விதியின் விளையாட்டு.. சிஎஸ்கே அணிக்கு வேறு வழியே கிடையாது.. அந்த ஸ்பின்னருடன் விளையாடுங்க!
சென்னை: சிஎஸ்கே அணியின் இளம் ஆல்ரவுண்டர் ராமகிருஷ்ணா கோஷ் காயம் காரணமாக ஐபிஎல் தொடரில் இருந்து விலகி இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் சிஎஸ்கே அணி அடுத்த போட்டியில் ஸ்பின் ஆல்ரவுண்டரான அகீல் ஹொசைனுடன் தான் விளையாட வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது.
ஐபிஎல் தொடரில் சிஎஸ்கே அணி பிளே ஆஃப் சுற்றுக்கு முன்னேறுமா என்ற எதிர்பார்ப்பு அதிகமாக நிலவி வருகிறது. இதுவரை 9 போட்டிகளில் விளையாடியுள்ள சிஎஸ்கே அணி, 5 தோல்வி, 4 வெற்றியுடன் 8 புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 6வது இடத்தில் இருக்கிறது. எஞ்சியுள்ள 5 போட்டிகளில் 4ல் வென்றால் மட்டுமே, சிஎஸ்கே அணி பிளே ஆஃப் பற்றி சிந்திக்க முடியும்.

இந்த நிலையில் சிஎஸ்கே அணியின் வீரர்கள் தொடர்ந்து காயம் அடைந்து வருகின்றனர். ஏற்கனவே எல்லீஸ், கலீல் அஹ்மத், ஆயுஷ் மாத்ரே ஆகியோர் காயம் காரணமாக இந்த தொடரில் இருந்து வெளியேறிவிட்டனர். இருந்தாலும் அவர்களுக்கான மாற்று வீரர்களை அடையாளம் கண்டு சிஎஸ்கே அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறது.
மும்பை அணிக்கு எதிரான போட்டியில் ராமகிருஷ்ணா கோஷ் அறிமுகம் செய்யப்பட்டார். 3 ஓவர்களில் 24 ரன்கள் மட்டுமே விட்டுக் கொடுத்த அவர், சூர்யகுமார் யாதவின் விக்கெட்டை வீழ்த்தி அசத்தினார். ஆனால் திடீரென காயம் காரணமாக வெளியேறினார். தற்போது மருத்துவ பரிசோதனையில் ராமகிருஷ்ணா கோஷ்-க்கு காலில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது உறுதி செய்யப்பட்டுள்ளது.
இதனால் ராமகிருஷ்ணா கோஷ் இந்த ஐபிஎல் தொடரில் இருந்து வெளியேறிவிட்டதாக சிஎஸ்கே அணி அறிவித்துள்ளது. இதனால் ராமகிருஷ்ணா கோஷ் இடத்தில் ஒரு ஆல்ரவுண்டரை பிளேயிங் லெவனில் சேர்க்க வேண்டிய தேவை ஏற்பட்டுள்ளது. ஏற்கனவே அகீல் ஹொசைன் மிகச்சிறப்பாக செயல்பட்டுள்ள போதும், சிஎஸ்கே அணியில் நிரந்தர இடம் கிடைக்கவில்லை.
கடந்த போட்டியில் கூட அகீல் ஹொசைனுக்கு பதிலாக பிரசாந்த் வீர் சேர்க்கப்பட்டிருந்தார். தற்போது ராமகிருஷ்ணா கோஷ் காயம் அடைந்திருப்பதால், சிஎஸ்கே அணியின் பிளேயிங் லெவனை மீண்டும் உருவாக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. மீண்டும் குர்ஜப்னீத் சிங் சேர்க்கப்பட்டால், பிரசாந்த் வீர் இடத்தில் அகீல் ஹொசைனை சேர்க்க வேண்டிய நிலை உருவாகி இருக்கிறது. அதுவே ரசிகர்களின் குரலாகவும் இருக்கிறது. இதனை சிஎஸ்கே அணியும் உணர்ந்து, சரியான முடிவை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.












Click it and Unblock the Notifications