ஓசூர், சேலம், சென்னை.. 24 மணிநேரத்தில் 3000 கோடியில் 3 மெகா முதலீடுகள்.. தேர்தல் நேரத்திலும் மாஸ்!
தமிழ்நாடு முழுவதும் தற்போது தேர்தல் பரபரப்பில் இருக்கும் வேளையிலும், புதிய தொழில் முதலீடுகள் வேகமெடுத்து வருகின்றன. உற்பத்தி, ஆராய்ச்சி, ரியல் எஸ்டேட் உள்ளிட்ட துறைகளில் கடந்த 24 மணிநேரத்தில் முதலீடுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாடு எந்த அளவுக்கு இந்திய தொழிற்துறைக்கு முக்கியமானதாக உள்ளது என்பதை காட்டுகிறது.
இந்த 3 முக்கிய முதலீடுகளும் தமிழ்நாட்டின் தொழில் வளர்ச்சிக்கும் வேலைவாய்ப்புக்கும் பெரிய அளவில் உதவியாக அமையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. சேலம், ஓசூர் மற்றும் சென்னை போன்ற முக்கிய தொழில் மையங்களில் இந்த முதலீட்டுகள் அறிவிக்கப்பட்டு உள்ளது.

மேட்டூர்
சேலம் மாவட்டத்தின் மேட்டூரில், Cabot Sanmar நிறுவனம் தனது ஃப்யூம்டு சிலிகா உற்பத்தி நிலையத்தை விரிவுபடுத்த ரூ.220 கோடி முதலீடு செய்ய உள்ளது. இது அமெரிக்காவின் கேபோட் கார்ப்பரேஷன் மற்றும் இந்தியாவின் சன்மார் குரூப் ஆகியவற்றின் கூட்டு நிறுவனம் தான் Cabot Sanmar நிறுவனமாகும்.
இந்த பிரவுன்ஃபீல்டு தொழிற்சாலை விரிவாக்க திட்டத்தின் மூலம், தற்போதைய உற்பத்தி திறனை இரட்டிப்பாக்க இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. 2027 ஆம் ஆண்டின் நான்காவது காலாண்டில் 220 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீட்டின் விரிவாக்க திட்டம் நிறைவு பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது.
Cabot Sanmar நிறுவனத்தின் முக்கிய தயாரிப்பான CAB-O-SIL என்ற பொருள் பார்மா, உணவு, பெயிண்ட், ஒட்டும் பொருட்கள், பர்சனல் கேர் மற்றும் விவசாய பாதுகாப்பு போன்ற பல துறைகளில் பயன்படுகிறது. இதில் சுமார் 30% மருந்துத் துறையில் பயன்படுத்தப்படுவதால், இந்த விரிவாக்கம் pharma துறைக்கும் முக்கிய ஆதரவாக இருக்கும்.
ஓசூர்
ஓசூரில், Tenneco Clean Air India தனது ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) மையத்தை விரிவுபடுத்த திட்டமிட்டுள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த Tenneco Inc. நிறுவனத்தின் இந்திய கிளை ஓசூரில் அமைந்துள்ளது. இந்திய வாகன உற்பத்தியாளர்களிடையே தனது வர்த்தகத்தை அதிகரிக்க தீவிரமாக முயற்சி செய்யும் இந்நிறுவனம் தற்போது ஓசூரில் புதிய உற்பத்தி ஆலையை அமைப்பது குறித்து ஆலோசனை செய்து வருகிறது.
இம்நிறுவனம் சமீபத்தில் மஹிந்திரா நிறுவனத்திற்காக உருவாக்கிய DaVinci DCx என்ற புதிய shock absorber தயாரிப்பை அறிமுகப்படுத்தியுள்ளது. இந்த ஒப்பந்தத்தின் மதிப்பு சுமார் ரூ.220 கோடியாகும்.
இந்த தயாரிப்புக்கு மற்ற கார் நிறுவனங்களிடமிருந்தும் அதிகப்படியான டிமாண்ட் வருவதால், மேற்குத் மற்றும் தென் இந்தியாவில் மேலும் ஒரு உற்பத்தி நிலையம் அமைப்பது குறித்து நிறுவனம் ஆய்வு செய்து வருகிறது. இது எதிர்காலத்தில் புதிய வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வாய்ப்பை காட்டுகிறது.
சென்னை
சென்னையில், மைண்ட்ஸ்பேஸ் பிஸ்னஸ் பார்க்ஸ் REIT நிறுவனம் ரூ.2,541 கோடி மதிப்பில் உயர்தர அலுவலக வளாகத்தை வாங்கியுள்ளது. பல்லாவரம் மற்றும் துரைபாக்கம் சாலையில் அமைந்துள்ள Commerzone Pallikaranai எனப்படும் இந்த IT வளாகம் 12.4 ஏக்கரில் பரவியுள்ளது. மொத்தம் 2.6 மில்லியன் சதுர அடி பரப்பளவில் அமைந்துள்ள இந்த அலுவலக வளாகத்தை வாங்கியுள்ளது. இது மைண்ட்ஸ்பேஸ் பிஸ்னஸ் பார்க்ஸ் REIT நிறுவனத்தின் சென்னையில் இரண்டாவது முக்கிய முதலீடாகும்.
இந்த கொள்முதல் மூலம், சென்னை IT மற்றும் கார்ப்பரேட் அலுவலக சந்தையின் வளர்ச்சியை மேலும் வலுப்படுத்தும் என மதிப்பிடப்படுகிறது.
இந்த மூன்று முக்கிய முதலீடுகள் இணைந்து பார்க்கும்போது, உற்பத்தி, ஆட்டோமொபைல் மற்றும் சேவை துறைகள் அனைத்திலும் தமிழ்நாடு ஒரே நேரத்தில் வளர்ச்சி அடைவதை காட்டுகிறது.
மேட்டூரில் உற்பத்தி திறன் அதிகரிப்பு, ஹோசூரில் R&D வளர்ச்சி மற்றும் சென்னையில் IT உட்கட்டமைப்பு விரிவாக்கம் ஆகியவை மாநிலத்தின் தொழில் பரிமாணத்தை விரிவுபடுத்துகின்றன.












Click it and Unblock the Notifications