யுத்த பிரகடனம்.. எடப்பாடியிடம் இருந்து கட்சியை பறித்த ஒரு பெண்.. அதிமுக உடைய காரணமே இவர்தான்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: "என்னப்பா நடக்குது அதிமுகவுல?" என்று கேட்காத அரசியல் ஆர்வலர்களே இப்போது தமிழகத்தில் இல்லை. நேற்று வரை 'ஒற்றைத் தலைமை' என்று கெத்தாக வலம் வந்த எடப்பாடி பழனிசாமி, இன்று தன் காலடியில் இருந்த தரை நழுவுவதை உணர்ந்து நிலைகுலைந்து போயிருக்கிறார்.

சி.வி.சண்முகமும், எஸ்.பி.வேலுமணியும் கைகோர்த்து எடப்பாடிக்கு எதிராக 'யுத்தப் பிரகடனம்' செய்ததன் பின்னணியில், ஒரு பெண்மணியின் 'சைலண்ட்' ஆபரேஷன் இருப்பதாகக் கிளம்பியுள்ள தகவல் தான் இப்போது கோட்டை வட்டாரத்தின் ஹாட் டாபிக்!

ரகசிய ஸ்கெட்ச்!

மே 4-ம் தேதி தேர்தல் முடிவுகள் வெளியான போதே எடப்பாடியின் அதிகாரம் ஆட்டம் காணத் தொடங்கிவிட்டது. குறிப்பாக, தவெக தலைவர் விஜய் 108 இடங்களைக் கைப்பற்றி 'கிங்' ஆக உருவெடுத்தது, அதிமுகவின் இரண்டாம் கட்டத் தலைவர்களை சிந்திக்க வைத்தது. "இனி இவரை (இபிஎஸ்) நம்பினால் வேலைக்கு ஆகாது" என வேலுமணி தரப்பு முணுமுணுக்கத் தொடங்கிய அந்தத் தருணத்திற்காகவே காத்திருந்தது அந்த 'நிழல்' பெண்மணி.

A woman played a major role in bringing the AIADMK MLAs against Edappadi Palanisamy

யார் அந்தப் பெண்மணி?

கட்சியின் முக்கியப் பொறுப்பில் இல்லையென்றாலும், அதிமுகவின் 'மெயின்' புள்ளிகளிடம் நல்ல செல்வாக்கு கொண்டவர் அவர். புதிதாக கட்சிக்குள் வந்த பணக்கார பெண்! எடப்பாடிக்கு நெருக்கமான வட்டத்தில் இருந்தே தகவல்களைத் திரட்டி, அவற்றை லாவகமாகச் சண்முகம் - வேலுமணி தரப்பிற்குப் பாஸ் செய்தது இவர்தான் என்கிறார்கள் விவரம் அறிந்தவர்கள்.

எம்.எல்.ஏ-க்களை வளைத்த 'பவர்'

நேற்று சட்டசபைக்கு எம்.எல்.ஏ-க்கள் வந்தபோது, எடப்பாடி தரப்புக்கு ஒரு அதிர்ச்சி காத்திருந்தது. தனக்கு 47-க்கும் மேற்பட்ட எம்.எல்.ஏ-க்கள் ஆதரவு இருப்பதாக நம்பிக் கொண்டிருந்த இபிஎஸ்-ஸுக்கு, வெறும் 17 பேர் மட்டுமே அவர் பின்னால் நின்றது பேரதிர்ச்சி.

"சி.வி.சண்முகம் மற்றும் வேலுமணி முகாமுக்கு இந்த எம்.எல்.ஏ-க்களை இழுத்து வந்ததில் அந்தப் பெண்மணிக்கு முக்கியப் பங்கு உண்டு. ஒவ்வொரு எம்.எல்.ஏ-விடமும் தனித்தனியாகப் பேசி, நிறைய விட்டமின் எம் கொடுத்து.. எடப்பாடியின் 'திமுக ரகசிய டீல்' குறித்த ஆடியோ ஆதாரங்களை (உண்மையோ, பொய்யோ!) காட்டி அவர்களைத் திசை திருப்பியுள்ளார் அந்த பெண்" என்கிறது ஒரு நம்பத்தகுந்த வட்டாரம்.

திமுக ஆதரவு... பகீர் குற்றச்சாட்டு!

இன்று நடந்த செய்தியாளர் சந்திப்பில் சி.வி.சண்முகம் வெடித்ததற்கும் அந்தப் பெண்மணி கொடுத்த 'இன்புட்ஸ்' தான் காரணம். "திமுக ஆதரவோடு ஆட்சி அமைக்க எடப்பாடி திட்டமிட்டார்" என்று சண்முகம் சொன்ன போது, ஒட்டுமொத்த தமிழக அரசியலும் அதிர்ந்தது. அதிமுகவின் அடிப்படைத் தொண்டன் கூட ஜீரணிக்க முடியாத இந்தக் குற்றச்சாட்டை முன்வைப்பதன் மூலம், எடப்பாடியின் அரசியல் எதிர்காலத்திற்கு முற்றுப்புள்ளி வைக்கத் துணிந்துவிட்டார்கள் 'ரெபல்' தலைவர்கள்.

விஜய்யை நோக்கி அதிமுக?

"விஜய் ஆட்சி அமைக்க மக்கள் தீர்ப்பு வழங்கியுள்ளனர். அதை நாங்கள் ஏற்கிறோம்" எனச் சண்முகம் அறிவித்திருப்பது, அடுத்த அதிரடி மாற்றத்திற்கு அச்சாரமாகப் பார்க்கப்படுகிறது. எஸ்.பி.வேலுமணியைச் சட்டமன்றக் குழுத் தலைவராக அறிவித்துவிட்டு, தவெக-வுக்கு ஆதரவு அளிப்பதாகக் கூறியிருப்பதன் மூலம், அதிமுகவை விஜய்யின் பக்கம் கொண்டு செல்ல அந்தப் பெண்மணி போட்ட 'மாஸ்டர் பிளான்' சக்சஸ் ஆகியிருக்கிறது. இதன் மூலம் எடப்பாடி பழனிசாமியிடம் இருந்து மொத்தமாக கட்சி கையை விட்டு போய் உள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+