முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் முக்கியமான பதிவை வெளியிட்டுள்ளார். ஹார்முஸ் வழித்தடத்தில் அமெரிக்க கடற்படைகள் கொண்டு முடக்கும் பணிகள் துவங்கியிருக்கும் வேளையில் இந்த வழித்தடத்தில் அதிகப்படியான கப்பல் சென்று வருவதாக தெரிவித்துள்ளார்.
நேற்று ஹார்முஸ் ஜலசந்தி வழியாக 34 கப்பல்கள் சென்றன. இந்த (ஈரானின்) முட்டாள்தனமான முடக்கம் தொடங்கியதிலிருந்து இதுவே அதிகபட்ச எண்ணிக்கை என்று டொனால்ட் டிரம்ப் தனது பதிவில் தெரிவித்துள்ளார். இந்த பதிவு உலக அளவில் பெரும் கவனத்தை ஈர்த்துள்ளது, காரணம் அமெரிக்காவின் முடக்க நடவடிக்கை துவங்கியதில் இருந்து அதிகப்படியான கப்பல் இவ்வழித்தடத்தை கடந்திருப்பது மூலம் விரைவில் எண்ணெய், எரிவாயு பிரச்சனை தீரும் என்ற எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது.

ஈரான் - அமெரிக்கா இடையேயான பதற்றம் உச்சத்தில் இருக்கும் நிலையில், ஹார்முஸ் ஜலசந்தி முடக்கம் தொடர்பான டிரம்பின் அறிவிப்பு பொருளாதார வல்லுநர்கள் மற்றும் பொதுமக்களிடையே பெரும் விவாதத்தை ஏற்படுத்தியுள்ளது. காரணம் உலகமும் முழுவதும் எரிபொருள் இருப்பு வேகமாக குறைந்து வருகிறது, இருப்பு தீர்ந்துவிட்டால் மொத்தமும் முடங்கும் என்ற அச்சம் இந்தியா முதல் தைவான் வரையில் உள்ளது.
ஹார்முஸ் - அமெரிக்காவின் திட்டம் என்ன?
அமெரிக்கா ஈரானிய துறைமுகங்கள் மற்றும் கடற்கரைப் பகுதிகளை முடக்கும் நடவடிக்கையை முழுமையாக செயல்படுத்தி வருகிறது. இந்தப் பகுதியில் அமெரிக்காவுக்கு சொந்தமான 15-க்கும் மேற்பட்ட போர்க்கப்பல்கள் தயார் நிலையில் உள்ளன. ஈரான் அல்லது ஈரான் தொடர்புடைய கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக செல்ல முயன்றால், அமெரிக்க கடற்படை உடனடியாக அதை நிறுத்தும் திட்டம் உள்ளது. இது ஈரான் கடற்படையின் நடவடிக்கைகளை, மொத்த போக்குவரத்தையும் கட்டுப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது.
தடுப்பை மீறினால் என்ன நடக்கும்?
ஈரான் அல்லது ஈரான் தொடர்புடைய கப்பல் முடக்கத்தை எதிர்த்து செல்ல முயன்றால், அமெரிக்கா 'கான்டெஸ்டட் போர்டிங்' என்ற சிறப்பு நடவடிக்கையை அமெரிக்க கடற்படை மேற்கொள்ளும். இதில் அமெரிக்க கடற்படை வீரர்கள் (மெரைன்ஸ்) அல்லது நேவி சீல்ஸ் படையினர் கப்பலுக்குள் ஏறி கப்பலை கட்டுப்படுத்தும் பணியை செய்வார்கள். அமெரிக்க கடற்படையின் உத்தரவுக்கை மீறி இயங்கும் கப்பல்கள் மீது போதைபொருள் கடத்தல்காரர்களை சுட்டுபிடிப்பதைபோல் சுட்டு வீழ்த்தப்படும் எனவும் டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இதே முறை தென் அமெரிக்காவில் வெனிசுலா தொடர்பான முடக்க நடவடிக்கையின்போது பயன்படுத்தப்பட்டது. இது சிக்கலான செயல்முறை என்றாலும், அமெரிக்க கடற்படை இதை திறம்பட கையாள்வதாக தெரிவிக்கப்படுகிறது.
ஒரு கப்பல் தப்பியது
அமெரிக்க கடற்படையின் முடக்கம் நடைமுறைக்கு வந்ததாக அறிவிக்கப்பட்ட சில மணி நேரங்களுக்குள், ஒரு ஈரான் தொடர்புடைய கப்பல் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்று முடக்கத்தை மீறி சென்றதாக கூறப்படுகிறது. டிரம்பின் பதிவின்படி, நேற்று 34 கப்பல்கள் ஹார்முஸ் ஜலசந்தி வழியாக சென்றுள்ளன. இது ஈரான் போர் துவங்கி தொடங்கியதிலிருந்து இதுவரை இல்லாத அதிகபட்ச எண்ணிக்கையாகும்.
158 கப்பல் வீழ்த்தப்பட்டது
அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் நேற்று தனது ட்ரூத் சோஷியல் தளத்தில் செய்த பதிவில் ஈரான் கடற்படை மீது அமெரிக்கா நடத்திய தாக்குதல் மூலம் ஈரான் கடற்படையின் பெரும்பகுதி அழிக்கப்பட்டுவிட்டதாக அவர் கூறியுள்ளார். இந்த பதிவிஸ் ஈரான் கடற்படை இப்போது கடலின் அடியில் இருக்கிறது. முழுமையாக அழிக்கப்பட்டுவிட்டது என்று தெரிவித்துள்ளார். இந்த தாக்குதலில் 158 கப்பல்கள் முழுவதும் அழிக்கப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.
டிரம்ப் தனது பதிவில், ஈரான் கடற்படையில் இன்னும் சில சிறிய கப்பல்கள் மட்டுமே உள்ளது. இந்த கப்பல்களை அமெரிக்கா முன்பு பெரிய அச்சுறுத்தலாக தான் கருதவில்லை என்றும் தெரிவித்துள்ளார்.












Click it and Unblock the Notifications