For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
Just In
Oneindia App Download

ஜீவா எனும் குறிஞ்சிப்பூ

By Staff
Google Oneindia Tamil News

தினமணியில் இரா.நாறும்பூநாதன் எழுதியுள்ள கட்டுரை:

ஜீவா உங்களுக்கு என்ன சொத்து இருக்கும்?

காரைக்குடி வந்த தேச பிதா காந்திஜி, ராஜாஜியை அழைத்துக் கொண்டு, சிராவயலில் இருந்து காந்தி ஆசிரமத்தைநடத்திக் கொண்டிருந்த 20 வயது இளைஞன் ஜீவாவைப் பார்க்கச் சென்ற போது கேட்ட கேள்வி இது.

சொத்தா..? அது கோடிக்கணக்கில் உள்ளது என்று சிரித்தார் ஜீவா.

புரியும்படி சொல்லுங்கள் என்றார் காந்திஜி.

இந்தியாதான் எனது சொத்து என்று கூறினார் ஜீவா. இல்லை ஜீவா! நீங்கள் தான் இந்தியாவின் சொத்து எனநெஞ்சாரப் போராட்டினார் காந்திஜி.

நாடாளுமன்றத் தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களின் சொத்து விவரங்கள் தாக்கல் செய்யப்படும்போது,செய்தித்தாள்களைப் படிக்கும் இளைஞர்கள் ஆவேசப்படுகிறார்கள். சாதாரணப் பொதுமக்கள் பொருமுகிறார்கள்.அரசியலே சாக்கடை என்று வியாக்யானம் செய்கிறார்கள்.

இந்தியாவின் சொத்து என்று காந்தியடிகளால் புகழப்பட்ட ஜீவாவும் இந்திய அரசியல்வாதிகளில் ஒருவர் தான்.சென்னை வீதியில் கையில் ஒரு துணிப்பையுடன் வேகவேகமாய் நடந்து செல்லும் ஜீவாவைப் பார்த்து எதிரேவந்த நண்பர் கேட்டார். தோழர் ஜீவா, ஏன் நடந்து செல்கிறீர்கள்?

பஸ்ஸில் செல்வதற்கு காசில்லை. அதான் நடந்து செல்கிறேன் என்றார் ஜீவா. நண்பர் விடவில்லை. கையிலேஎன்ன வைத்திருக்கிறீர்கள்?

அதுவா? தோழர்கள் கொடுத்த கட்சி நிதி. கட்சி அலுவலகத்திற்கு கொண்டு போகிறேன் என்றார் ஜீவா.பஸ்ஸிற்குத் தேவையான காசை அதிலிருந்து எடுத்துக் கொள்ள வேண்டியது தானே? என்றார் நண்பர்.

கட்சி நிதி என்று தோழர்கள் தந்த பண முடிப்பிலிருந்து ஒரு சல்லிக்காசு எடுத்தால் கூட அது பெரிய குற்றம்.அந்தக் கணக்கை அப்படியே கட்சி அலுவலகத்தில் ஒப்படைப்பது தானே சரி என நடந்தபடியே கூறினார் ஜீவா.

உதிரம் சிந்தித் தந்த தொழிலாளர்களின் நிதியை, சொந்த உபயோகத்திற்காக சல்லிக்காசு எடுக்கத் துணியாதஜீவானந்தம் போன்றோர்கள் எதிர்கட்சித் தலைவராக விளங்கிய பெருமை தமிழகத்திற்கு உண்டு.

கம்பராமாயணத்திலிருந்தும், திருக்குறளிலிருந்தும் மேற்கோள் காட்டி அற்புதமாய் பேசக்கூடிய ஆற்றல் பெற்றவர்தோழர் ஜீவா. 1952 சட்டமன்றத் தேர்தலில் 64 இடங்களைக் கம்யூனிஸ்ட் கட்சி பெற்ற போது, வடசென்னைவேட்பாளராக வெற்றி பெற்ற ஜீவா சட்டமன்றத்தில் பேச ஆரம்பித்தால் வெளியே நிற்கும் உறுப்பினர்களும்உள்ளே வேகவேகமாய் வந்து அமர்வார்களாம்.

பயிற்று மொழி தமிழாய் இருக்க வேண்டும் என்று அப்போதே சட்டமன்றத்தில் முழங்கினார். 1956லேயேசென்னை மாகாண அரசு தமிழை ஆட்சி மொழியெனப் பிரகடனம் செய்தது. எல்லாம் ஏட்டிலேயே இருக்கிறதுஎன்பதுதான் மிகப்பெரிய சோகம்.

மாநில முதல் அமைச்சருக்கும், எதர்கட்சித் தலைவர்களுக்குமான உறவு அன்று எப்படிப்பட்டதாக இருந்தது?ஜீவாவின் வீட்டருகே உள்ள பள்ளி ஆண்டு விழாவிற்கு முதல்வர் காமராஜாரும், அன்றைய செங்கல்பட்டுமாவட்ட கலெக்டர் திரவியமும் போகும்போது ஜீவாவையும் அழைத்துச் செல்ல அவரது குடிசை வீட்டிற்கு காரில்சென்றனர்.

ஜீவா, அருகில் உள்ள பள்ளி ஆண்டு விழாவிற்கு வருகிறீர்களா? என்றபடியே உள்ளே நுழைந்தார் காமராஜர்.நான் வர வேண்டுமென்றால் கால் மணி நேரம் நீங்கள் காத்துக் கிடக்க வேண்டும் என்று உள்ளிருந்து குரல்கேட்டது.

உள்ளே ஜீவ, ஈர வேட்டியை உலர்த்தியபடி நின்று கொண்டிருந்தார். மாற்று வேட்டி கூட இல்லாமல், துவைத்தகதர் ஆடை காயும் வரை இடுப்பில் துண்டு கட்டிய நிலையில் நின்ற ஜீவாவைப் பார்த்து காமராஜர் திகைத்துப்போனார்.

ஜீவா, எவ்வளவு நாளைக்கு இதே குடிசையில் இருப்பது? என்று கோட்டார். பளிச்சென்று பதில் கூறினார் ஜீவா.மக்களெல்லாம் மாடி வீட்டில் வாழ்கிற போது, நானும் மாடி வீட்டில் வாழ்வேன்.

கோடிக்கணக்கில் தன் பெயரிலும், குடும்பத்தாரின் பெயரிலும் ஏனைய பினாமிகள் பெயர்களிலும் சொத்துசேர்க்கும் இன்ைறைய அரசியல்வாதிகள் எங்கே? ஜீவா எங்கே?

காந்திஜியின் கொள்கையால் ஈர்க்கப்பட்டு காங்கிரஸ் இயக்கத்திலும், பின்னர் பெரியாரின் சுமாரியாதைஇயக்கத்திலும், இறுதியில் பொதுவுடைமை இயக்கமே மனித குல விடுதலைக்கு மாற்று என பொதுவுடைமைஇயக்கத்திற்கு வந்தபோதும், இறுதிவரை கதராடையையே உடுத்தி வந்தார்.

அவரது அன்னையார் இறந்த போது ஈமக்கிரியை சடங்கிற்காக கதராடை கொடுக்காமல் மில் துணியைக்கொடுத்ததால், தாய்க்கு கொள்ளி வைக்க மறுத்து விட்டார் ஜீவா.

1946ல் அவரது தலைமறைவு வாழ்க்கையின் போது கலைவாணர் என்எஸ்.கிருஷ்ணன். நடிகர்கள் என்ஆர்.ராதா,டிகே.பகவதி மற்றும் குத்தூசி குருசாமி போன்றோர் அவருக்கு உதவி செய்தனர்.

தமிழகத்தின் பொதுவுடைமை இயக்க முன்னோடிகளில் ஒருவரான சிங்காரவேலரின் தொடர்பு கிட்டியபோது,பகத்சிங்கின் நான் ஏன் நாத்திகனானேன்? என்ற நூலை மொழிபெயர்ந்து வெளியிட்டதற்காக காரைக்குடியில்போலீஸ்ார் அவரது காலில் விலங்கிட்டு அழைத்துச் சென்று காவலில் வைத்தனர்.

குமரி மாவட்டத்தில் பூதப்பாண்டி என்ற சிற்றூரில் பிறந்த சொரிமுத்துப்பிள்ளை என்ற மூக்காண்டி,ஜீவானந்தாமாகப் பரிணமித்து, தமிழக அரசியலுக்கு ஒர் அர்த்தத்தைக் கொடுக்கும் வாழ்க்கை வாழ்ந்துள்ளார்.அவரது நூற்றாண்டு தொடங்கும் இந்த நாளில் (ஆகஸ்ட் 21, 2006) அவரது எளிய வாழ்க்கை, சோர்வுற்றஇளைஞர்களுக்கு நம்பிக்கையளிக்கட்டும்.

 
 
 
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Settings X