எஸ்.பி.வேலுமணி, லீமாரோஸ்.. மிஸ்ஸான 5 எம்எல்ஏக்கள்! எடப்பாடி பழனிசாமி அப்செட்!
சென்னை: விஜய் ஆட்சி அமைக்க தீவிரமாக முயற்சிகளை மேற்கொண்டிருக்கிறார். இந்நிலையில், எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று காலை நடைபெற்ற அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் எஸ்.பி.வேலுமணி, லீமாரோஸ் என 5 எம்எல்ஏக்கள் ஆப்சென்ட் ஆகியிருப்பது சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
நடைபெற்று முடிந்த சட்டமன்ற தேர்தலின் வாக்கு எண்ணிக்கை கடந்த 4ம் தேதி நடைபெற்றது. ரிசல்ட்டில் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் பெரிய கட்சியாக உருவெடுத்திருப்பது உறுதி செய்யப்பட்டது. இது திராவிட கட்சிகளுக்கு கடும் அதிர்ச்சியை கொடுத்தது. என்னதான் தவெக பெரிய கட்சியாக வந்திருந்தாலும், ரிசல்ட் வந்து 5 நாட்கள் ஆகியும் கூட விஜய்யால் முதலமைச்சராக பொறுப்பேற்க முடியவில்லை.

ஆளுநர் சந்திப்பு
பெரும்பான்மை பெறாத நிலையில், விஜய்யால் ஆட்சியமைக்க முடியவில்லை. இப்போது வரை காங்கிரஸ் (5), சிபிஐ (2), சிபிஎம் (2) என ஆதரவு கிடைத்திருக்கிறது. மொத்தம் 118 எம்எல்ஏக்கள் தேவை இருக்கும் நிலையில் விஜய்க்கு 116 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. நேற்றிரவு ஆளுநரை சந்தித்த விஜய், ஆட்சி அமைக்க உரிமை கோரியிருந்தார். ஆனால், ஆளுநர் அழைப்பு விடுக்கவில்லை.
குறுக்கே வந்த அமமுக
நேற்றிரவு சந்திப்பின்போது, அமமுகவின் எம்எல்ஏ காமராஜ் ஆதரவு தெரிவித்த கடிதம் ஆளுநரிடம் வழங்கப்பட்டதாக சொல்லப்படுகிறது. ஆனால், அப்படியான கடிதம் எதையும் தான் கொடுக்கவில்லை என காமராஜ் பல்டி அடித்திருக்கிறார். எனவே, இது குறித்து விசாரிக்க வேண்டும், குற்றவாளிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் ஆளுநருக்கு வலியுறுத்தியுள்ளார்.
இது விஜய்க்கு புதிய நெருக்கடியை ஏற்படுத்தியிருக்கிறது. மறுபுறம் 2 இடங்களை ஜெயித்திருக்கும் திருமாவளவன் இன்னும் தனது நிலைப்பாட்டை அறிவிக்கவில்லை.
லீமா ரோஸ்
இந்த பஞ்சாயத்துகளுக்கு நடுவில் அதிமுகவில் சலசலப்பு ஏற்பட்டிருக்கிறது. அதிமுகவிலிருந்து சில எம்எல்ஏக்கள் விஜய்க்கு ஆதரவு தெரிவிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியிருந்தன. அதிமுக எம்எல்ஏக்களில் ஒருவராக இருக்கும் லீமா ரோஸ், தவெக பொதுச்செயலாளர்களின் ஒருவரான ஆதவ் அர்ஜுனாவின் மாமியார் என்பதால், அவர் சில எம்எல்ஏக்களை தவெக பக்கம் திருப்ப கூடும் என்றும் பேச்சுக்கள் அடிபட்டன. நேற்று வரை அப்படி ஏதும் நடக்கவில்லை. ஆனால், இன்று.. எடப்பாடி தலைமையில் நடந்த எம்எல்ஏக்கள் கூட்டத்தில் லீமா ரோஸ் ஆப்சென்ட்.
எடப்பாடி ஷாக்
அவர் மட்டுமல்லாது எஸ்.பி.வேலுமணி, பெருந்துறை ஜெயகுமார், வேலுகோவிந்தராஜன் என மொத்தம் 5 எம்எல்ஏக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இவர்கள் புதுச்சேரில் தங்க வைக்கப்பட்டு இன்றுதான் சென்னைக்கு அழைத்துவரப்பட்டனர். இருந்தும் இக்கூட்டத்தில் பங்கேற்காமல் இருந்தது எடப்பாடி பழனிசாமிக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.
எம்எல்ஏக்கள் ஆப்சென்ட்
இக்கூட்டம் நிறைவடைந்த பின்னர், எடப்பாடி பழனிசாமி புதியதாக அமைய உள்ள அரசுக்கு வாழ்த்துகளை தெரிவித்திருந்தார். இந்த வாழ்த்து குறிப்பில், தவெக அல்லது விஜய் என்கிற பெயர் குறிப்பிடப்படவில்லை. எனவே ஆப்சென்ட் ஆன 5 எம்எல்ஏக்களும் தவெக பக்கம் தாவியிருப்பார்களோ? என்கிற சந்தேகம் எழுந்திருக்கிறது.












Click it and Unblock the Notifications