டிரம்ப் நினைப்பது போல் ஈரானை முற்றாக அமெரிக்காவால் அழித்துவிட முடியுமா? உண்மை என்ன

Subscribe to Oneindia Tamil

தெஹ்ரான்: ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால், ஈரானை ஒரே நாளில் அழித்துவிடுவோம் என அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்துள்ளார். உண்மையில் ஈரானை அப்படியே ஒரே நாளில் அழித்துவிட முடியுமா என்றால், நடைமுறையில் சாத்தியமே இல்லை.. பலகோடி மக்கள் வாழும் நாட்டை ஒரே நாளில் அழிப்பது சாத்தியமே கிடையாது.. அதேநேரம் அமெரிக்காவின் டார்க்கெட், அங்குள்ள அனைத்து உள்கட்டமைப்புகளையும் அடியோடு அழிப்பது தான்.. அப்படி செய்தால், பதிலுக்கு ஈரான், வளைகுடா நாடுகளின் ஒட்டுமொத்தமாக வாழ்வாதாரத்தையும் காலி செய்துவிட முடியும். அப்படி செய்தால் அதுதான் அமெரிக்கா மற்றும் வளைகுடா நாடுகளுக்கு மட்டுமல்ல, மொத்த உலகத்தையும் பேராபத்தில் தள்ளிவிடும்.

ஹார்முஸ் நீரிணையை திறக்காவிட்டால், ஈரானில் உள்ள மின்சார நிலையங்கள், பாலங்கள் உள்ளிட்ட சிவில் உள் கட்டமைப்புகள் மீது 7-ந்தேதி தாக்குதல் நடத்துவோம் என்று அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் 'கெடு' விதித்தார். இந்த கெடு நேற்று இரவு முடிவடைய இருந்த நிலையில், நேற்று அதிகாலையில் ஈரான் மீது அமெரிக்காவும், இஸ்ரேலும் அதிரடி தாக்குதல் நடத்தின. போர் விமானங்கள் சரமாரியாக குண்டுகளை வீசின. தலைநகர் தெஹ்ரானில் வெடிச்சத்தம் கேட்டபடியே உள்ளது. ஜெட் விமானங்கள் பல மணி நேரம் தாழ்வாக பறந்தபடி காணப்பட்டன.

Can the United States completely destroy Iran as Trump imagines What is the truth

ஈரானில் தாக்குதல்

தெஹ்ரானில் உள்ள ஷெரீப் தொழில்நுட்ப பல்கலைக்கழகம் குறிவைத்து தாக்கப்பட்டது. அந்த கட்டிடமும், அதன் அருகே உள்ள இயற்கை எரிவாயு வினியோக மையமும் கடுமையாக சேதம் அடைந்தன. ஷெரீப் பல்கலைக்கழகம், ஈரான் ராணுவத்துடன் இணைந்து பாலிஸ்டிக் ஏவுகணை திட்டத்துக்காக பணியாற்றி வந்தது. அதனால் தான் அமெரிக்கா அங்கே குண்டு வீசி உள்ளது.இதுதவிர ஈரானில் எஸ்லாம்ஷார் அருகே நடந்த தாக்குதலில் 13 பேரும், காம் நகரில் குடியிருப்பு பகுதியில் நடந்த தாக்குதலில் 5 பேரும், டெஹ்ரானில் ஒரு வீட்டில் நடந்த தாக்குதலில் 3 பேரும், இதர நகரங்களில் மேலும் 6 பேரும் பலியானதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

டிரம்ப் மிரட்டல்

இது ஒருபுறம் எனில் ஈரானை முற்றாக அழிப்பேன் என்று டிரம்ப் மிரட்டி வருகிறார். உண்மையில் அது சாத்தியமே இல்லை.. ஏனெனில் ஈரான் உலகின் மிகப்பெரிய நாடுகளில் ஒன்று. அதன் நிலப்பரப்பு தான் ஈரானின் பெரிய பலம்.. மலைப்பாங்கான நிலம் மற்றும் ஏழு நாடுகளில் பரந்து விரிந்த எல்லைகள் காரணமாக ஈரானை கட்டுப்படுத்துவது என்பது அமெரிக்காவிற்கு மிகவும் சவாலானது. வான்வழித் தாக்குதல்கள் மூலம் உள்கட்டமைப்பைச் சேதப்படுத்த முடியும் என்றாலும், தரைவழிப் போர் நடத்துவதோ அல்லது அந்த நாட்டில் தனக்கு பிடித்த அரசை உருவாக்குவது என்பது அமெரிக்காவிற்கு சாத்தியமே இல்லாத ஒன்று.

வளைகுடா நாடுகளால் தாங்க முடியாது

அதுமட்டுமல்ல, பதில் தாக்குல் ஈரான் நடத்தினால் அதனை வளைகுடா நாடுகளால் தாங்க முடியாது. உலகளாவிய எரிசக்தி விநியோகம், வர்த்தகம் மற்றும் பிராந்திய நாடுகளுடனான உறவுகளில் பெரும் பாதிப்புகளை ஏற்படுத்தும். ஈரான் ஏற்கனவே எச்சரித்தபடி, வளைகுடா நாடுகளின் உள்கட்டமைப்பில் கை வைக்கும் அபாயம் உள்ளது.

கடல் நீரை குடிநீராக்கும் திட்டம்

வளைகுடா நாடுகள் (சவுதி அரேபியா, யுஏஇ, குவைத்) தங்களின் குடிநீருக்கு 90% கடல்நீரை குடிநீராக்கும் ஆலைகளையே நம்பியுள்ளன. ஈரான் தனது ஏவுகணைகள் அல்லது ட்ரோன்கள் மூலம் இந்த ஆலைகளையும், அவற்றுக்கு மின்சாரம் வழங்கும் நிலையங்களையும் தாக்கினால், அந்த நாடுகள் சில நாட்களிலேயே மிகப்பெரிய குடிநீர் மற்றும் மின்சாரப் பஞ்சத்தை எதிர்கொள்ளும். இது அந்த நாடுகளின் உள்நாட்டு நிலைத்தன்மையை மொத்தமாக குலைத்துவிடும்.

ஹார்முஸ் ஜலசந்தி

உலகின் 20% க்கும் அதிகமான கச்சா எண்ணெய் செல்லும் 'ஹார்முஸ் ஜலசந்தி' ஈரானின் முழுக் கட்டுப்பாட்டில் உள்ளது. ஈரான் இந்தப் பாதையை மூடினால் அல்லது அங்குள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையங்களைத் தாக்கினால், உலகளாவிய எண்ணெய் விலை கட்டுக்கடங்காமல் உயரும். இது அமெரிக்கா உட்பட ஒட்டுமொத்த உலகப் பொருளாதாரத்தையும் நிலைகுலைய செய்துவிடும்

பேய் நகரங்களாகிவிடும்

அதேபோல் பெரும் பொருட்செலவில் கட்டப்படும் நவீன நகரங்கள் (துபாய் மற்றும் புதிய அரபு நகரங்கள்) இத்தகைய தாக்குதல்களால் சில மணிநேரங்களில் 'பேய் நகரங்களாக' மாறும் அபாயமும் உள்ளது. மக்கள் உயிருக்குப் பயந்து வெளியேறினால், அந்த நகரங்களின் பொருளாதாரம் மீளமுடியாத சரிவைச் சந்தித்துவிடும். ஒட்டமொத்தமாக பார்த்தால், அமெரிக்காவால் ஈரானின் உள்கட்டமைப்பைச் சேதப்படுத்த முடிந்தாலும், பதிலுக்கு ஈரான் வளைகுடா நாடுகளின் வாழ்வாதாரத்தை அழிப்பதன் மூலம் அமெரிக்காவிற்கும் அதன் கூட்டாளிகளுக்கும் ஈடுசெய்ய முடியாத இழப்பை ஏற்படுத்தும்.. இதுதான் ரியல் சிக்கல்..

ஈரான் பிடிவாதம்

அமெரிக்கா எப்படியாவது பேசித்தான் தீர்வு காண வேண்டும் என்று வளைகுடா நாடுகள் அழுத்தம் கொடுக்கின்றன. ஈரானும் போரை தவிர்க்க விரும்புகிறது. ஆனால் அதற்கு நிபந்தனை விதிக்கிறது. அமெரிக்கா, இஸ்ரேல் ஈரானுக்கு இழப்பீடு தர வேண்டும். போர் நிறுத்தம் வேண்டாம். நிரந்தரமாக போரை கைவிட வேண்டும் என்று கோரிக்கை வைக்கிறது. அத்துடன் அனைத்து பொருளாதார தடைகளையும் வாபஸ் பெற வேண்டும் என்று கோரிக்கை வைத்துள்ளது. இதற்கு அமெரிக்கா சம்மதிக்க மறக்கிறது.அமெரிக்காவின் ஒரே கோரிக்கை ஹார்முஸ் ஜலசந்தியை திறப்பது மட்டும் தான்.. ஆனால் ஈரான் நடந்த சேதத்திற்கும் இழப்பிற்கும் அமெரிக்கா பதில் சொல்லியே ஆக வேண்டும் என்று பிடிவாதமாக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+