தமிழக MLAக்களில் 126 பேர் கிரிமினல் வழக்கு.. தவெக முதலிடம்.. 19 பேர் மீது தீவிர குற்ற வழக்குகள்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையில் தவெக ஆட்சி அமைந்துள்ள நிலையில், தற்போது தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள 233 சட்டமன்ற உறுப்பினர்களில் 126 பேர் குற்றவியல் வழக்குகளை எதிர்நோக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் ஆளும் தவெக முதலிடத்தில் உள்ளது. தவகெவைச் சேர்ந்த 107 பேரில் 41 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் 19 பேர் மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற தீவிர வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

தமிழக சட்டசபை தேர்தலில் தவெக 108 இடங்களிலும், திமுக 59 இடங்களிலும், அதிமுக 49 இடங்களிலும் வென்றன. இதில், திமுக கூட்டணியில் இடம்பெற்ற காங்கிரஸ் (5 இடங்கள்), அதிலிருந்து பிரிந்து தவெக உடன் கூட்டணி அமைத்தது. திமுக கூட்டணியில் இடம்பெற்றிருந்த இந்திய கம்யூனிஸ்ட், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், விசிக, முஸ்லிம் லீக் (தலா 2 இடங்கள்) தவகெ கட்சி ஆட்சியமைக்க வெளியிலிருந்து ஆதரவு அளிப்பதாக தெரிவித்தன.

TVK MLAs

120 எம்எல்ஏக்கள் என்ற பெரும்பான்மை ஆதரவுடன் தவெக தலைவர் விஜய் நேற்று தமிழக முதல்வராக பதவியேற்றார். தவெக தலைவர் விஜய் இரு தொகுதிகளில் போட்டியிட்டு வென்றதால், அதில் ஒன்றை ராஜினாமா செய்துள்ளார். இதனால் அக்கட்சியின் எம்எல்ஏக்கள் எண்ணிக்கை 107. எம்.எல்.ஏக்கள் இன்று தமிழக சட்டசபையில் பதவியேற்றுக்கொண்டனர்.

தற்போது 233 எம்எல்ஏக்களில் பலர் குற்றவியல் வழக்குகளை எதிர்நோக்கியுள்ளது தெரியவந்துள்ளது. இந்தப் பட்டியலில் ஆளும் தவெக முதலிடத்தில் உள்ளது. தவகெவைச் சேர்ந்த 107 பேரில் 41 பேர் மீது கிரிமினல் வழக்குகள் உள்ளன. அதில் 19 பேர் மீது கொலை மற்றும் பாலியல் வன்கொடுமை போன்ற தீவிர வழக்குகளும் நிலுவையில் உள்ளன.

திமுக உறுப்பினர்களில் 37 பேர் வழக்குகளை எதிர்கொண்டுள்ள நிலையில், அதிமுகவில் 33 பேர், பாமக (4), காங்கிரஸ் (3), விசிக, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் (தலா 2) ஆகியோர் மோது குற்ற வழக்குகள் உள்ளன. மேலும், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், அமமுக, தேமுதிக ஆகிய கட்சிகளைச் சேர்ந்த தலா ஒரு உறுப்பினர் என மொத்தம் 126 எம்எல்ஏக்கள் மீது குற்றவியல் வழக்குகள் நிலுவையில் உள்ளதாக ஏடிஆர் அறிக்கை தெரிவித்துள்ளது.

இவர்களில் தீவிர வழக்குகளை எதிர்கொண்டுள்ளவர்களின் விவரங்களும் தெரியவந்துள்ளன. அதன்படி, தவெகவைச் சேர்ந்த 19 பேர், திமுக மற்றும் அதிமுகவில் தலா 14 பேர், பாமக, காங்கிரசில் தலா 2 பேர், இந்திய கம்யூனிஸ்ட், முஸ்லிம் லீக், அமமுக, தேமுதிகவில் தலா ஒருவர் என தீவிர குற்ற வழக்குகள் உள்ளன.

குற்ற வழக்குகளில் ஐந்து அல்லது அதற்கும் மேற்பட்ட ஆண்டுகள் சிறைத்தண்டனைப் பெற்றவர்களும் கொலை, கொலை முயற்சி, தாக்குதல், கடத்தல், பாலியல் வன்கொடுமை, ஊழல், சிறார்கள், பெண்களுக்கு எதிரான குற்றங்கள் ஆகியவைத் தீவிர குற்ற வழக்குகளாக வகைப்படுத்தப்பட்டுள்ளன.

இந்நிலையில், புதிதாகத் தேர்வான எம்எல்ஏக்களில் 56 பேர் தீவிர குற்றவியல் வழக்குகளை எதிர்கொண்டுள்ளனர். மேலும், வெற்றி பெற்ற எம்.எல்.ஏக்களில் 193 பேர் ஒரு கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புள்ள சொத்துகள் வைத்துள்ளனர். தவெகவின் 107 எம்எல்ஏக்களில் 77 பேர் கோடீஸ்வரர்கள் என்றும் தெரியவந்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+