"சி.ஜோசப் விஜய் எனும் நான்.." பிரச்சார பாணியில், உறுதிமொழியை முழங்கிய விஜய்
Subscribe to Oneindia Tamil
சென்னை: தமிழகத்தின் முதல்வராக பதவியேற்ற போது உறுதிமொழியை விஜய் பிரச்சார பாணியில் வீர முழக்கத்துடன் பதவியேற்ற போது அரங்கமே அதிர்ந்தது.
தமிழகத்தின் 13 ஆவது முதல்வராக விஜய் பதவியேற்றார். அதற்காக முதலில் வந்தே மாதரமும், தேசிய கீதமும், தமிழ்த்தாய் வாழ்த்தும் இசைக்கப்பட்டது. மத்திய அரசின் உத்தரவின்பேரில் அரசு விழாவில் முதலில் வந்தே மாதரம் இசைக்கப்பட்டது.

இந்த விழாவில் விஜய் பதவியேற்கும் போது சி.ஜோசப் விஜய் எனும் நான் என தொடங்கி உறுதி மொழியை ஏற்றார். அப்போது அவர் பிரச்சாரங்களில் ஒரு கொந்தளிப்புடன் பேசுவதை போல் பேசினார். அதற்கு அரங்கமே அதிர்ந்தது. தாய் ஷோபா, தந்தை சந்திரசேகர் ஆகியோர் ஆனந்த கண்ணீர் விட்டனர்.












Click it and Unblock the Notifications