டிரம்ப் போட்ட உத்தரவு.. ஒரு இன்ச் கூட நகர முடியல.. ஈரான் கப்பலை கட்டம் கட்டி துரத்தும் அமெரிக்க கடற்படை!

Subscribe to Oneindia Tamil

அமெரிக்கா மற்றும் ஈரான் இடையேயான பதற்றம் டிரம்ப்-ன் காலவரையற்ற போர் நிறுத்தம் அறிவித்த பின்பும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இரு நாடுகளுக்கும் இடையே, அமைதி பேச்சுவார்த்தைக்கான வாய்ப்பு இருக்கும் வேளையிலும், அமெரிக்க கடற்படையின் முடக்கம் இதற்கு பெரும் இடையூறாக இருந்து வருகிறது.

இதற்கிடையில் ஈரான் கப்பல்களை கட்டம் கட்டி அமெரிக்க துரத்தி வருவதால் ஹார்முஸ் வழித்தடத்தில் பதற்றம் தொடந்து அதிகரித்து வருகிறது. இதனால் உலக வர்த்தகப் போக்குவரத்து மேம்படுத்துவதற்கான வாய்ப்புகள் நாளுக்கு நாள் குறைந்து வருகிறது. குறிப்பாக கச்சா எண்ணெய் ஏற்றுமதி பாதிக்கப்படும் அபாயம் அதிகரித்துள்ளது. இதனால் பெட்ரோல், டீசல் விலை உலகெங்கிலும் உயரும் அபாயமும் உருவாகியுள்ளது.

President Donald Trump has extended the fragile US-Iran ceasefire but ordered the naval blockade in the Strait of Hormuz to continue until Tehran submits a peace proposal with American forces redirecting 31 vessels and intercepting at least three Iranian-flagged tankers in Asian waters near India Malaysia and Sri Lanka

அமெரிக்கா, ஈரானின் கடல் வழி வர்த்தகத்தை மொத்தமாக முடக்க வேண்டும் என்ற திட்டத்துடன் கடற்படை கப்பல்களை பெர்சியன் வளைகுடா முழுவதும் நிறுத்தி வைத்திருக்கு வேளையில் இதுவரையில் 31 ஈரான் கப்பல்களை துறைமுகங்களுக்கு திருப்பி அனுப்பியுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஈரான் கொடி கொண்ட கப்பல்கள், அந்நாட்டு துறைமுகத்தை விட்டு ஒரு இன்ச் கூட வெளியே நகர முடியாத நிலையில் மாட்டிக்கொண்டுள்ளது. இதனால் ஈரான் நாட்டின் கச்சா எண்ணெய் வர்த்தக சந்தைக்கு வர முடியாமல் மாட்டிக்கொண்டு உள்ளது. இந்த நிலை தொடர்ந்தால் ஈரானுக்கு பெரிய அளவிலான நிதி நெருக்கடி உருவாகி, படிப்படியாக பொருளாதாரம், போர், ஆயுத இருப்பு, உணவு பொருட்கள் இறக்குமதி என அனைத்தும் குறைய வாய்ப்புள்ளது.

இது மட்டும் அல்லாமல் ஆசிய நீர்நிலைகளில் ஈரான் கொடியுடன் சென்றுக்கொண்டு இருந்த மூன்று டேங்கர் கப்பல்களை அமெரிக்கப் கடற்படைகள் மறித்து, இந்தியா, மலேசியா மற்றும் இலங்கை அருகே செல்ல வேண்டிய அக்கப்பல்களை திருப்பி அனுப்பியுள்ளன. இந்தச் சம்பவங்கள் ஏப்ரல் 23 அன்று கப்பல் மற்றும் பாதுகாப்புத் துறை வட்டாரங்களால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளன. அமெரிக்கா இந்தப் பகுதியில் கடல் பாதுகாப்பு விதிமுறைகளை விரிவுபடுத்தியுள்ளதால், ஈரான் வர்த்தகக் கப்பல்கள் பெரும் சிக்கல்களை சந்தித்து வருகின்றது.

அமெரிக்கா ஆயுத பற்றாக்குறையால் தவித்து வரும் வேளையில், ஈரான் போரில் மாற்று நிலைப்பாட்டை எடுத்துள்ளது. போர் தாக்குதல் அல்லாமல் பொருளாதார முடக்கத்தை கடற்படை வாயிலாக செய்ய டிரம்ப் முடிவு செய்துள்ளார். இதன் மூலம் பெர்சியன் வளைகுடா முதல் சர்வதேச கடல் போக்கவரத்து முதல் ஈரான் கப்பல்களுக்கும், ஈரான் எண்ணெய் கொண்ட கப்பல்களை எந்த துறைுமுகத்திலும் லேன்டிங் செய்ய முடியாமல் முடக்கி வருகிறது.

இந்த நிலையில் மீண்டும் பேச்சுவாத்தை துவங்கும் முயற்சிகளை பாகிஸ்தான் எடுத்து வந்தாலும், ஈரானின் முக்கியமான கண்டிஷனாக இருப்பது அமரிக்காவின் கடற்படை முடக்கத்தை நீக்க வேண்டும் என்பது தான். இதற்கு அமெரிக்கா தொடர்ந்து மறுப்பு தெரிவித்து வந்தாலும், இந்த வார இறுதிக்குள் ஈரான் தனது முடிவை அறிவிக்கும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்கா - ஈரான் மத்தியிலான போர் பதற்றம் தொடர்ந்து நிலவி வரும் காரணத்தால் கச்சா எண்ணெய் விலை மீண்டும் 100 டாலரை கடந்து பணவீக்கத்திற்கும், பொருளாதார பாதிப்புக்கும் வித்திட்டு வருகிறது. இன்று கச்சா எண்ணெய் பியூச்சர்ஸ் சந்தையில் ஒரு பேரல் WTI கச்சா எண்ணெய் 2 சதவீதம் உயர்ந்து 94.90 டாலராக உள்ளது. இதேபோல் பிரெண்ட் கச்சா எண்ணெய் விலை 1.84 சதவீதம் உயர்ந்து 103.8 டாலராக உள்ளது. இந்தியன் பேஸ்கட் விலை 103.05 டாலராக உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+