4வது இடத்திற்கு தள்ளப்பட்ட செங்கோட்டையன்.. ஆதரவாளர்கள் அப்செட்! முதல் நாளே குழப்பம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதலமைச்சராக விஜய் பொறுப்பேற்றிருக்கும் நிலையில், அடுத்தடுத்ததாக அமைச்சர்கள் பதவியேற்றுக்கொண்டனர். இந்த விழாவில் தவெக வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த செங்கோட்டையன், விஜய்க்கு அடுத்து பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்டது. ஆனால், 4வதாக பதவியேற்றுக்கொண்டார். இது அவரது ஆதரவாளர்களிடையே அதிர்ச்சியை ஏற்படுத்தியிருக்கிறது.

விஜய் பதவியேற்பு நிகழ்ச்சியில் பல சுவாரசிய சம்பவங்கள் நடந்திருக்கிறது. முதல் விஷயம் தமிழ்த்தாய் வாழ்த்துதான். வழக்கமாக தமிழக அரசியலில், முதலமைச்சர் பதவியேற்கும் நிகழ்ச்சியில் முதலாக தமிழ்த்தாய் வாழ்த்தும், நிகழ்ச்சி முடிவடையும்போது தேசிய கீதம் இசைக்கப்படும்.

Sengottaiyan Vijay TVK

ஆனால், விஜய் பதவியேற்கும்போது முதல் பாடலாக வந்தே மாதரமும், இரண்டாவதாக தேசிய கீதமும் மூன்றாவதாக தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. அதேபோல பதவியேற்றவர்கள் அனைவரும் ஆண்டவன் மீது ஆணையாக பதவியேற்பதாக கூறியிருக்கின்றனர். இது விஜய்க்கு ஆதரவு தெரிவித்த இடதுசாரிகளுக்கு அதிருப்தியை கொடுத்திருக்கிறது.

அதேநேரம், தவெக வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த செங்கோட்டையன் விஜய்க்கு அடுத்தபடியாக அல்லது 3வது நபராக அமைச்சராக பதவியேற்பார் என்று கருதப்பட்டது. ஆனால், 4வது ஆளாய் பதவியேற்றிருக்கிறார். இது அவரது ஆதரவாளர்களிடையே அதிருப்தியை ஏற்படுத்தியிருக்கிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+