தவெகவுக்கு அதிமுகவின் எஸ்.பி. வேலுமணி அணி ஆதரவு- சி.வி.சண்முகம் பரபரப்பு

Subscribe to Oneindia Tamil

சென்னை: தவெகவுக்கு அதிமுகவின் எஸ்.பி.வேலுமணி தரப்பு ஆதரவு அளிக்கிறது என முன்னாள் அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார். அதிமுக பொதுக் குழுவை கூட்டவும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

இதுகுறித்து அவர் செய்தியாளர்களிடம் கூறியிருப்பதாவது: நடந்து முடிந்த சட்டசபை தேர்தலில் அதிமுக படுதோல்வி அடைந்ததை ஏற்கிறோம். விஜய்க்கு மக்கள் கொடுத்த ஆதரவை ஏற்கிறோம்.

tvk cv shanmugam

அதிமுகவில் பெரும்பான்மை உறுப்பினர்களுக்கு விஜய்க்கு ஆதரவு அளிப்பது என முடிவு செய்துள்ளோம் என தெரிவித்துள்ளார்.

முக்கியக் குற்றச்சாட்டுகள் மற்றும் பின்னணி

1. தவெக-வுடன் ரகசியக் கூட்டணி?

சென்னையில் தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களிடம் பேசிய சி.வி. சண்முகம், "அதிமுகவில் பெரும்பான்மையான உறுப்பினர்கள், விஜய்யின் தமிழக வெற்றிக் கழகத்திற்குத் தார்மீக ஆதரவை அளித்து வருகிறோம் என்றார்.

2. பொதுக்குழுவைக் கூட்ட வலியுறுத்தல்

கட்சியில் எழுந்துள்ள இந்த குழப்பங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கவும், கூட்டணி மற்றும் கட்சியின் எதிர்கால நிலைப்பாடுகளை விவாதிக்கவும் உடனடியாக அதிமுக பொதுக்குழுவை கூட்ட வேண்டும் என அவர் எடப்பாடி பழனிசாமிக்கு (EPS) அழுத்தம் கொடுத்துள்ளார். இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிமுகவில் பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி பதவியேற்றது முதல் தொடர்ந்து தேர்தல்களில் தோல்வி அடைந்து வருவது அக்கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த 2021 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக 66 இடங்களில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற்றது. ஆனால் 2026 ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் அதிமுக வெறும் 46 இடங்களில் வென்று எதிர்க்கட்சி அந்தஸ்தையும் இழந்தது.

இதனால் அவரை பதவி விலகுமாறு ஒரு தரப்பினர் கூறி வருவதாக சொல்லப்படுகிறது. அதிமுகவின் மூத்த தலைவர்களான சிவி சண்முகம், எஸ்பி வேலுமணி, சி, விஜயபாஸ்கர் ஆகிய மூவர் தலைமையில் இந்த கலகம் பிறந்ததாக சொல்லப்படுகிறது.

அதாவது அதிமுகவினர் 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை பதவிக்கு வந்துவிடுவார்கள். ஆனால் இந்த முறையில் அதிமுக வெல்லாததால் தொடர்ந்து 10 ஆண்டுகள் பதவியில் இல்லாத நிலை உள்ளது. தவெகவுக்கு பெரும்பான்மை இல்லாததால் குதிரை பேரத்திற்கு அஞ்சி அதிமுக எம்எல்ஏக்கள் புதுவை ரிசார்ட்டில் தங்க வைக்கப்பட்டிருந்தனர்.

நிலை சீரானதும் அங்கிருந்து சென்னைக்கு வருமாறு எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்ட நிலையில் 34 எம்எல்ஏக்கள் சிவி சண்முகம் தலைமையில் ஆலோசனை நடத்தி வந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+