அழகே பொறாமைப்படும் பேரழகு இதுதானோ...மாஸ் கெட்டப்பில் மணிமேகலை
சென்னை : தாவணியை எடுத்து செருகி ரசிகர்களின் மனதையும் அங்கேயே மாட்டிக்கொண்ட மணிமேகலையை பார்த்து ரசிகர்கள் இன்ப அதிர்ச்சியில் உறைந்து இருக்கிறார்களாம்.
இத்தனை நாளா இந்த அழகை பார்க்கவில்லையே என ஏங்கி போனவர்கள் திறமைக்கு முன்பு அழகு எல்லாம் பெரியது அல்ல என்று வியந்தும் வருகின்றனர்.
சிவப்பு பச்சை பாவாடை தாவணி காம்பினேஷனில் கலக்கும் மணிமேகலையை பார்த்ததும் கலாய்க்க நெட்டிசன்கள் இன்ஸ்டாகிராமில் படையெடுக்க ஆரம்பித்துவிட்டனர்.

மங்களகரமான போட்டோஸ்
சமூக வலைதளங்களில்..சத்தமே இல்லாமல்..சாதனைகளை படைத்து வருகிறது.. மணிமேகலை மங்களகரமாக இருக்கும் போட்டோக்கள். சிவப்பு கலர் தாவணியில்!!! இவரைப் பார்த்த இவரது ரசிகர்கள், அதே கலரில் கமெண்ட் பாக்ஸில் நெருப்புகளை பறக்கவிட்டு வருகின்றனர்.இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி 90'ஸ் கிட்ஸ் இளைஞர்களுக்கும் நன்கு பரிச்சயமான பிரபலமான விஜே மணிமேகலை ஆவார்.

90ஸ் கிட்ஸ்களின் ஃபேவரைட்
இன்றைய இளைஞர்கள் மட்டுமின்றி 90'ஸ் கிட்ஸ் இளைஞர்களுக்கும் நன்கு பரிச்சயமான பிரபலமான விஜே மணிமேகலை ஆவார். அகிலமே ஆண்ட்ராய்டு மயம் ஆவதற்கு முன்பு, கேபிள் டிவி என்றாலே சன் டிவி தான் என்று மக்கள் நினைத்து இருந்த காலகட்டத்தில், தன் அழகாலும் வசீகரிக்கும் பேச்சாலும் சன் நெட்வொர்க் நிகழ்ச்சிகளில் பெரும்பாலான நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி அனைவரது மனதிலும் அவரது முகத்தை பதிய வைத்துவிட்டார் விஜே மணிமேகலை, இப்பொழுது இருக்கும் பல விஜேகளுக்கு இவர் இன்ஸ்பிரேஸ்னாக கூட இருந்திருக்கலாம்.

சிறந்த தொகுப்பாளர் விருது
2016 ஆம் ஆண்டு அப்போதைய ஆளுநர் மாண்புமிகு. ரோசய்யா அவர்கள் கையால் "சிறந்த தொகுப்பாளர்" விருதை பெருமளவிற்கு, சன் நெட்வொர்க் நிகழ்ச்சிகள் இவரது கேரியரில் முக்கிய பங்கு வகித்தது. 2019ஆம் ஆண்டு விஜய் டிவிக்கு வந்த இவர் மிஸ் அண்ட் மிஸஸ் சின்னத்திரை ரியாலிட்டி ஷோவில் தன் காதல் கணவருடன் கலந்துகொண்டு, ஒரு கலக்கு கலக்கினார். அப்பொழுதுதான் ரசிகர்கள் மணிமேகலையின் பேச்சுத்திறமை மட்டுமல்ல இன்னும் பல திறமையை பார்த்து ரசித்தனர், ஜோடியாக சிறப்பான பெர்பாமன்ஸை கொடுத்தாலும்,ரன்னர்-அப் ஆகவே வர முடிந்தது.இருப்பினும் இவர்களுடைய பெர்பாமன்ஸ் அனைவரிடமும் நல்ல பாராட்டைப் பெற்றது.

சமையல் நிகழ்ச்சியில் கோமாளி
இதை தொடர்ந்து விஜய் டிவியில் செட்டிலாகி விட்ட விஜெ மணிமேகலை, 'குக் வித் கோமாளி' நிகழ்ச்சியில் தனக்கிருக்கும் சமையல் திறமை மற்றும் டைமிங் காமெடி மூலம் செம ரீச் ஆகிவிட்டார். பெற்றோரை எதிர்த்து காதல் திருமணம் செய்து கொண்ட மணிமேகலை,எந்த நிலையிலும் யாரையும் சார்ந்து இருக்கக் கூடாது என்று வெறியோடு ஓய்வில்லாமல் ஓர்க் பண்ணி கொண்டிருக்கிறார். சில நாட்களுக்கு முன்பு கூட தம்பதியர்கள் தங்கள் சொந்த உழைப்பில் பி.எம்.டபிள்யூ. கார் வாங்கி இருந்ததாக பகிர்ந்து இருந்தனர்.அதை பல்வேறு செலிபிரிட்டி களும் இணையவாசிகளும் வாழ்த்தி.. இந்த போஸ்ட்டை ஷேர் செய்து இருந்தனர்.

பொலிவு கூடிப்போச்சு
தான் போட்டியாளராக முதலில் கலந்துகொண்ட மிஸ்டர் அண்ட் மிஸஸ் சின்னத்திரை நிகழ்ச்சியை தற்பொழுது தொகுத்து வழங்கும் தொகுப்பாளராக இருக்கும் விஜெ மணிமேகலை நிகழ்ச்சியை சிறப்பாகவும் தரமாகவும் கொண்டு சென்று கொண்டிருக்கிறார்.டக்கு.. டக்கு..னு பேசி டக்கராக!! ப்ரோகராமை கொண்டு செல்லும் மணிமேகலை பேச்சுக்கு என்றே.. ஒரு கூட்டம் இருக்கு.சன் டிவியில் எப்படி அறிமுகமானார்!!! அந்த பொழிவு கொஞ்சமும் குறையாமல்!!! இன்னமும் சூப்பராக!!! இருக்கிறார். தற்பொழுது கூட மிஸ் அண்ட் மிசஸ் சின்னத்திரை நிகழ்ச்சியின் சூட்டிங் ஸ்பாட்டில் இருந்து, தாவணியுடன் தங்கமாய்.. மின்னும்... மணிமேகலையின் போட்டோக்கள் அனைத்து தரப்பினராலும் விரும்பபட்டு வருகின்றன. பதிவேற்றிய கொஞ்ச நேரத்திலே லட்சங்களைத் தாண்டி லைக்குகள் செல்வதை பார்த்தாலே இன்னமும் இவர் மீது இருக்கும் கிரேஸை பற்றி தெரிந்து கொள்ளலாம்.
-
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை!












Click it and Unblock the Notifications