• search
For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts

பெண் உடல் மீதான சமூக வன்முறை

By Staff
|

பெண் உடல் மீதான சமூக வன்முறை என்றதும் எல்லோருக்கும் பெண் சீண்டல், பாலியல் வன்முறை, வரதட்சனைக் கொடுமை, பெண் சிசுக் கொலை,கணவன் வீட்டில் கொடுமை போன்றஉடல் ரீதியான வன்முறைகள் சமூகம் முழுவதும் வியாபித்திருப்பது தான் நினைவுக்கு வரும். ஆனால் இந்தவன்முறைகள் சமுதாயத்தில் அங்கீகரிக்கப்பட்டவை அல்ல. சட்டங்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டவையும் அல்ல.

மாறாக சட்டங்கள் கடுமையானதாகவும், ஒட்டுமொத்தக் குற்றவியல் சட்டத்தின் அடிப்பட்டைச் சட்ட தத்துவத்திலிருந்து மாறி வரதட்சனை சாவு,காவல் நிலையப் பாலியல் வன்முறை போன்ற வன்முறைகளுக்கு, மிகக் கடுமையான குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிரான நிலையை குற்றம்நிரூபணம் ஆவதற்கு முன்பே நீதி நிறுவனங்களால் கைக் கொள்ளப்படுகின்றன.

அப்படியிருந்தும், ஒவ்வொரு நாளும் பெண்களுக்கு எதிரான வன்முறை பெருகி வருகிறதே என்ற கவலையும் நமக்கு தோன்றுகிறது. சட்டம்எவ்வளவு கடுமையானதாக இருந்தாலும் பெண் உடல் மீதான வன்முறையை இச்சமூகம் எப்படிப் பார்க்கிறது என்பதே இந்த வன்முறைகள்அதிகமாகிக் கொண்டு போவதற்கு காரணமாகும்.

இச்சமூகம் திடீரென்று பெண்களுக்கு எதிரான, அவள் உடல் மீதான வன்முறையை ஆமோதிக்கும் நிலைப்பாட்டை எடுத்து விட்டதா என்றகேள்விக்கு நாம் இல்லை என்றே பதில் சொல்லியாக வேண்டும். பெண் உடல் மீதான வன்முறை காலங்காலமாக சமூகத்தில் ஏற்றுக்கொள்ளப்பட்ட, அங்கீகரிக்கப்பட்ட ஒழுக்க நெறியின் பாற்பட்டதாகவே கருதப்பட்டு வந்தது என்பதை நாம் வரலாற்றிலிருந்து பார்க்க வேண்டியகட்டாயத்திற்குத் தள்ளப்பட்டிருக்கிறோம்.

எல்லா மதங்களும் தங்களது அடிப்படைக் கருத்தாக்கங்களில் பெண்களைப் பற்றிய நிலைப்பாட்டை மிகவும் குறிப்பான நெறிகளை முன்வைத்தும்கட்டுப்பாடுகளை விதித்தும் அவை நடைமுறைப்படுத்தப்படுவதற்கான வழிகளை ஏற்படுத்தியுள்ளன.

நம் சமூகச் சூழலில் இந்து, கிறிஸ்தவ, இஸ்லாமிய, பவுத்த மதங்கள் தத்தம் வழிகளில் பெண் ஆணுக்கு கீழாவாள்; ஆணின் அடிமையாகத்தான் பெண் வாழவேண்டும்; பயந்து அடங்கி அவனுக்கான பணி விடைகளைச் செய்வதே பெண்ணின் வாழ்க்கை என்பதற்குப் பொருள் என்று தெரிவிப்பதன் மூலம் இவன்தன்னை மனிதப் பிறவியாக நடத்த வேண்டும் என்ற கோரிக்கையை முன்வைக்கும் போதெல்லாம் அது மதத்திற்கு எதிரானதாகக் காட்டப்பட்டு,அதை மறுப்பதை நியாயப்படுத்துகிறது.

அவ்வாறு வைக்கப்படும், வைக்கப்படப் போகும் எவ்வித கோரிக்கையும் இழிவாகவும், கொச்சையாகவும், பெண் விடுதலை என்பதே பாலியல்ரீதியான விடுதலை என்பதாகக் குறைத்து எவ்வித நியாயமான கோரிக்கையும் வேரோடு கிள்ளி எறிய முயற்சிகள் இச்சமூகத்தால்மேற்கொள்ளப்படுகின்றன.

இத்தகைய ஆணாதிக்கத்தைக் காப்பாற்றும் வேலை, பல வடிவங்களில் பல விஞ்ஞானப்பூர்வமான விளக்கங்களுடனும், இன்றைய முன்னேறிய,தொழில்நுட்ப உலகிலும், இன்றும் பசியால்வாடும், வறுமையில் உழலும் மக்கள் ஏழ்மை உலகிலும் பரவலாக செய்யப்படுகின்றன. இச்சமூகத்தின்கருத்துக்கள் அவரவர் சார்ந்த, பிறந்த, வளர்ந்த சமூகத்தின் கலாச்சாரப் படிவுகளாகத்தான் வெளிப்படுகின்றன. அல்லது சில நேரங்களில் தாங்கள்ஏற்படுத்த விழையும் மாற்றத்தைக் கொண்ட சமூகத்தின் விழுமியங்களாகவும் உள்ளன.

இச்சமூகத்தில் பெண் உடல் மீதான வன்முறை காலங்காலமாக மத ரீதியான கருத்துருவாக்கங்களில் வேர் கொண்டுள்ளது. அவற்றை சில உதாரணங்களில்புரிந்து கொள்ள ஏதுவாக இருக்கும்.

கிறித்தவமும் பெண்ணும்

கிறிஸ்துவத்தின் பழைய மற்றும் புதிய பைபிளில் எ.பே. 5.22 இல் "மனைவிகளே, கர்த்தருக்குக் கீழ்ப்படிகிறது போல உங்கள் சொந்தப் புருஷருக்கும்கீழ்ப்படியுங்கள்"; எ.பே.5.23இல் "கிறிஸ்து, சபைக்குத் தலையாயிருக்கிறது போல, புருஷனும், மனைவிக்குத் தலையாயிருக்கிறான். அவரே சரீரத்திற்கும்இரட்சகராயிருக்கிறார்"; எ.பே. 5.24 இல், "ஆகையால் சபையானது கிறிஸ்துவுக்குக் கீழ்படிகிறது போல மனைவிகளும் தங்களது சொந்தப்புருஷர்களுக்கு எந்தக் காரியத்திலேயும் கீழ்ப்படிந்திருக்க வேண்டும்".

எ.பே. 5.33இல் "மனைவியும் புருஷனிடத்தில் பயபக்தியாயிருக்கக் கடவது" என்று கிறிஸ்துவம் பெண்ணைப் பக்தியின் பின்னால், கிறிஸ்துவின் வசனங்கள்ஊடாகக் கோருவதன் மூலம் தனது சுதந்திரம் தனது உரிமையை ஆணுக்காக இழக்கக் கோருகிறது. ஏன்? ஆணுக்குக் கீழ்ப்படிந்து, மதித்து,பயபக்தியாகப் பெண் நடந்து கொள்ள வேண்டும்? இதைப் பெண்ணுக்கு ஆண் ஏன் செய்யக் கூடாது? ஆணாதிக்கத்தைப் பிரதிபலித்தே கிறிஸ்துவ மதம்உருவாகியதை இது காட்டுகிறது.

தனிச் சொத்துடமையைப் பாதுகாப்பதற்காக பெண்ணின் பாலியல் உறவை ஒழுங்க செய்த பைபிள் இங்ஙனம் கூறுகிறது. "நீ உன் கணவனோடேயன்றி வேறுஆடவனோடு படுத்து தீட்டுப் பட்டிருந்தாயின் இந்த சாபமெல்லாம் என் மேல் வரும் சபையிலுள்ள அனைவரும் கண்டு அஞ்சும்படி ஆண்டவர் உன்னைஎல்லோருடைய சாபங்களுக்கும் உள்ளாகச் செய்வாராக.

அவர் உன் கால்கள் அழுகிப் போகவும், உன் வயிறு வீங்கி வெடித்துப் போகவும் செய்வாராக. சபிக்கப்பட்ட தண்ணீர் உன் வயிற்றில் விழவே உன் கருப்பைவீங்கவும் உன் தொடைகள் அழுகவும் கடவன" (இலக்கம் 165) பைபிள் பக்கம் 145-இல், 20, 21-ஆம் வரிகள் இப்படிக் கூறுகிறது.

1860இல் இயற்றப்பட்ட இந்திய விவாகரத்துச் சட்டம், கணவன் தன்னைக் கொடுமை, சித்ரவதை, வன்முறை புரிந்தால் பெண் விவகாரத்து பெறலாம்என்பதை 2001ம் ஆண்டில் தான் ஏற்றுக் கொண்டது. வன்முறை இருந்தால் தான் என்ன? அதைத்தானே இயேசு உன்னை அனுபவிக்கும்படி கூறினார்என்பதற்கு இதுவே சான்று.

ஆணாதிக்கமும் இசுலாமிய மதமும்

இதை நாம் திருக்குர் ஆன் மூலம் ஆராய்வோம். அத். 2.222.223-இல், "அது ஒரு தூய்மையற்ற நிலை. ஆகவே மாதவிடாய்க் காலத்தில் பெண்களைவிட்டு விலகியிருங்கள். தூய்மை அடைந்து விட்டால் அல்லாஹ் உங்களை ஏவிய முறைப்படி அவர்களிடம் செல்லுங்கள். உங்கள் மனைவியர் உங்களுக்குரியவிளை நிலங்களாவர். எனவே, நீங்கள் விரும்பும் முறையில் உங்களுக்குரிய விளை நிலங்களுக்குச் செல்லுங்கள். மேலும் உங்களுடைய வருங்காலத்துக்காக,முன் கூட்டியே ஏதாவது செய்து கொள்வதில் அக்கறை காட்டுங்கள்."

இந்து மதம் மாதவிடாயை தூய்மையற்றதாகக் கருதி, பெண்ணை விலக்கியது போலவே இஸ்லாம் மதமும் விலக்கியது. மசூதிக்கு ஆண்கள் செல்வதுபோல் பெண்கள் ஒட்டுமொத்தமாகவே செல்ல முடியாத இரண்டாம் பிரஜையாக வாழ்வதும், இந்து மதத்தில் பார்ப்பணப் பெண்களும், கோயில்உட்பகுதிக்குச் செல்ல முடியாத நிலைமையையும் இங்கு கவனத்தில் எடுப்பின் பெண்ணின் உரிமையில் மதங்கள் தமது பிற்போக்கைக் காட்டுவதைக் காணமுடியும்.

பெண்கள் பூசாரியாக முடியாத ஆணாதிக்கத்தை கிறிஸ்துவம் பின்பற்றியதைப் போன்றே எல்லா மதங்களும் பெண்ணை அடிமைப்படுத்தி வைத்துள்ளது.இதிலிருந்தே மாதவிடாய் போன்றவற்றால் பெண் இழிவாக்கப்பட்டு , அசுத்தமானதாகப் புனைந்து அதை ஆணுக்குப் போதிப்பதும் பெண்ணைஒதுக்குவதும் அரங்கேறுகிறது.

அத்தி. 4.34.35-இல், "ஆண்கள் பெண்களை நிர்வகிப்போர் ஆவர். இதற்குக் காரணம் அல்லாஹ் அவர்களில் சிலருக்குச் சிலரை விட உயர்வைஅளித்திருக்கிறான் என்பதும், ஆண்கள் தங்களுடைய செல்வத்திலிருந்து செலவு செய்கிறார்கள் என்பதுமாகும். எனவே, ஒழுக்கமான பெண்கள்கீழ்ப்படிந்தே நடப்பார்கள்.

மேலும் ஆண்கள், இல்லாதபோது (அப்பெண்கள்) அல்லாஹ்வின் பாதுகாப்பிலும், கண்காணிப்பிலும் இருக்கின்ற காரணத்தால் அவர்களின் உரிமைகளைப்பேணுவார்கள். மேலும் எந்தப் பெண்கள் குறித்து அவர்கள் (தம் கணவர்கள்) மாறு செய்வார்கள் என்று நீங்கள் அஞ்சுகின்றீர்களோ, அந்தப்பெண்களுக்கு நல்லறிவு புகட்டுங்ள், படுக்கைகளிலிருந்தும் அவர்களை ஒதுக்கி வையுங்கள், மேலும் அவர்களை அடியுங்கள்."

சமூகம் முழுவதற்கும் பெண்களை நோக்கி வன்முறை புரிய மதம் அறிவுரை தருவதைப் பார்க்கலாம்.

பவுத்தமும், பெண்ணும்

புத்தர் பெண்களை வெறுத்தும், மறுத்தும் இருந்தார். அவரின் துறவு கூட பெண் வெறுப்பில் ஏற்பட்டதே. பாலியல் இயற்கையான உணர்வு என்பதைமறுத்து, துறவைப் புத்த நெறியாக்கிய போது, பெண்ணை இழிவுபடுத்துவது அதன் அடிப்படையாகிறது. ஆதிவேத சங்கங்களின் ஸ்தாபன உரையில், "ஆண் மெய்என்பது சகலரையும் ஆண்டு இரட்சிக்கப்படும் புருஷர் எனப்படுவான். பெண் மெய் என்பது சகலரையும் இச்சிக்கக் கூடிய ஸ்த்ரீ எனப்படுவாள்.. " என்றும்கூறுகிறது.

அந்நிய ஆடவர் முகம் பார்க்காமல் இருப்பது குறித்தும், கணவனுடைய இன்பத்திற்காக மட்டும் எல்லாவிதமான உணவு படைத்தல், நித்திரைப்படுத்துதல் இன்ன பிற பணிகளையும் செய்யக் கடமைப்பட்டவள் பெண் என்று புத்த மதம் பணிக்கிறது.

பேதையான்ம தோற்றமுள்ள நீங்கள் சகலராலும் இச்சிக்கக் கூடிய வடிவுள்ளவர்களாதலின் நீங்கள் ஒவ்வொருவரும் நாணம், அச்சம், மடம்,பயிர்ப்பென்னும் நான்கு கற்பின் தன்மையில் நிலைக்க வேண்டும் ..

1. அந்நிய புருஷர் யாரைக் கண்டபோதிலும் நாணமுற்று தலை கவிழ்தலும், தனது முகத்தையும், தேகத்தையும் அன்னியப் புருஷர்கள் கண்டார்களேயென்றுவெட்கமடைதல் வேண்டும்.

2. தனது கணவனும், மைந்தர்களும் இல்லத்தில் இல்லாதபோது, அச்ச வாழ்க்கையில், இல்லறம் நடத்துதலும், தனியே வெளியிற் போகுங்கால் ஒருசிறுவனையேனும் கையால் தாவுகொண்டு செல்லுதல், அன்னியப் புருஷர் முகங்களை நோக்குதற்குப் பயப்படுதலும், தன் கணவனே தன்னையாண்டு ரட்சிக்கும்ஆண்டவனாதலால் அவனுக்கு வேண்டிய பதார்த்தத்தை வட்டித்தலும், வேணப்புசிப்பையளித்தலும், நித்திரைப்படுத்தலுமாகிய செயல்களில் அவன் மனங்கோணாதுதிருப்தியுறுமளவும் அச்சத்தில் நின்று ஆனந்திக்க வேண்டும்.

3. அன்னியப் புருஷரைக் காணுமிடத்து வெறுப்படைதலும், தனக்குக் கிடைத்துள்ள ஆடைகளில் திருப்தியுற்று அன்னியர் சிரேஷ்ட வாடைகளில் வெறுப்படைதலும்,தனக்குள்ள ஆபரணங்களில் வெறுப்படைதலும், தன் கணவனால் கிடைத்து வரும் புசிப்பில் போதுமான திருப்தியுற்று அன்னியர் சிரேஷ்ட புசிப்பில்வெறுப்படைதலுமாகிய செயலுற்று, தனக்குக் கிடைத்த வரையில், திருப்தியடைதல் வேண்டும்.

4. தனது கணவன் வாக்குக்கு மீறாது நடத்தல் முதல் ஒடுக்கம். பெரியோர்களிடம் அடங்கி வார்த்தை பேசுதல் இரண்டாம் ஒடுக்கம். கணவனுக்குஎதிர்மொழி பேசாதிருத்தல் மூன்றாம் ஒடுக்கம். கணவனிடம் எக்காலும் மிருதுவான வார்த்தை பேசுதல் நான்காம் ஒடுக்கம். அன்னிய புருஷர்கள்தன்னைப் பார்க்காமலொடுக்கிக் கொள்ளுதல் ஐந்தாம் ஒடுக்கம். அன்னியர் மெச்சும் ஆடையாபரணங்களையகற்றி, தன் கணவன் மனங்குளிரஅலங்கரித்து நிற்றல் ஆறாம் ஒடுக்கம்.

தன் கணவன் தேகம், தன் தேகம் வேறாகத் தோன்றினும் அன்பும் மனமும் ஒன்றாய் ஒத்து வாழ்தல் ஏழாம் ஒடுக்கம். கணவனுக்குப் பின்புசித்தலும், கணவனுடன் புசித்தலும் எட்டாம் ஒடுக்கம். கணவனுக்குப் பின் சயனித்தலும், கணவனோடு சயனித்தலும் ஒன்பதாவது ஒடுக்கம். பஞ்ச சீலத்தின்ஒழுக்க விரதங் காத்தல் பத்தாமொடுக்கம்.

பெண்கள் மனுவின் காலத்திற்கு முன்னர் சில உரிமைகளை குறிப்பாக மறுமணம், சொத்துரிமை போன்றவற்றை பெற்றிருந்தார்கள். ஆனால், பெண்களைஆண்களுக்குத் தீங்கு செய்யும், மயக்கும் பாலியல் பண்டமாக நோக்கியதற்கான ஆதாரங்களை மனுவில் காணலாம்.

மனு 2.213ல் இவ்வுலகில் ஆண்களை மயக்குவதே பெண்களின் இயல்பு. எனவே தான் பெண்களிடம் பழகும் போது விவேகிகள் எப்போதும் விழிப்புடன்இருக்கிறார்கள். எனவே ஆணின் பாலியல் தேவையை, பெண்ணுடைய பாலியல் தேவையை மறுதலிப்பதிலிருந்தே பார்க்கிறது.

எனவே அவளை பண்டமாக பார்க்கும் பார்வை, அவளை அதற்காக கட்டாயப்படுத்துவதையும் ஏற்கவே செய்கிறது.

மனு 9.15ல் ஆடவருடன் உறவு கொள்ளத்துடிக்கும் மோகத்தால், சலன புத்தியால் கணவர்கள் எவ்வளவு விழிப்பாக இருந்தாலும் பெண்கள்துரோகிகளாகி விடுவர் என்று பாலியல் மோகம் கொண்டு பெண் அலைவதாகக் காட்டுகிறது.

மனு 9.3ல் பெண்ணினம் இறக்கும் வரை பாதுகாக்கும்படி கூறுகிறது. ரிக் வேதங்களில் சில பகுதிகள் இதேபோன்ற கருத்துகளை கூறுவதைபார்க்கலாம்.

ரிக் வேதம் 8.3.17ல் பெண்கள் நிலையற்ற புத்தி படைத்தவர்கள், அவர்கள் நம்பத்தகாதவர்கள் என்ற கூற்றின் பின் பெண்கள் பற்றிய ஆணாதிக்கத்தின்நிலை இன்று வரை மாறிவிடவில்லை.

அர்த்த சாத்திரம் 3.3.59ல் பெண்கள் தவறு செய்தால் மூங்கில் பட்டையினாலோ, கயிற்றினாலோ, பெண்களின் வாயின் உதட்டின் மீது அடிகள்கொடுக்கலாம். இதை இராமாயணம் 25-17ல், ஒரு மனைவி தப்பிதம் செய்தால் கயிற்றினாலோ, மூங்கில் பிளப்பினாலோ அடிக்கலாம்.

சமுதாயத்திற்கு அவர்கள் (பெண்கள்) கேடானவர்கள், அபாயமானவர்கள் என்று நிரூபிக்கப்பட்டால் அவர்களை கொன்று விடலாம். உலகத்தையேவிழுங்க எண்ணிய மந்தாரா என்ற பெண்ணை சக்ரா கொன்றிருக்கிறார். ஆஸ்ரமங்களில் செய்யப்பட்ட யாகங்களை, சடங்குகளை தடுத்ததற்காகத் தாடகைஎன்ற பெண்ணை இராமன் கொன்றிருக்கிறான்.

இந்த ஆணாதிக்கச் சமூக மதிப்பீடுகள் பெண்களை எங்ஙனம் பார்த்தன என்பதற்கு சான்று.

மனுதர்மம் என்பது வாழ்க்கைக்குப் பிணியும் மருந்துமாகும் என்கின்றனர் இந்துக்கள். மனு ஒருவர் அல்லர் நால்வர் என்கின்றன ரிக்வேதமும்,கீதையும். இதைப்பற்றி பல கருத்துக்கள் நிலவியபோதும் மனுதரும சாத்திரமாக வடிவெடுத்த போது அது 2638 எனவும் தமிழில் மனுதர்மம் என்றநூலில் அதனினும் சுருங்கி 1928 தருமங்களைத் தொகுத்தளித்துள்ளார் தமிழ்நாடன்.

அந்த நூலிலிருந்து பல பகுதிகளை நம்மால் சுட்டிக்காட்ட முடிந்தாலும் பெண்களைப் பற்றிக்கூறிய கருத்துக்களில் பெண்கள் மீதான அடக்குமுறை,வன்முறைகளை தருமமாக வழங்கப்பட்டவை பற்றி மட்டும் இங்கு காணலாம்.

மகளிர் கடன் என்னும் தலைப்பில்

35. பெண்கள் பருவத்தினராயினும் தம்மிச்சைப்படி எப்போதும் எச்செயலையும் தன் வீட்டிலும் கூட இயற்றும் உரிமையற்றவரே.

41. கற்புடைய பெண்ணுக்கு கணவனே கண் கண்ட கடவுள். நற்குணம் அற்றவனெனினும், இழிந்த நடத்தையுடையவனெனினும் பரத்தையோடுஒழுகினவனெனினும் அவளுக்கு அவன் தான் கடவுள் எல்லாமுமாகும்.

45. கணவன் இறந்த பின் காய், கனி, கிழங்காகிய புல்லுணவு உண்டு காலம் கழிக்க வேண்டும். மற்றொருவரின் பெயரை நாவாலும் சொல்லக்கூடாது.

54. தன்குல நன்மனைவியெனினும் கணவனுக்கு முன்னதாக இறந்தால் விதிப்படி தென்புலக் கடன் யாவும் புரிக. யாவும் செய்து முடித்த பின் மற்றொரு பெண்ணைமணக்கலாம். தீ வளர்த்தலாகிய நற்கருமங்கள் இயற்றும் பொருட்டு, வாழ்வின் மீதி நாட்களை நல்லறமாக்கி நடத்துக.

இன்னும் பல அத்தியாயங்களில் பெண்களின் மீதான பாலியல் வன்முறை போன்றவற்றிற்கு சாதிவாரியாக தண்டனைகள் கூடவும், குறையவும் இருப்பதைகாணலாம்.

இவையெல்லாவற்றையும் எடுத்துக் கூறுவதன் மூலம், மதங்கள் பெண்ணுக்கு எதிராக உள்ளன என்ற கருத்துக்களை முன் வைக்கும் நிறுவனம்என்பதற்கு மேலாக, ஏறக்குறைய குறைந்தது 1600 ஆண்டுகள் அல்லது 4000-5000 ஆண்டுகளுக்கு முன்னர் தோற்றுவிக்கப்பட்ட மதங்கள் அந்தகாலகட்டத்தில் இவ்வாறு தான் பெண்களை பார்த்தன. எனவே தான் அப்படிப்பட்ட கருத்தாக்கங்கள் எழுந்தன என்பதே உண்மை.

ஆனால் ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு முன்பே எங்கள் மதம் தான் பெண்ணை உயர்த்தின. தெய்வீகமாக கருதின அல்லது அதிக மதிப்பு அளிப்பது என்றுபொய்யுரைப்பது அர்த்தமற்ற செயல்.

இன்றைய சூழலில் பெண் விடுதலை, பெண் சுதந்திரம் போன்றவற்றின் பொருளில் அக்கால மதங்களில் விளக்கம் தேட முற்படுவதோ,ஒன்றைக்காட்டினும் மற்றது சிறப்பானது என்கிற ஆராய்ச்சி செய்வதோ அறிவிலித்தனம்.

எனவே மதம் என்கிற விஷயம் உலகம் முழுவதும் பெண்களைப் பற்றி கொண்டிருந்த பார்வை அன்றைய உற்பத்தி - உறவு, அரசியல் கட்டுமானம்,கலாச்சாரம் போன்றவற்றை பிரதிபலிப்பது தான்.

எனவே இந்துமதக் கருத்துக்களே பிற மதத்திலும் வியாபித்து கலாச்சார தளத்ததில் சற்றேறக்குறைய ஒரே மாதிரியாக கருத்தோட்டங்களை(திச்டூதஞுண்) கொடுத்திருப்பதால் இந்துத்வா பெயரில் இந்து மதத்தின் பிற்போக்குத்தனத்தைத தூசி தட்டி, விஞ்ஞான முலாமிட்டு,புதிய நடையில், புதிய பாணிகளில், எப்படி கொடுத்தாலும் புதிய மொந்தையில் பழைய கள் என்னும் சொலவடையைப் போல்அவற்றின் சாரம் ஒன்று தான்.

எனவே, இன்று சமூகத்தின் எல்லா துறைகளிலும் தங்கள் கால் பதிக்கவும், சாதிக்கவும் வந்துவிட்ட பெண்களுக்கு எதிராகவும்,சாமானியப் பெண்ணுக்கு எதிராகவும் கட்டவிழ்த்து விடப்பட்டுள்ள கருத்து ரீதியான, கலாச்சார ரீதியான,

உடல் ரீதியான வன்முறை நாம் பார்த்த வகையில் வரலாற்று மொழி வந்ததால் இந்த மதத்தை அதன் வேரை அசைக்காமல்,இதற்கெதிரான வலுவான மாற்றுக் கலாச்சார கருத்துத் தளத்தை, ஜனநாயக பண்பாட்டை வளர்க்காமல் தனித்தனி நபர்களைசாடுவதும் சாத்தியமற்ற ஒன்று.

எனவே, பெண் உடல் மீதான சமூக வன்முறையை மதத்துடனும் மதவாத கருத்துக்களுடனும் புரிந்து கொண்டால் மட்டுமே நம்எதிர்ப்பை சரியாக பதிவு செய்யமுடியும்.

நன்றி: அணங்கு

தொகுப்பாசிரியர்கள்: க்ருஷாங்கினி (nagarajan62@vsnl.net), மாலதி மைத்ரி

திருமணம் ஆகாதவரா? இன்றே பதிவு செய்யுங்கள் தமிழ் மேட்ரிமோனியில் பதிவு இலவசம்!

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X
We use cookies to ensure that we give you the best experience on our website. This includes cookies from third party social media websites and ad networks. Such third party cookies may track your use on Oneindia sites for better rendering. Our partners use cookies to ensure we show you advertising that is relevant to you. If you continue without changing your settings, we'll assume that you are happy to receive all cookies on Oneindia website. However, you can change your cookie settings at any time. Learn more