“புதிய அரசியல் மொழியா?” - முதல்வர் ஜோசப் விஜயின் முதல் உரையின் பலமும் பலவீனமும்!
தமிழக வெற்றிக் கழகம் தலைவரும், நடிகருமான ஜோசப் விஜய், நேரு உள்விளையாட்டு அரங்கத்தில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் முதலமைச்சராகப் பதவியேற்ற பின்பு மக்கள் முன்னிலையில் உரையாற்றினார். இந்த முதல் உரை தமிழ்நாட்டு அரசியல் வரலாற்றில் மிகவும் மாறுப்பட்டதாக இருந்தது.
பொதுவாக முதல்வராக பதவியேற்கும் நபர்கள் உரையை வாசித்துவிட்டு கூட்டத்தை முடித்துக்கொண்டு, கோட்டைக்கு சென்றுவிட்டு அடித்தடுத்த அறிவிப்புகளை வெளியிடுவார்கள்.

ஆனால் விஜய் பதவியேற்ற நேரு உள்விளையாட்டு அரங்கத்திலேயே புதிதாக மேஜை கொண்டு வரப்பட்டு 3 முக்கிய திட்டங்களை செயல்படுத்த ஒப்பதல் அளித்தார். இது முக்கிய மாற்றமாக இருந்தது. இதேபோல் பதவியேற்கும் போதும் சரி, பதவியேற்ற பின்பும் சரி விஜய்யின் பேச்சு உணர்ச்சி பொங்கும் வகையில், திரைப்படத்தின் கிளைமேக்ஸ் காட்சி போலவே இருந்து.
பொதுவாக அரசியல்வாதிகள் பதவிப் பிரமாணத்தை பார்த்து படித்து வருவதைப் பார்த்திருக்கும் நிலையில், விஜய் அதை மனப்பாடம் செய்து உணர்ச்சிபூர்வமாக பேசியது கவனிக்கத்தக்க விஷயமாக இருந்தது. ரகசியக் காப்புப் பிரமாணத்தை மட்டும் விஜய் பார்த்து படித்தார்.
பாராட்ட வேண்டியது..
விஜய் தனது முதல் உரையில், "நான் எனது எதிரிகளுக்கும், எதிர்ப்பாளர்களுக்கும் கூட முதலமைச்சராக இருப்பேன்" என்று தெளிவாகக் கூறினார். இது அவரது தேர்தல் அறிக்கையில் அனைவரும் உள்ளடக்கிய வளர்ச்சி என்ற வாக்குறுதியை நடைமுறைப்படுத்தும் வகையில் அமைந்துள்ளது.
மேலும், பெண்களின் பாதுகாப்பு மற்றும் சட்டம் ஒழுங்கு குறித்த அவரது உறுதிமொழி மக்களுக்கு நம்பிக்கை அளிக்கம் வகையில் அமைந்தது. பெண்களுக்கு எதிரான குற்றங்களைத் தடுக்கவும், அவர்கள் அச்சமின்றி வாழவும் தேவையான நடவடிக்கைகளை எடுப்பேன் என்ற அவரது வாக்குறுதி மிகவும் வரவேற்கத்தக்கதாக உள்ளது.
அதேபோல், அரசு நிர்வாகத்தில் வெளிப்படைத்தன்மை இருக்கும் என்ற உறுதிமொழியும் மக்களுக்கு நம்பிக்கையை அளித்தது. மிக முக்கியமாக, அவர் "நான் மட்டுமே அதிகார மையமாக இருப்பேன், முடிவெடுக்கும் தலைவராக இருப்பேன்" என்று கூறியது பாராட்டுக்குரியது.
முந்தைய சில அரசுகளில் பல அதிகார மையங்கள் இருந்ததால் ஏற்பட்ட சிக்கல்களைத் தவிர்க்கும் வகையில் இந்த அறிவிப்பு அமைந்துள்ளது. மேலும், அனைத்து முதல்வர்களும் வெள்ளை வேட்டி, சட்டை அணியும் பழக்கத்துக்கு பதிலாக விஜய் கோட் சூட் அணிந்து வந்தது பலரை ஈர்த்தது.
விமர்சனம் வைக்கப்பட்ட விஷயம்
விஜய்யின் உரையில் ஒரு விமர்சிக்கும் வகையில் இருந்த விஷயம், முந்தைய அரசை விமர்சித்து பேசிய விதமாகும். அவர் "முந்தைய ஆட்சி கஜானாவை காலி செய்துவிட்டு, பெரும் கடன் சுமையை விட்டுச் சென்றுள்ளது" என்று கூறினார். இது தமிழ்நாட்டின் தற்போதைய நிதி நிலை குறித்து பொதுமக்களுக்கு தவறான பார்வையை அளிக்கிறது.
நிதி வல்லுநர்கள் சுட்டிக்காட்டும் விஷயம் என்னவென்றால், தமிழ்நாட்டின் கடன்-மொத்த உள்நாட்டு உற்பத்தி விகிதம் உண்மையில் ஆரோக்கியமான நிலையில் தான் உள்ளது. முந்தைய அரசு பல தொழில் மற்றும் உள்கட்டமைப்பு திட்டங்களுக்காக செலவு செய்தது. அதே நேரத்தில், விஜய் அளித்துள்ள இலவசங்கள் மற்றும் புதிய திட்டங்களும் கூடுதல் கடன் சுமையை ஏற்படுத்தக்கூடும் என்பதை மக்கள் புரிந்துகொள்ள வேண்டும்.
முக ஸ்டாலின் பதிவு
விஜய்-யின் இக்குற்றச்சாட்டுக்கு எதிராக முன்னாள் முதல்வர் முக ஸ்டாலின் ஒரு முக்கியமான பதிவை வெளியிட்டு உள்ளார். இதில் எடுத்த எடுப்பிலேயே அரசிடம் பணம் இல்லை எனப் பேச ஆரம்பிக்காதீங்க. அதெல்லாம் இருக்கு. மக்களுக்குக் கொடுக்க மனசும், ஆட்சித் திறமையும்தான் வேணும்.
ஐந்து ஆண்டுகளாக, கோவிட், வெள்ளம் போன்ற பல பிரச்சினைகளையும் ஒன்றிய பா.ஜ.க. அரசின் ஓரவஞ்சனையையும் சமாளிச்சுதான் நாங்க எண்ணற்ற மக்கள்நலத் திட்டங்களை நிறைவேற்றினோம்.
'ரூபாய் 10 லட்சம் கோடி கடனை வைத்துவிட்டு, கஜானாவைத் துடைத்து விட்டுச் சென்றுள்ளது கடந்த அரசு' - என்ற குற்றச்சாட்டை முதல் உரையிலேயே சொல்லி இருக்கீங்களே... அனுமதிக்கப்பட்ட வரம்புக்குட்பட்டே தமிழ்நாட்டின் கடன் அளவு இருக்கிறது.
தமிழ்நாடு அரசின் நிதிநிலை பற்றி கடந்த பிப்ரவரி மாத பட்ஜெட்லயே தெளிவா நாங்க சொல்லிட்டோம். அது உங்களுக்குத் தெரியாதா? அதுக்குப் பிறகுதான நீங்க பல வாக்குறுதிகளை மக்களுக்குக் கொடுத்தீங்க? உங்களுக்கு வாக்களித்த மக்களை மீண்டும் ஏமாற்றி திசைதிருப்பாதீங்க!
-
பள்ளிகள் திறப்பு எப்போது? வெயில் கொளுத்தி வரும் நிலையில் முதலமைச்சர் விஜய் முக்கிய ஆலோசனை! -
அதிமுக எம்எல்ஏக்கள் ராஜினாமா செய்து அடுத்தடுத்து தவெகவில் இணைவது சரியில்லை.. மா.கம்யூனிஸ்ட் கோபம் -
CM Saar.. மாறி மாறி மக்களை ஏமாற்றும் விஜய்.. SCAM செய்யும் தவெக அரசு.. உதயநிதி ஸ்டாலின் அதிரடி! -
நான் அரசியல்ல 15 வருஷமா இருக்கேன்! என்ன யூஸ்? விஜய் மீது பொறாமையா இருக்கு! ஓபனாக சொன்ன பவன் கல்யாண் -
திமுகவில் உதயநிதிக்கு செயல் தலைவர் பதவி? மெல்ல நகரும் திட்டம்.. ஸ்டாலின் மேஜையில் ரிப்போர்ட் -
கொடுமை! குடியிருப்பு ஒதுக்கீட்டில் சாதி பாகுபாடு.. புகார் அளித்த வழக்கறிஞர் மீது தவெகவினர் தாக்குதல் -
மே 28ல் முதல்வர் பதவியில் இருந்து விலகும் சித்தராமையா? காங்கிரஸ் தலைமை ஆபரையும் நிராகரித்தார்! -
“தவெக ஆச்சரியக்குறிகளே.. விஜய்யை தலைவராக வச்சுக்கிட்டு எதுக்கு இதெல்லாம்?” அதிமுக காட்டமான பதிலடி -
எம்.எல்.ஏ பதவியை ராஜினாமா செய்த கையோடு, அமைச்சர்களை சந்தித்து தவெகவில் இணைந்த இசக்கி சுப்பையா! -
மகளிர் உரிமைத் தொகையில் இன்ப அதிர்ச்சி! தமிழக அரசின் ரூ.2500 அக்கவுண்ட்டில் வருவது எப்போது தெரியுமா -
"3 எம்.எல்.ஏக்களின் பதவி விலகலை 5 நிமிடத்தில் ஏற்றது ஏன்?” சபாநாயகருக்கு அதிமுக MP இன்பதுரை கேள்வி! -
கூட்டணி கட்சிகளுக்குள் வெடித்த கலவரம்: திமுக - விசிக இடையே பயங்கர கல்வீச்சு! தடியடி நடத்திய போலீசார்











Click it and Unblock the Notifications