காலியான 50% ஏவுகணை.. ஈரான் போரில் அமெரிக்க அந்தர் பல்டி அடிக்க இதுதான் காரணம்.. படுமோசமான நிலை!
பாகிஸ்தானில் இன்று திட்டமிட்டு இருந்த அமெரிக்கா - ஈரான் மத்தியிலான பேச்சுவார்த்தையில் ஈரான் தரப்பில் கலந்துக்கொள்ளப்படாது என அறிவித்த நிலையில் இக்கூட்டம் ரத்து செய்யப்பட்டது. இதேவேளையில் புதன்கிழமையுடன் அமெரிக்கா ஈரான் மீதான போர் நிறுத்தும் நிறைவு பெறும் நிலையில் டிரம்ப்-ன் அடுத்தக்கட்ட ஆக்ஷன் என்ன என்பது தான் அனைவரின் கேள்வியாக இருந்தது.
அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் யாரும் எதிர்பார்க்காத வகையில் ஈரான் உடனான போர் நிறுத்தத்தை காலக்கெடு இன்றி நீட்டிக்க தீர்மானித்துள்ளதாக அறிவித்தார். ஆனால் இந்த முடிவுக்கு பின்னால் மிகப்பெரிய காரணம் இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆம், அமெரிக்காவிடம் ஆயுத இருப்பு பெரிய அளவில் குறைந்துள்ளதால் ஈரான் உடன் போர் தொடர்ந்தால் அமெரிக்கா சிக்கலில் மாட்டிக்கொள்ளும் நிலை ஏற்பட்டு உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

ஈரான் உடனான அமெரிக்காவின் 7 வார போரில், அமெரிக்க ராணுவம் அதிகளவிலான ஏவுகணைகளை பயன்படுத்தியுள்ளது. அமெரிக்கா வெனிசுலா போல் எளிதாக ஒரிரு வாரத்தில் ஈரானை இஸ்ரேல் துணையுடன் கைப்பற்றிவிடலாம் என திட்டமிட்டது. ஆனால் ஈரான் தனது ட்ரோன் தாக்குதல் மூலம் ஒட்டுமொத்த வளைகுடா நாடுகளையும் அலறவிட்டது.
அமெரிக்காவும், வளைகுடா நாடுகளும் ஈரானின் இந்த 25000 டாலர் ட்ரோன்களை தடுக்க பல மில்லியன் டாலர் மதிப்பிலான ஏவுகணைகளை பயன்படுத்தி வந்தது. இதனால் பொருளாதார ரீதியாகவும் பெரும் நெருக்கடியை சந்திக்கும் நிலை அமெரிக்காவுக்கு உருவாகியுள்ளது. அமெரிக்கா கடந்த 4-5 வருடங்களாக உக்ரைன் நாட்டுக்கு தொடர்ந்து ஆயுதம் சப்ளை செய்து வருவதும் ஏவுகணை இருப்பு குறைய முக்கிய காரணமாக உள்ளது.
இத்தகைய நிலை ஈரான் உடன் போர் தொடர்ந்தால் அமெரிக்காவின் நிலை மோசமாகிவிடும் என CNN செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. பென்டகன் உயர் அதிகாரிகள் மற்றும் நிபுணர்களின் மதிப்பீட்டின்படி, இந்த சரிவு அமெரிக்க ராணுவத்தின் பாதுகாப்பு நிலையை பாதிக்கும் அளவுக்கு உள்ளது எனவும் கணக்கிடப்பட்டு உள்ளது. இதன் காரணமாகவே டிரம்ப் 2 வாரம், 4 வாரம் என இல்லாமல் ஈரானுடனான போர் நிறுத்தத்தை காலவரையற்ற வகையில் நீட்டிக்க உள்ளதாக அறிவித்துள்ளர்.
CSIS விவரங்கள்
சர்வதேச உத்திய ஆய்வு மையம் (Center for Strategic and International Studies) வெளியிட்ட அறிக்கையின்படி, கடந்த ஏழு வாரங்களில் அமெரிக்கா தனது Precision Strike Missiles-இன் இருப்பில் குறைந்தது 45 சதவீதத்தை பயன்படுத்தியுள்ளது. THAAD ஏவுகணை இன்டர்செப்டர்களில் சுமார் 50 சதவீதத்தையும், Patriot ஏவுகணை கிட்டத்தட்ட 50 சதவீதமும் பயன்படுத்தியுள்ளன. இந்த தகவல்கள் பென்டகனின் மதிப்பீட்டுடன் ஒத்துப்போவதாக CNN தெரிவித்துள்ளது.
ஈரானுடன் தற்போதைய போர் நிறுத்தம் தொடர்ந்தாலும், அமெரிக்க ராணுவம் அடுத்த சில மாதங்களுக்கு ஈரானுக்கு எதிரான நடவடிக்கைகளை தொடரும் அளவுக்கு ஏவுகணைகள் இருப்பதாக நம்பப்படுகிறது. ஆனால் இந்த ஏவுகணை இருப்பு குறைந்தது, சீனா போன்ற வலுவான நாடுகளுடன் ஒரே நேரத்தில் அல்லது அடுத்தடுத்த போர்களை நடத்தும் சூழலில் "உடனடி அபாயத்தை" ஏற்படுத்தியுள்ளது என்று நிபுணர்கள் எச்சரிக்கின்றனர்.
ஈரானுக்கு சீனா மற்றும் ரஷ்யா தொடர்ந்து உதவி செய்து வருவதாக தகவல் வந்தாலும், இரு நாடுகளும் மறுப்பு தெரிவித்து வருகிறது. இதேபோல் சமீபத்தில் அமெரிக்க கடற்படை ஹார்முஸ்-ல் சீனாவில் இருந்த வந்த கப்பல் கைப்பற்றியது, இதில் ஏவுகணையில் பயன்படுத்தும் வெடி மருந்துகள் இருந்ததாக தகவல் வெளியானது, இதேபோல் சீனா விமானங்கள் தொடர்ந்து ஈரானில் தரையிறங்குவதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.
பென்டகன் எடுத்த நடவடிக்கை
அமெரிக்கா தனது ஆயுத பற்றாக்குறையை சரி செய்ய பென்டகன் ஏற்கனவே நடவடிக்கை எடுத்துள்ளது. இந்த ஆண்டு தொடக்கத்தில் ஏவுகணை உற்பத்தியை அதிகரிக்க ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளன. இருப்பினும், உற்பத்தி திறனை அதிகரித்தாலும் புதிய ஏவுகணைகள் வந்து சேர 3 முதல் 5 ஆண்டுகள் வரை ஆகும் என தெரிவிக்கிறது. போர் முன்பு இருந்த அளவுக்கு ஏவுகணை கையிருப்பு திரும்பவும் பல ஆண்டுகள் ஆகும் என்று CSIS மதிப்பீடு செய்துள்ளது.
சமீபத்தில் அமெரிக்காவில் இருக்கும் கார் உற்பத்தி நிறுவனங்களான போர்டு மற்றும் ஜிஎம் நிறுவனங்களிடம் ஆயுத உற்பத்தி செய்ய பேச்சுவார்த்தை நடந்தது குறிப்பிடத்தக்கது.
மேலும் ஈரான் தரப்பில் அமெரிக்கா போர் நிறுத்தத்தை காலவரையற்ற வகையில் நீட்டிக்க உள்ளதாக அறிவித்தது, எங்கள் மீது திடீர் தாக்குதல் நடத்த திட்டமிட எடுத்துக்கொள்லும் கால அளவு என விமர்சனம் வந்துள்ளது.












Click it and Unblock the Notifications