எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக திரும்பும் 36 எம்எல்ஏக்கள்? தவெகவுக்கு ஆதரவளிக்க திட்டம்?

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழக வெற்றிக் கழகம் ஆட்சி அமைக்க போதுமான எம்எல்ஏக்கள் இல்லாததால் விஜய் திணறி வருகிறார். இந்நிலையில், விஜய்க்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில் சி.வி.சண்முகம் தலைமையில் 36 அதிமுக எம்எல்ஏக்கள் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

விஜய்க்கு தற்போது 116 எம்எல்ஏக்களின் ஆதரவு கிடைத்திருக்கிறது. இன்னும் 2 எம்எல்ஏக்களின் ஆதரவு இருந்தால் விஜய் முதலமைச்சராக பொறுப்பேற்றுக்கொள்ளலாம். இன்று மாலை விசிக தலைவர் திருமாவளவன் தனது நிலைப்பாட்டை அறிவிக்க இருக்கிறார்.

Edappadi Palaniswami

மறுபுறம் இன்று காலை எடப்பாடி பழனிசாமி இல்லத்தில் நடந்த அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தில் லீமா ரோஸ், எஸ்.பி.வேலுமணி, பெருந்துறை ஜெயகுமார், வேலுகோவிந்தராஜன் என மொத்தம் 5 எம்எல்ஏக்கள் இக்கூட்டத்தில் பங்கேற்கவில்லை. இது அதிமுக வட்டாரத்தில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியிருந்தது. இந்த ஆலோசனை நிறைவடைந்த பின்னர், வேலுமணி, விஜயபாஸ்கர், சி.வி.சண்முகம் தலைமையில் 36 எம்எல்ஏக்கள் தனியாக ஆலோசனையில் ஈடுபட்டிருக்கின்றனர்.

விஜய்க்கு ஆதரவளிக்கும் விவகாரத்தில், அதிமுக எம்எல்ஏக்கள் இடையே மாறுபட்ட கருத்துக்கள் நிலவிய நிலையில், தற்போது 36 எம்எல்ஏக்களும் ஆலோசனை மேற்கொண்டிருக்கின்றனர். இந்த ஆலோசனையில், தவெகவுக்கு ஆதரவளிப்பது குறித்து பாசிட்டிவ் குரல்கள் எழுந்திருக்கின்றன.

தவெக-வை பொறுத்தவரை மொத்தம் 116 எம்எல்ஏக்களின் ஆதரவு இருக்கிறது. விசிக 2 ஆதரவளித்தால் விஜய்தான் முதலமைச்சர். ஆனால், பார்டர் நம்பரை வைத்து 5 ஆண்டுகளுக்கு ஆட்சி செய்துவிட முடியாது. விஜய் கொண்டுவரும் மசோதாக்களில் முரண்பாடு இருந்தால் இடதுசாரிகள் தங்கள் ஆதரவை வாபஸ் வாங்கலாம். அதேபோல, மக்கள் நலனில் அக்கறை கொண்ட சட்டங்களை கொண்டுவர சொல்லி இடதுசாரிகள் நிர்பந்திக்கலாம். கார்ப்பரேட் நலன் சட்டங்கள் கொண்டுவரப்படும்போது கடும் எதிர்ப்புகள் எழலாம்.

எனவே எப்போது வேண்டுமானாலும் ஆட்சி கவிழும் என்கிற நிலையில் அரசை நடத்த முடியாது. இதனால் அதிமுக ஆதரவு கொடுத்தால் அதை விஜய்யால் வேண்டாம் என்று சொல்லிவிட முடியாது.

எனவே இந்த வாய்ப்பை பயன்படுத்தி விஜய்க்கு ஆதரவு கொடுத்து பக்கத்திலேயே வைத்துக்கொள்ள அதிமுகவின் ஒரு பகுதியினர் திட்டமிட்டு வருகின்றனர். அதன் வெளிப்பாடுதான் தற்போது 36 எம்எல்ஏக்கள் தனியாக ஆலோசனை மேற்கொண்டிருப்பது என்று சொல்லப்படுகிறது.

எடப்பாடி பழனிசாமிக்கு சிக்கல்

ஆலோசனை நடத்தி வரும் 36 எம்எல்ஏக்களும், தவெகவில் இணைந்தால் அது எடப்பாடி பழனிசாமிக்கு பெரிய நெருக்கடியை கொடுக்கும். இவர்கள் மீது கட்சி தாவல் தடை சட்டம் பாயாது. காரணம் 3ல் 2 பங்கு எம்எல்ஏக்கள் கட்சி தாவினால் நடவடிக்கை எடுக்க முடியாது என சட்டம் சொல்கிறது.

அதிமுகவில் மொத்தம் 47 எம்எல்ஏக்கள் இருக்கின்றனர். இதில் 3ல்2 பங்கு எனில், 31 எம்எல்ஏகள். ஆனால் தற்போது 36 எம்எல்ஏக்கள் ஆலோசனை நடத்தி வருவதால், இவர்கள் அப்படியே தாவினால் இவர்கள் மீது நடவடிக்கை எடுக்க முடியாது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+