விஜய்-யின் அரசியல்.. சினிமா விட த்ரில்லிங்காக இருக்கு.. விஜய் பக்கத்துவீட்டுக்காரர் போட்ட டிவீட்!
தமிழக அரசியல் களத்தில் விஜய் முதல்வர் ஆவாரா இல்லையா என்ற ஒரு கேள்வி பெரும் பரபரப்பில் ஆழ்த்தியுள்ள நிலையில், நடிகர் விஜய்யின் அரசியல் பயணம் அவரது சினிமா கதைகளை விட திரில்லிங்காக மாறியுள்ளது.
சென்னையைச் சேர்ந்த பிரபல ஆப்ஷன் டிரேடர் பிஆர்.சுந்தர், தனது 'எக்ஸ்' (முன்பு ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்ட ஒரு டிவீட் இதை முழுமையாக பிரதிபலிக்கிறது. இந்த டிவீட் தற்போது சமூக வலைதளங்களில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது.

பங்குச் சந்தைக்கும் விஜய் அரசியலுக்கும் ஒப்பீடு
பி.ஆர்.சுந்தர் தனது டிவீட்டில், பங்குச் சந்தையின் நிஃப்டி இண்டெக்ஸை விஜய்யின் அரசியல் நிலைமையுடன் ஒப்பிட்டு எழுதியுள்ளார். "நிஃப்டி: திங்கட்கிழமை புல்லிஷ், செவ்வாய் பியரிஷ், புதன் புல்லிஷ், வியாழன் பியரிஷ், வெள்ளி புல்லிஷ்... விஜய்: காலை 10 மணிக்கு பெரும்பான்மை, 11 மணிக்கு இல்லை, 12 மணிக்கு பெரும்பான்மை, 1 மணிக்கு இல்லை, 2 மணிக்கு பெரும்பான்மை..." என்று அவர் குறிப்பிட்டுள்ளார்.
அரசியலும் சந்தையும் சினிமாவை விட திரில்லிங்
"பங்குச் சந்தையும் அரசியலும் சினிமாவை விட அதிக சஸ்பென்ஸ் திரில்லர்" என்று பிஆர்.சுந்தர் முடித்துள்ளார். இந்த ஒப்பீடு, விஜய்யின் அரசியல் பயணத்தில் தினந்தோறும் ஏற்படும் மாற்றங்களால் எந்தளவுக்கு விஜய் ரசிகர்களும், தவெக தொண்டர்களும் பாதிக்கப்பட்டு உள்ளார்கள் என்பதை காட்டுகிறது. 108 தொகுதிகளில் வெற்றி பெற்று தனிப்பெரும் கட்சியாக உருவெடுத்த தவெக, ஆட்சி அமைக்கத் தேவையான பெரும்பான்மையை இன்னும் உறுதி செய்யாத நிலையில், ஆதரவு குறித்த பேச்சுவார்த்தைகள் தொடர்ந்து விசிக உடன் நடைபெற்று வருகின்றன.
மக்கள் மத்தியில் பரபரப்பு
விஜய்யின் அரசியல் பயணம் தொடக்கத்தில் பெரும் உற்சாகத்தை ஏற்படுத்தியது. ஆனால் கடந்த சில நாட்களில் ஆதரவில் நிலவும் இழுபறி, கூட்டணி பேச்சுவார்த்தைகள், ஆளுநர் சந்திப்பு உள்ளிட்ட சம்பவங்கள் தொடர்ச்சியாக நடைபெற்று வருவதால், விஜய்யின் அரசியல் பயணம் இப்போது சினிமா காட்சிகளை விட அதிக சஸ்பென்ஸ் நிறைந்ததாக மாறியுள்ளது.
தவெக மீது அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் குதிரை பேரக் குற்றச்சாட்டை முன் வைத்துள்ள நிலையில் விஜய் முதல்வராகும் வாய்ப்பு குறைந்துக்கொண்டே வருகிறது.
இதற்கிடையில் தவெக ஆட்சி அமைக்க விசிக தலைவர் திருமாவளவனிடம் ஆதரவு கோரி இருந்தார் விஜய். இதையடுத்து நேற்று இரவு விசிகவின் உயர்நிலைக் குழு கூட்டம் நடைபெற்ற முடிந்த நிலையில். இந்த கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவை இன்னும் சற்று நேரத்தில் திருமாவளவன் அறிவிக்க உள்ளார்.














Click it and Unblock the Notifications