முழு நிர்வாணம்.. இளம்பெண் முன்பு உடலில் ஆடைகளின்றி நிர்வாணமாக உலா வந்த இளைஞர்.. கடைசியில் அடிதடி
லக்னோ: இளம்பெண் ஒருவரை பக்கத்து வீட்டில் வசித்து வரும் இளைஞர் அடிக்கடி கேலி, கிண்டல் செய்து வந்தார். அதுமட்டுமின்றி அவரை பார்த்து ஆபாசமான சைகைகளை காண்பித்த நிலையில் திடீரென்று ஆடைகளின்றி நிர்வாணமாக இளம்பெண் முன்பு உலா வந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
உத்தர பிரதேச மாநிலம் லக்னோவில் உள்ள ராஜாஜிபுரத்தில் வசித்து வருபவர் இளம்பெண். இவர் வீட்டு அருகே வசித்து வரும் இளைஞர் ஒருவர் அடிக்கடி இளம்பெண்ணை கிண்டல் செய்து வந்துள்ளார். வீட்டில் இருந்து கடைகளுக்கு இளம்பெண் சென்று வரும் போதெல்லாம் அவரை கிண்டல் செய்வது மட்டுமின்றி ஆபாசமான சைகைகளை இளைஞர் ஒருவர் காண்பித்து வந்துள்ளார்.

அந்த இளம்பெண் தொடர்ந்து பொறுமை காத்து வந்தார். இளைஞரிடம் சண்டையிட வேண்டாம். மேலும் அவரிடம் சண்டையிட்டால் தன்மீதும் சிலர் குற்றம் சொல்வார்கள் என்று நினைத்து அவர் அமைதி காத்து வந்தார். மேலும் இளைஞர் திருந்தி விடுவார் என்று நினைத்தார்.
ஆனால் அந்த இளைஞர் திருந்தவே இல்லை. தொடர்ந்து இளம்பெண்ணை பார்க்கும் போதெல்லாம் முகம் சுழிக்கும் செயல்களை செய்து வந்துள்ளார். இநு்நிலையில் தான் அக்டோபர் 3ம் தேதி இளைஞரின் அட்டூழியம் அதிகமானது. வீட்டு அருகே இளம்பெண் நின்றார். அப்போது அவர் முன்பு சென்ற இளைஞர் ஆபாச சைகை காண்பித்துள்ளார். வழக்கம்போல் அந்த இளம்பெண் அவரை புறக்கணித்துள்ளார்.
ஆனால் இளைஞர் அங்கிருந்து செல்லவில்லை. இளம்பெண்ணின் கவனத்தை ஈர்க்கும் வகையில் செயல்பட்டுள்ளார். அதுமட்டுமின்றி திடீரென்று அந்த இளைஞர் தான் அணிந்திருந்த ஆடைகளை அவிழ்த்து நிர்வாணமாக இளம்பெண் முன்பு உலா வந்துள்ளார். இதனால் அந்த பெண் ஷாக்கானார். இளைஞரின் இந்த எல்லை மீறிய செயலால் அதிர்ந்துபோன இளம்பெண், அவரது செயலை வீடியோ எடுத்து போலீசில் புகார் செய்ய முடிவு செய்தார்.
செல்போனில் அவர் வீடியோ எடுத்தார். அப்போது கோபமான இளைஞர் அவரிடம் செல்போனை பிடுங்கினார். மேலும் தனது வீட்டில் உள்ளவர்களை பெண்ணின் வீட்டுக்கு அழைத்து சென்றார். 3 பெண்கள் உள்பட மொத்தம் 7 பேர் வீட்டுக்குள் திபுதிபுவென நுழைந்தனர். அவர்கள் அத்துமீறி பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்து இளம்பெண்ணை தாக்கினர். இளம்பெண்ணை கீழே தள்ளி அவரது வயிறு மற்றும் பிறப்புறுப்பில் தாக்கி மிதித்துள்ளனர்.
இளம்பெண்ணை அந்த கும்பல் தாக்குவதை பார்த்து அதிர்ச்சியடைந்த பெண்ணின் தந்தை அவர்களை தடுக்க முயன்றார். அப்போது அவரையும் அந்த கும்பல் தாக்கியது. இதில் இளம்பெண் படுகாயமடைந்தார். இதுகுறித்து இளம்பெண் சார்பில் போலீசில் புகார் செய்யப்பட்டது. இந்த புகாரின் பேரில் போலீசார் விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.












Click it and Unblock the Notifications