ஈரான் துறைமுகங்கள் மீதான முற்றுகையை தொடங்கிவிட்டோம்.. நெருங்கினால் பேரழிவு! டிரம்ப் வார்னிங்
தெஹ்ரான்: ஈரான் துறைமுகங்களை முற்றுகையிடுவோம் என்று அமெரிக்க அதிபர் டிரம்ப் எச்சரித்திருந்த நிலையில், இந்த முறை தற்போது அமலுக்கு வந்திருப்பதாகவும், முற்றுகை பகுதிக்கு வரும் கப்பல்களை தாக்கி அழிப்போம் என்றும் வார்னிங் கொடுத்திருக்கிறார்.
இது குறித்து தனது ட்ரூத் சோஷியல் மீடியாவில் டிரம்ப் போட்டிருக்கும் பதிவு சர்வதேச அளவில் பதற்றத்தை அதிகரித்திருக்கின்றன.

"ஈரானிய கடற்படையை சேர்ந்த மொத்தம் 158 கப்பல்கள் முழுமையாக அழிக்கப்பட்டு, தற்போது கடலின் அடியில் மூழ்கிக் கிடக்கின்றன. வேகத் தாக்குதல் கப்பல்களை நாங்கள் தாக்காமல் விட்டிருக்கிறோம். அதனால் பெரிய அச்சுறுத்தல் கிடையாது.
இந்தக் கப்பல்களில் ஏதேனும் ஒன்று, எங்களின் 'கடல் முற்றுகை' பகுதிக்கு மிக அருகில் வந்தால்கூட, கடலில் படகுகள் மூலம் போதைப்பொருள் கடத்துவோருக்கு எதிராக நாங்கள் பயன்படுத்தும் அதே அழிப்பு முறையைப் பயன்படுத்தி, அவை உடனடியாக ஒழிக்கப்படும். அந்த நடவடிக்கை மிக விரைவானதாகவும், மிகக் கடுமையானதாகவும் இருக்கும்" என்று பதிவிட்டிருக்கிறார்.
எந்தெந்த துறைமுகங்கள் பிளாக் செய்யப்பட்டிருக்கின்றன?
பிரிட்டன் கடற்படை சார்ந்த UKMTO அமைப்பின் தகவலின்படி, 6 துறைமுகப்பகுதிகள் அமெரிக்காவால் முற்றுகையிடப்பட்டிருக்கின்றன.
1. பண்டார் அபாஸ்
2. பண்டார் இமாம் கொமெய்னி
3. சபாஹர்
4. கார்க் தீவு
5. அசலுயே
6. பண்டார் ஜாஸ்க்
இதில் பண்டார் அபாஸ் என்பது, ஈரானின் மிக முக்கியமான மற்றும் மிகப்பெரிய வணிக துறைமுகம். நாட்டின் பெரும்பாலான கடல்வழி வர்த்தகம் இதன் வழியாகவே நடக்கிறது.
பண்டார் இமாம் கொமெய்னி, தானியங்கள் மற்றும் பிற அத்தியாவசிய பொருட்கள் இறக்குமதி செய்யும் பகுதியாகும். சபாஹர் துறைமுகத்தில் இந்தியா முதலீடு செய்திருக்கிறது. கார்தீவு துறைமுகம் ஈரானின் உயிர் நாடி ஆகும். இங்கிருந்துதான் 90% கச்சா எண்ணெய் ஏற்றுமதி நடக்கிறது.
அசலுயே என்பது, ஈரானின் மிகப்பெரிய எரிவாயு உற்பத்தி மற்றும் ஏற்றமதி தளமாகும். பண்டார் ஜாஸ்க், ஓமன் வளைகுடாவில் உள்ள முக்கியமான எண்ணெய் முனையமாகும்.












Click it and Unblock the Notifications