தம்பி உனக்கு ஒரு அதிர்ச்சி.. "ஒரு கிராம் தங்கம் ஒரு லட்சம்.. விரைவில்!" இடியை வீசிய ஆனந்த் சீனிவாசன்
சென்னை: நமது நாட்டில் ஏழை மற்றும் நடுத்தர மக்களின் முதல் சேமிப்பாகத் தங்கம் இருக்கும் சூழலில், விலை தொடர்ந்து உயர்வது பலருக்கும் அதிர்ச்சி கொடுப்பதாகவே இருக்கிறது. இதற்கிடையே தங்கம் விலை உயர்வுக்கான காரணத்தை விளக்கியுள்ள பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன், இதே டிரெண்ட் தொடர்ந்தால் ஒரு கிராமே ஒரு லட்ச ரூபாய் வரை கூடப் போகலாம் என எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த சில காலமாகப் பெரியளவில் ஏற்ற இறக்கம் இல்லாமல் இருந்த தங்கம் விலை இப்போது மீண்டும் உயரத் தொடங்கியுள்ளது. அமெரிக்காவில் டிரம்ப்பின் வரியை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் ரத்து செய்தவுடனேயே டிரம்ப் புதிய வரிகளை விதித்ததே இதற்குக் காரணமாகும். இதற்கிடையே தங்கம் விலையில் ஏற்படும் தாக்கம் தொடர்பாகப் பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் சில முக்கிய தகவல்களைப் பகிர்ந்துள்ளார்.

ஆனந்த் சீனிவாசன்
இது தொடர்பாக அவர் தனது யூடியூப் பக்கத்தில், "வரி விவகாரத்தில் டிரம்ப்பிற்குப் பின்னடைவு ஏற்பட்டுள்ளது. அமெரிக்கா வசூலித்த வரிகளையும் திரும்பத் தர வேண்டிய சூழல் உருவாகியுள்ளது. இதனால் சர்வதேச சந்தையில் தங்கம் வலி சட்டென உயர்ந்து 5100 டாலருக்கு போய்விட்டது. அது தங்கத்திற்கு நற்செய்தி. ஞாயிற்றுக்கிழமை தங்கத்தில் மாற்றம் இல்லை. இந்த வாரம் தான் தங்கம் என்னவாகும் என்று தெளிவாகத் தெரியும். வரி விவகாரத்தில் ஏற்பட்ட பின்னடைவை மறைக்கக் கூட டிரம்ப் ஈரானைத் தாக்கலாம்!" என்றார்.
இனி குறையாது?
தங்கம் விலை உச்சத்தில் இருந்து 20% வரை சரிந்துவிட்டது. இனிமேல் சரியாது, உயரவே செய்யும் என்று சில வல்லுநர்கள் சொல்கிறார்கள். இது தொடர்பான கேள்விக்கு அவர், "டெக்கனிக்கலாக அனாலிசிஸ் எல்லாம் விட்டுவிடுங்கள். இப்போது நிச்சயம் நோட்டு அடிக்கப் போகிறார்கள். வரியைத் திரும்பச் செலுத்த வேண்டிய சூழல் வந்தால் அதற்கு மட்டும் 120 பில்லியன் டாலர் நோட்டு அடிக்கணும். திடீரென 120 பில்லியன் டாலர் மதிப்பிலான தங்கம் கூடுதலாக வந்துவிடாது. இதான் மேட்டர். நோட்டு அடிப்பதை கண்ட்ரோல் செய்ய முடியுமா? இப்போதைக்கு முடியாது. அவ்வளவு தான் மேட்டர்!
உச்சம்
ஒரு அவுன்ஸ் தங்கம் 25000 டாலர் வரை போகலாம் என்று சிலர் சொல்வது குறித்துக் கேட்ட போது, "வல்லுநர்கள் நிச்சயம் கணிப்பார்கள். ஆனால், நான் பொருளாதார வல்லுநர் இல்லை.. ஒரு சாதாரண இன்ஜினியர். தங்கம் கோல்டு 23,000 டாலர்- 24,000 டாலர் போகுமா என்றால் போகும்.. எப்போது போகும் என்பதே கேள்வி.. இந்த ஆண்டு இறுதிக்குள் போகுமா.. நிச்சயம் போகாது.
ஒரு லட்சத்திற்குப் போகலாம்!
இப்போதைய விலையில் இருந்து 4 மடங்கு உயர வேண்டும். தங்கம் விலை 1000 டாலரில் இருந்து 5000 டாலர் போகக் கிட்டத்தட்ட 7 ஆண்டுகள் ஆனது. தங்கம் விலை 2012-2013 காலக்கட்டத்தில் 1000 டாலரில் இருந்தது. 1000 டூ 5000 என 4 மடங்கு உயர 6 ஆண்டுகள் ஆனது. அதே 4 மடங்கு மீண்டும் உயர வேண்டும் என்றால்.. 2035ல் வர வாய்ப்பு இருக்கிறது.
ஒரு அவுன்ஸ் 25,000 டாலர் என்றால் ஒரு கிராம் 800 டாலர். அதாவது இன்றைய தேதியில் 800 டாலர் என்பது ரூ.60,000. அதேநேரம் ரூபாய் மதிப்பு சரிவதையும் நாம் கணக்கிட வேண்டும். இந்தக் கணக்கு வைத்துப் பார்த்தால்.. 12 ஆண்டுகளில் ஒரு கிராம் ஒரு லட்சம் போக வாய்ப்பு இருக்கிறது" என்றார்.












Click it and Unblock the Notifications