For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

வங்காளிகள் வழிகாட்டுகிறார்கள்

By Staff
Google Oneindia Tamil News

- பிரணாப் முகர்ஜி
- புத்ததேவ் பட்டாச்சாரியா
- பிரிய ரஞ்சன் தாஸ்முன்ஷி
- குருதாஸ் தாஸ்குப்தா
- சோமநாத் சட்டர்ஜி

முதலாமவர் மத்தியப் பாதுகாப்புத் துறையமைச்சர் மட்டுமில்லை, காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர்.இரண்டாமவர் மேற்கு வங்கத்தின் முதலமைச்சர். இந்திய மார்க்சியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் முக்கியத்தலைவர்களில் ஒருவர். மூன்றாமவர் மத்திய செய்தி -ஒளிபரப்புத் துறையமைச்சர். காங்கிரசின் முக்கியத்தலைவர்களில் ஒருவர். நான்காமவர் நாடாளுமன்றத்தில் முக்கிய உறுப்பினர். இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சித்தலைவர்களில் ஒருவர். ஐந்தாமவர் நாடாளுமன்ற அவைத் தலைவர். கட்சிகளுக்கு அப்பாற்பட்டவர்.

Gangulyமேற்கண்ட ஐவருமே வங்காளிகள் என்பது குறிப்பிடத்தக்கது. கட்சி வேறுபாடுகள், பதவிப் பொறுப்புகளைக்கடந்து ஐவரும் இணைந்து ஒருமித்துக் குரல் எழுப்பியுள்ளார்கள்.

யாருக்காக? எதற்காக? பாதிக்கப்பட்ட மற்றொரு வங்காளிக்காக.

இத்தனை தலைவர்கள் ஒன்றுபட்டுக் குரல் கொடுக்கும் அளவுக்கு முக்கியத்துவம் பெற்ற அந்த வங்காளி யார்?அவருக்கு ஏற்பட்ட பாதிப்புத்தான் என்ன? கிரிக்கெட் வீரர் கங்குலி இந்திய கிரிக்கெட் அணியில்சேர்க்கப்படவில்லை என்பதுதான் மேற்கண்ட தலைவர்களின் கொந்தளிப்புக்குக் காரணம்.

உலகத்தரம் வாய்ந்த கிரிக்கெட் வீரரான கங்குலிக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளது. அரசியல் தலையீட்டின்காரணமாகவே அவர் நீக்கப்பட்டுள்ளார் என மேலே கண்ட தலைவர்கள் மட்டுமல்ல. மேற்கு வங்க மக்களும்கொந்தளித்துக் குரல் கொடுத்தனர்.

விளையாட்டுப் போட்டியாக இருந்தாலும் கங்குலி சேர்க்கப்படாதது வங்க தேசியத் தன்மானத்திற்குஇழைக்கப்பட்ட அநீதி எனக் கருதிக் கண்டனம் தெரிவித்ததன் விளைவாக மீண்டும் கங்குலிசேர்க்கப்பட்டுவிட்டார்.

கட்சி கடந்து வங்காளத் தலைவர்களும் மக்களும் வெளிப்படுத்திய இந்தத் தன்மான உணர்வு பாராட்டத்தக்கதுமட்டுமல்ல வியக்கத்தக்கதுமாகும். தங்கள் இனத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர் ஒருவருக்கு இழைக்கப்பட்டஅநீதியை அகற்றி நீதியை நிலைநாட்ட வங்காளிகள் ஒன்றுபட்டுப் போராடி வெற்றியும் பெற்றனர்.

கிரிக்கெட் விளையாட்டில் கூட வங்க தேசிய உணர்வுடனும், ஒற்றுமையுடனும் வங்காளிகள் போராடமுடியும்போது தமிழர்களால் தலையாய தேசிய பிரச்சனைகளில் கூட ஒன்றுபட முடியாதது ஏன்?

- காவிரிப் பிரச்சனை
-பெரியாறு அணைப் பிரச்சனை
- மேற்கு நதி நீரைக் கிழக்கே திருப்பும் பிரச்சனை
- தமிழக எல்லைப் பகுதிகளை மீட்கும் பிரச்சனை
- தமிழ் பயிற்சி மொழி, ஆட்சி மொழி, வழிபாட்டு மொழி, நீதிமன்ற மொழி
ஆக்கும் பிரச்சனை
- தமிழன் கால்வாய் பிரச்சனை
- இந்தித் திணிப்பு எதிர்ப்புப் பிரச்சனை
- தமிழ்நாட்டுக்குத் தன்னுரிமை பெறப் போராடும் பிரச்சனை
- தமிழ்நாட்டில் வந்தேறிகளின் சுரண்டலைத் தடுக்கும் பிரச்சனை
- தமிழீழ மக்களுக்கு உதவும் பிரச்சனை
-போன்ற பல முக்கிய பிரச்சனைகளில் கூட, தமிழ்நாட்டுத் தலைவர்களிடையே ஒருமித்த கருத்தும், ஒற்றுமையும்ஏற்படாமல் போனது மட்டும் எதிரும் புதிருமாகச் செல்படுவது தமிழினத்தின் வளர்ச்சியை, ஏற்றத்தைப் பெரியஅளவில் பாதித்துவிட்டது.

வங்காளிகளைப் பார்த்த பிறகாவது தமிழர் தலைவர்களுக்கு விழிகள் திறக்குமா?

-தென் செய்தி

படைப்புகளை அனுப்ப:

கவிதை, கட்டுரை, சிறுகதை என படைப்பிலக்கியத்தின் எந்தக் கூறுகளிலும் உங்களதுஆக்கங்களை அனுப்பலாம். அனுப்ப வேண்டிய மின்னஞ்சல் முகவரி: [email protected]

படைப்புகளை அனுப்பும்போது, நீங்கள் எந்த எழுத்துருவை பயன்படுத்தியுள்ளீர்கள் என்பதை அறியத் தரவும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X