக ஒரு மாதத்திற்கு 60 டன்னும் இறக்குமதி செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதன் மூலம் ஏப்ரல் மாதம் 30 வருடத்தில் குறைவான தங்க இறக்குமதி அளவை பதிவு செய்துள்ளது இந்தியா.
இந்த சரிவுக்கான முக்கிய காரணம் புதிய வரி சுமை. 2017-ல் ஜிஎஸ்டி அறிமுகப்படுத்தப்பட்டதில் இருந்து தங்கம் இறக்குமதி செய்யும் வங்கிகளுக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டிருந்த நிலையில், 3% ஐஜிஎஸ்டி வரியை திடீரென சுங்க துறை வசூலிக்க தொடங்கியுள்ளனர்.

இதனால் வரி செலுத்தாத வங்கிகளின் தங்கக் இறக்குமதியை சுங்கத்துறை துறைமுகங்களில் அனுமதிக்க மறுத்துவிட்டன. முறையான அரசு உத்தரவு இல்லாததும் இந்தப் பிரச்சனையை அதிகப்படுத்தியுள்ளது. இதனால் இந்திய சர்வதேச புல்லியன் எக்ஸ்சேஞ்ச் வழியாக மிகக் குறைந்த அளவு தங்கம் மட்டுமே சந்தைக்கு வந்துள்ளது.
ஏப்ரல் மாதம் அட்சய திரிதியை போன்ற முக்கிய பண்டிகை நாட்களில் தங்கம் வாங்கும் மத்தியில் தேவை அதிகமாக இருக்கும். ஆனால் இந்த ஆண்டு வரி நிச்சயமின்மை காரணமாக சப்ளை தடைபட்டுள்ளது. இதேவேளையில் தங்கம் இறக்குமதி செய்யும் வங்கிகளுக்கான அனுமதியும் காலதாமதமாக வழங்கப்பட்ட காரணத்தாலும் இறக்குமதி குறைந்தது.
இதனால் மார்ச் மாதத்தில் தங்க இறக்குமதிக்கான செலவு சுமார் 1.3 பில்லியன் டாலராக மட்டுமே உள்ளது. முந்தைய நிதியாண்டில் மாதச் சராசரி 6 பில்லியன் டாலராக இருந்தது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் அதிகம் தங்கம் வாங்கும் நாடான இந்தியாவின் இறக்குமதி குறைந்துள்ளது உலக தங்க விலைக்கும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த சரிவு குறுகிய காலத்தில் உலக சந்தையில் விலை வீழ்ச்சியை ஏற்படுத்தியது.
வரி தொடர்பாக வங்கிகள் மற்றும் வர்த்தகர்களிடையே குழப்பம் ஏற்பட்டுள்ள நிலையில், முறையான உத்தரவு வரும் வரை சாதாரண இறக்குமதி நடவடிக்கைகள் தொடர்வது கடினம். வரி பிரச்சனை விரைவில் தீர்க்கப்பட்டால் அடுத்த மாதங்களில் இறக்குமதி அதிகரிக்க வாய்ப்பு உள்ளது.












Click it and Unblock the Notifications